அம்பாறையில் வரி செலுத்துதல் தொடர்பில் வர்த்தகர்களுக்கு விளக்கம் _


   

அம்பாறை மாவட்ட வரி மதிப்பீட்டு பிராந்திய அலுவலகத்தின் வரி செலுத்துதல் தொடர்பான செயலமர்வு சாய்ந்தமருது பெரடஸ் விடுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.

செயலமர்வுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். விசேடமாக கிழக்கு மாகாண சபை மேற்கொண்டு வருகின்ற வரி அறவீடு அம்பாறை மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிக் காணப்பட்டதாகக் குறிப்பிடப்படுகின்றது.

இது தொடர்பில் ஆராய்ந்த முதலமைச்சர், அம்பாறை மாவட்ட வர்த்தகர்களுக்கு வரி செலுத்துதல் தொடர்பான விளக்கங்கள் இன்மையே இதற்கு பிரதான காரணம் எனக்கண்டறிந்தார்.


எனவேதான் அவ்வர்த்தகர்களுக்கு வரி தொடர்பான விசேட கருத்தரங்கொன்றை நடத்த வேண்டும் எனக் கேட்டிருந்தார். அதனடிப்படையிலே இச்செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. அதில் பெருந்தொகையான வர்த்தகப் பெருமக்கள் கலந்து கொண்டனர்.

அவர்களுக்கு வரி தொடர்பான பூரண விளக்கங்கள் அதிகாரிகளால் அளிக்கப்பட்டது. அத்தோடு வரி செலுத்துதலின் முக்கியத்துவத்தை கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன் தெளிவுபடுத்தினார்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்