கல்முனை சேனைக்குடியிருப்பு கிட்டங்கி ஆற்றில்ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது
15ஆம் கொலணியை சேர்ந்தவரும் சேனைக்குடியிருப்பில் வசிப்பவருமான கோவிந்தபிள்ளை குணசேகரம் என்ற 46வயதுடைய நபரே சடலமாக மீட்க்கப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.
நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் நேற்று இரவு 15ஆம் கொலணியில் இருந்து துவிச்சக்கர வண்டியில் வந்து கொண்டிருந்த போது கிட்டங்கி ஆற்றுக்கட்டில் தடுமாறி ஆற்றில் வீழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் மது போதையில் வந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றதுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்க்கப்பட்ட சடலம் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Comments
Post a Comment