கிழக்கிலங்கை கிறிஸ்தவ வாழ்வு சமூகங்களின் வருடாந்த மகாநாடு
அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம விருந்தினராக திருமலை மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் அதிமேதகு ஜோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களும், பிரதம அதிதியாக சிவில் மேல் முறையீட்டு நீதிபதி பாலசிங்கம் சசிமகேந்திரன், சிறப்பு விருந்தினர்களாக மட்டக்களப்பு கல்முனை கரித்தாஸ் எகெட் நிறுவக இயக்குனர் அருட்பணி. பேராசிரியர். வு.ளு. சில்வெஸ்ரர், கல்முனை மறைக்கோட்ட குரு முதல்வர் அருட்பணி. ஜூட் ஜோண்சன் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.
கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டு புனித இஞ்ஞாசியாரின் இந்நிகழ்வு பிராந்திய கிறிஸ்தவ வாழ்வு சமூகத்தின் ஆன்மீக உதவியாளர் அருட்தந்தை ஆஞ்சலோ பொன்னையா அவர்களினால் வழிநடத்தப்பட்டது.
திருகோணமலை, மட்டக்களப்பு, கல்முனை ஆகிய மறைக்கோட்டங்களில் இருந்து சுமார் நூற்றுக்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள், திருமணமானோர் இம் மகாநாட்டில் கலந்து சிறப்பித்தனர்.
Comments
Post a Comment