அடுத்த மார்ச்சில் உள்ளுhராட்சி மன்றங்களுக்கான தேர்தல்!



அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவிப்பு

Imageஎதிh;வரும் மார்ச் மாதமளவில் உள்ளுhராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.

ஆதற்கு முன்னா; திருத்தச் சட்டமூலம் மாகாண சபைகளின் அங்கீகாரத்துக்கு விடப்படும் என அவா; குறிப்பிட்டாh;.

வர்த்தமானி மூலம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட உள்ளுhராட்சி தேர்தல் திருத்தச் சட்டமூலம் மாகாண சபைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குள் அங்கீகாரம் பெறப்படும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரான அமைச்சா; கூறினாh;.

14 நாட்களுக்குள் இதனை மாகாண சபைகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்த அவர் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்பித்து அங்கீகாரம் பெறப்படும் என்றும் தெரிவித்தார்.

கொழும்பு மகாவலி கேந்திரத்தில் நேற்றுக் காலை இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினாh;.

இந்த புதிய உள்ளுhராட்சி தேர்தல் திருத்த சட்ட மூலம் தற்போது உள்ள வீதத்தை விட உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புக்கள் உண்டு.

பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அங்கீகாரம் பெறப்பட்ட பின்னர் அதனை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கமைய எல்லை நிர்ணய ஆணைக்குழு நியமிக்கப்படும். அவர்கள் மாவட்ட ரீதியில் சென்று தேர்தல் தொகுதிகளை மீள்நிர்ணயம் செய்வார்கள்.

அடுத்த வருடம் மார்ச் மாதமளவில் உள்ளுhராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை நடத்தவூம் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். 

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்