கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவில் 15 கலைஞர்களுக்கு முதலமைச்சர் விருது!
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள்
அமைச்சின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா-2010 எதிர்வரும்
23, 24 ஆம் திகதிகளில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள உவர்மலை விவேகானந்தா
கல்லூரியில் வெகுவிமரிசையாக இடம்பெற உள்ளது.

நிறைவு நாள் வைபவத்தில் பிரதம
விருந்தினராக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து
கொள்கின்றார். கடந்த வருடம் சிறந்த இலக்கிய நூல்களை வெளியிட்ட கிழக்கு
மாகாண படைப்பாளிகள் ஏழு பேர் இலக்கிய நூல் பரிசு பெறுகின்றார்கள்.
சிறுவர் இலக்கியம் - ஜெனீரா ஹய்றுல் அமான் - சின்னக்குயில் பாட்டு
சிறுவர் இலக்கியம் - ச.அருளானந்தம் - அற்புதமான வானம்
சிறுவர் இலக்கியம் - முத்து இராதாகிருஷ்ணன் - பசுமைத் தாயகம்
சிறுவர் இலக்கியம் - கே.எம்.எம்.இக்பால் - தாமரையின் ஆட்டம்
சிறுகதை - மு.சுடாட்சரன் - மேட்டு நிலம்
கவிதை - யு.எம்.நபீல் - காலமில்லா காலம்
உயர்கல்வி - வே.குணரத்தினம் - அரசறிவியல் (பொது)
அதே போல் கிழக்கு மாகாணத்தின் சிறந்த கலைஞர்கள் 15 பேர் முதலமைச்சர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட உள்ளார்கள்.
அவர்களின் பெயர் விபரங்கள் வருமாறு:-
செ.விபுணசேகரம் ( நாட்டார் இசை), கனக மகேந்திரா( நாடகம் ), முகமது சுல்தான் அமானுல்லா ( சிறுகதை), தம்பு சிவசுப்பிரமணியம் ( ஆக்க இலக்கியம் ), செல்லவூர்க் கோபாலும் சீ.கோபாலசிங்கமும் ( இலக்கிய ஆய்வு), வாகரைவாணன் ( ஆக்க இலக்கியம் ), மூத்தம்பி அருளம்பலம் ( கிராமியக்கலை), தர்மாவும் வீரன் தர்மலிங்கமும் ( ஓவியம் ), நாகமுத்து நவநாயகமூர்த்தி ( வரலாற்று ஆய்வு) பொன் சிவானந்தன் ( கவிதை), மாறன் ஜெயின் உதுமாலெப்பை ஜெயின் ( சிறுவர் இலக்கியம் ), எம்.ஏ.அப்துல் றஸ்ஜாக் (சித்திரக் கலை), என்.ரி.எச்.என்.தௌபீக் ( சிறுவர் இலக்கியம்)
Comments
Post a Comment