எம்.எச்.எம்.அஷ்ரபின் 10ஆவது நினைவு தினத்தில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபின் 10ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு எதிர்வரும் நம்பவர் 20ஆம் திகதி கொழும்பு கோல் பேஸ் ஹோட்டலில் இடம்பெறவுள்ள வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.
இந்நிகழ்வில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
மர்{ஹம் எம்.எச்.எம்.அஷ்ரபின் 10ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸால்  நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை, விவாதம் குழு நாடகப் போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கும் பரிசில்களும் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபத் தலைவர் மர்{ஹம் எம்.எச்.எம்.அஷ்ரபின் 10ஆவது நினைவு தினம் கடந்த செப்டம்பர் 16ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டது

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்