சட்டவிரோத ஆயுதகளை ஒப்படைக்கும் காலம் நீடிப்பு

மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் பிரிவில்  சட்டவிரோத  ஆயுதங்களை ஒப்படைக்கும் காலஎல்லை  இம்மாதம் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்முனை பொலிஸ் பிரிவு பிரதேசத்தில் புழக்கத்திலுள்ள சட்டவிரோத ஆயுதங்களை இம்மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் பள்ளிவாசல்கள் மற்றும் கோயில்களின் ஊடாக ஒப்படைக்குமாறு கல்முனை பொலிஸார் அறிவித்திருந்தனர்.
ஆனால், குறிப்பிட்ட காலப்பகுதியில் இப்பிரதேசத்திலிருந்து ஒரு ஆயுதம் மாத்திரமே ஒப்படைக்கப்பட்டிருந்தது. அதனால் இதற்கான காலக்கெடு இம்மாதம் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என கல்முனை பொலிஸ் மீண்டும் அறிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்