சாய்ந்தமருது கடற்கரையில் குண்டுகள் மீட்பு



கல்முனை சாய்ந்தமருது கடற்கரையில் வெடிபொருட்கள் இருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து கல்முனை பொலிஸார் குறித்த இடத்திற்குச் சென்று சோதனைகளை மேற்கொண்டுள்ளனர். இதன்போது கடற்கரை பகுதியில் இருந்து 5 மோட்டார் ஷெல்கள் மற்றும் ஒரு சாதாரண குண்டு என்பவற்றைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இந்தக் குண்டுகள் உடனடியாக செயலிழக்கச் செய்யப்பட்டதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படாத நிலையில் கல்முனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்