Posts

எமது பிரச்சினைக்கு தீர்வு பெற்று தராதவரை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுடன் கல்முனையில் பேச அனுமதிக்க மாட்டோம்

Image
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பூரண கட்டுப்பாட்டில் இயங்கும் கல்முனை மாநகர சபையினால் கல்முனை தமிழ் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு நியாயமான தீர்வு வழங்கும் வரை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு கல்முனையில் பேச்சுவார்த்தை நடத்த அனுமதிக்க மாட்டோம் என கல்முனை  தமிழ் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் அனுமதிக்கப் போவதில்லை என இன்று தெரிவித்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களுக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்களுக்கும் இடையில் இன்று நடைபெறவிருந்த சந்திப்பு இறுதிநேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது.  இன்று கல்முனைக்கு வரவிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பை இடை மறித்து எமக்கான தீர்வை பெற்றுத் தருமாறு வீதி மறியல் போராட்டம் செய்வதற்கு தமிழ் ஆட்டோ சாரதிகள் கல்முனை வங்கி சந்தியில் தயார் நிலையில் இருந்த போதும்  இதனை அறிந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் கல்முனை வழியாக பயணிக்காமல் திருக்கோவிலுக்கு செல்வதற்கு மட்டக்களப்பிலிருந்து மன்ட்டூர் வழியாக அம்பாறைக்கு சென்று அங்கிருந்து திருக்கோவிலை சென்றடைந்துள்ளனர் . காலையில் 10.00 மணி தொடக்கம் 3.00 மணிவரை  தமிழ் தேசிய கூட

ஹஜ்ஜுப் பெருநாளை ஒக்டோபர் 6ஆம் திகதி திங்கட்கிழமை கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Image
துல்ஹிஜ்ஜஹ்   மாதத்திற்கான தலைப்பிறை தென்படாத நிலையில் ஈதுல் அழ்ஹா புனித ஹஜ்ஜுப் பெருநாளை எதிர்வரும் ஒக்டோபர் 6ஆம் திகதி திங்கட்கிழமை கொண்டாட ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. துல்ஹிஜ்ஜஹ் மாத தலைப் பிறையைத் தீர்மானிப்பதற்கான மாநாடு நேற்று முன்தினம் மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது. பிறை தென்பட்டதற்கான ஆதாரபூர்வமான தகவல்கள் எதுவும் கிடைக்காத நிலையில் துல்கஃதாஹ் மாதத்தை 30 ஆகப் பூர்த்தி செய்து 26 வெள்ளிக்கிழமை மாலையுடன் புனித துல்ஹிஜ்ஜஹ் மாதத்தை ஆரம்பிக்க இதன் போது தீர்மானிக்கப்பட்டதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு பிரதி தலைவரும் பிரதம இமாமுமான மெளலவி முஹம்மத் தஸ்லீம் பாரி தெரிவித்தார்.

மருதமுனைக்கான பிரதேச சபை ஒன்றை ஸ்தாபித்தல்

Image
எம்.எம். பாஸில் மருதமுனை மருதமுனைக்கான பிரதேச சபை ஒன்றை ஸ்தாபித்தல் அறிமுகம் பின்வரும் இச்சிறு கட்டுரை மருதனைக்கான தனியான பிரதேச சபை ஒன்றை ஸ்தாபித்தல் தொடர்பான விவாதத்தை தொடக்கி வைக்கும் ஒரு முயற்சியாகும். அவ்வாறானதொரு சபை அமைக்கப்படுகின்றபோது ஏற்படக்கூடிய சாதக பாதகங்களையும் வலியுறுத்துகின்றது. உள்ளுர் மட்டத்தில் பொது மக்களின் சுகாதாரம், பொதுப் பயன்பாட்டுச் சேவைகள், பொதுத் தெருக்கள், மக்கள் நலன்புரி வசதிகள், பொழுதுபோக்கு என்பனவற்றை நிர்வகித்துப் பராமரிப்பதற்காகவே உள்ளுராட்சி நிறுவனங்கள் மக்கள் பிரதிநிதிகள் மன்றங்களாக உருவாக்கப்பட்டுள்ளன. தமது வருமானத்தில் ஒரு பகுதியையேனும் வரிப்பணமாக சேகரிப்பது உள்ளுராட்சி நிறுவனங்களின் விசேட பண்பாகும். சட்டரீதியான மட்டுப்பாடுகள் இரண்டாவது விசேட பண்பாகும். குறிப்பிட்ட உள்ளுராட்சி நிறுவனங்களுக்கு தமது அதிகார விடயப்பரப்பிற்கு ஏற்ற வகையில் செயற்படும் ஆற்றல் உண்டு. ஆனால், பிரதேசரீதியான தற்துணிவு  இரு வகையில் வரையறுக்கப்பட்டுள்ளது. முதலாவது, குறிப்பிட்டதொரு சேவையை தான் விரும்பியவாறு மேம்படுத்துவதற்குத் தேவையான சாதாரண அதிகாரங்கள் உள்ளுர

இளைஞர் யுவதிகளுக்கு சுய தொழில் பயிற்சியும் பரிசளிப்பும்

Image
அம்பாறை மாவட்ட கிராம அபிவிருத்தித் திணைக்களம் நடாத்திய பாடசாலை பை மற்றும் அலுவலகப் பை தயாரித்தல் நான்கு நாள் செயலமர்வில் கலந்து கொண்ட இளைஞர்  யுவதிகள் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டன.  அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக கலந்து கொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர்  யூ. எல். ஏ. அஸீஸ், கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களப் பணிப்பாளர் கே. அருந்தவராஜா, அம்பாறை மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எச். கலீலுல்ரஹ்மான் ஆகியோர் சான்றிதழ் வழங்கி வைத்தனர். 

லெடர் ஒப் கோப் அமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினம் தொடர்பான ஊர்வலமும் நிகழ்வுகளும்

Image
(யு.எம்.இஸ்ஹாக் ) லெடர்  ஒப் கோப் அமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச சிறுவர்  மற்றும் முதியோர் தினம் தொடர்பான ஊர்வலமும் நிகழ்வுகளும் சர்வதேச சிறுவர்  மற்றும் முதியோர்  தினத்தை கொண்டாடும் முகாமாக லெடர் ஒப் கோப் அமைப்பின் ஏற்பாட்டில் களுவாஞ்சிகுடி நாகபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அமைப்பின் வளாகத்தில் முகாமையாளர்  திருமதி.ரஞ்சினி மதிதரன் தலைமையில் எதிர் வரும் 2014.10.01 ஆம் திகதி காலை சிறுவார் தின ஊர்வலங்களுடன் ஆரம்பமாகி கலை நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. அன்றைய நாள் உத்தியோகபூர்வமாக ஊர்வல நிகழ்வுகள் மகிழூர்முனை சக்தி வித்தியாலயம், மகிழூர் சரஸ்வதி வித்தியாலயம் மற்றும் கண்ணகிபுரம் விநாயகர்  வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் இருந்து ஆரம்பமாகி பிரதான வீதியின் ஊடாக லெடர்  ஒப் கோப் அமைப்பின் வளநிலையத்தை வந்தடைந்து மேடை நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர்  கலாநிதி.எம்.கோபாலரெத்தினம் மற்றும் களுவாஞ்சிக்குடி வலயக்கல்விப் பணிப்பாளர்  திருமதி.என்.புள்ளநாயகம் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசை அரசுபுறக்கணித்ததால் எம்மை நாடுகின்றனர் -தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சி உறுப்பினர்கள்

Image
நாளை கல்முனையில் இடம் பெறவுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்  மற்றும் தமிழ் தேசிய கூட்டமைக்கும் இடையிலான சந்திப்பில் தமிழரசுக் கட்சி சார்ந்த உறுப்பினர்களை தவிர மற்றைய கட்சி அங்கத்தவர்கள் கலந்து கொள்ளமாட்டார்கள் என நம்பகமாக அறிய முடிகின்றது. தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சி உறுப்பினர்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை விரும்பவில்லை என அறிய முடிகின்றது . இதனால்  தமிழரசுக் கட்சிக்கும் மற்றைய கட்சி உறுப்பினர்களுக் குமிடையே குழப்ப நிலை தோன்றியுள்ளதாக அறிவிக்கப் படுகின்றது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசை அரசு புறக்கணித்ததன் பின்னர் எம்மை நாடுவதாகவும்  இதனை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாதெனவும்  அவர்கள் தெரிவித்துள்ளனர் . இந்த குழப்பநிலை காரணமாக நாளை நடை பெறவுள்ள சந்திப்பு பிற்  போடப்படலாமென எதிர்பார்க்கப் படுகின்றது . 

முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமைகள் நாளை கல்முனை மாநகரில் முக்கிய சந்திப்பு

Image
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிர ஸிற்கும்  தமிழ்த் தேசியக் கூட்டமைப் புக்குமிடையிலான முக்கிய சந்திப்பு  ஒன்று  நாளை சனிக்கிழமை கல்முனை மாநகர சபை மேயர் அலுவலகத்தில் இடம்பெறவிருக்கின்றது. முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் கட்சித் தலைவரும் ,  அமைச்சருமான ரவூப் ஹக்கீம் , செயலாளர் நாயகம் எம்.ரீ.ஹஸனலி ,  பிரதி செயலாளரும் ,  கல்முனை மாநகர மேயருமான சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் ,  சிரேஷ்ட பிரதித் தலைவரும் ,  கல்முனை மாநகர உறுப்பினருமான ஏ.எல்.மஜீத் ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளனர். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்பில் ,  கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் ,  தமிழரசுக்கட்சியின் புதிய தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா ,  கூட்மைப்பின் பேச்சாளரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் ,  நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ,  ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகம ஹென்றி மகேந்திரன் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

சிரேஸ்ட ஊடகவியலாளர் முசம்மில் மாத்தையா காலமானார்

Image
யு.எம்.இஸ்ஹாக் மூத்த ஊடகவியலாளரும்  ஓய்வு  பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளருமான  கலா பூஷணம்  அல் -ஹாஜ் அலியார் முசம்மில்  இன்று  கொழும்பில் காலமானார் . 1942.11.18 ஆந்  திகதி பிறந்த இவர்  சாய்ந்தமருது  அலியார் கண்காணி -முக்குலுத்தும்மா  தம்பதிகளின் புதல்வராவார் . நாளை தனது மனைவியுடன் புனித ஹஜ் கடமைக்காக மக்கா செல்ல கொழும்பில் தங்கியிருந்த போதே  டெல்மன் வைத்தியசாலையில் மரணமானார். இவரது மரண செய்தி கேட்டு  அம்பாறை மாவட்ட  ஊடகவியலாளர் சம்மேளனம் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளது 

ஊடகவியலாளர் கௌரவத்திற்கு பங்கமேற்பட இடமளியேன் கல்முனை மேயர் தெரிவிப்பு

Image
"கல்முனை மாநகர சபையின் மாதாந்தக் கூட்டங்களுக்குச் செய்தி சேகரிக்க வரும் ஊடகவிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களது ஊடகச் சுதந்திரத்திற்கு எத்தகைய பாதிப்பு ஏற்பட நான் இடமளியேன்" - இவ்வாறு கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி எம். நிஸாம் காரியப்பர் உறுதிபடத் தெரிவித்தார்.  கல்முனை மாநகர சபையின் மாதாந்தக் கூட்டம் கடந்த புதன்கிழமை நடைபெற்ற போது கூட்டத்திற்கு தலைமை தாங்கிய மேயர் விசேட அறிவிப்பாக மேற்படி தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார். மேயர் நிஸாம் காரியப்பர் தொடர்ந்து கூறுகையில், இன்று ஊடகவியலாளர் சார்பிலும், உறுப்பினர் ஒருவர் சார்பிலும் இரு கடிதங்கள் எனக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன.  சபையின் அழைப்பின் பேரிலும், அழைப்பின்றி அனுமதி பெற்றும் சபை மாதாந்தக் கூட்டங்களுக்கு ஊடகவியலாளர்கள் வருகை தந்து கலந்து கொள்கின்றனர். இத்தகைய ஊடகவியலாளர்களின் ஊடகச் சுதந்திரத்திற்கும் அவர்களது நேர்மை தவறா நடுநிலைத் தன்மைக்கும் நாமே தீர்ப்பளிக்க வேண்டும்.  அதேவேளை இச்சபைக்கு வரும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களது ஊடகச் சுதந்திரம் என்பவற்றுக்கு எத்தகைய பாதிப்பு ஏற்படுவதற்க

கல்முனை உதவி அத்தியட்சகர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் குற்றச் செயல்களை தடுப்பதற்கான வழிமுறைகளை ஆராயும் கூட்டம்

Image
   கல்முனை உதவி அத்தியட்சகர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் இடம்பெறுகின்ற களவு, கொள்ளை, போலி நாணயத்தாள் பாவணை ஆகியவற்றை தடுப்பதற்கான வழிமுறைகளை ஆராயும் அரச, தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுடான உயர்மட்டக் கூட்டம் நேற்று (25) சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது. கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டவுள்யு.ஏ.கபார் தலைiiயில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பொலிஸ் நிலைய மக்கள் தொடர்பாடல் பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எல்.ஏ.வாஹிட் மற்றும் கல்முனை, சம்மாந்துறை, சவளக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரச, தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள், எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். தொழில்நுட்பத்துடன் கூடிய களவு, கொள்ளை நிகழ்வுகள் தற்போது நாட்டில இடம்பெறுகின்றன. இதில் அதிகமாக பாடசாலை மாணவர்கள் பொழுதுபோக்கிக்காக ஈடுபடுவதோடு ஏனையவர்களும் ஈடுபடுகின்றனர். இதற்கு காரணம் மாணவர்கள் மத்தியில் இன்று கணணி தொழில்நுட்ப அறிவு அதிகரித்துக் காணப்படுவதாகும். எனவே எமது பிரதேசத்திலுள்ள வங்கிகள் தங்க

மாற்றுத்திறனாளிகளையும் அவர் களுக்குசேவை புரிபவர்களையும் உள்வாங்கல்தொடர்பானஒருநாள் பயிற்சிக் கருத்தரங்கு

Image
(சுரேஸ்) “சமவசதி வாய்ப்புக்களை ஏற்படுத்துவதனுடான இலகுவில் பாதிப்புக்குள்ளாகக்கூடிய மக்களுக்கான நிலையான அபிவிருத்தியை நோக்கிய வறுமைக் குறைப்பு” எனும் செயற்திட்டத்தின் பிரகாரம் ஜரோப்பியஒ ன்றியம் மற்றும் கன்டிகப் இன்டர் நெசனல் நிறுவனங்களின் நிதியுதவியுடன் கமீட் அமைப்பு அமுல் பபடுத்தும் மூன்று வருட கால செயற்திட்டத்தின் கீழ் ஏறாவூர் பற்று வேள்ட் விசன் பிராந்தியஅபிவிருத்தித் திட்டப் பிரிவின்  சமூகஊக்குவிப்பாளர்களுக்கான மாற்றுத்திறனாளிகளையும் அவர்களுக்காக சேவை புரிபவர்களையும்  உள்வாங்கல்தொடர்பான ஒருநாள் பயிற்சிக் கருத்தரங்குமட்டக்களப்பு க்றீன்  கார்டின் தங்குமிடஒன்றுகூடல் மண்டபத்தில்க மீட் அமைப்பின் உள்வாங்கல் தொடர்பான திட்டஉத்தியோகத்தர் எஸ்.சக்தி தலைமையில் இன்று (24) நடைபெற்றது. இப்பயிற்சியின் ஏறாவூர் பற்று வேள்ட் விசன் பிராந்தியஅபிவிருத்தித் திட்டப்பிரிவின் சமூகஊக்குவிப்பாலார்கள் பலர்  கலந்துகொண்டடு வலதுகுறைந்தோர் என்றால் என்ன வலதுகுறைவின் வகைகள்,மொழியும் வலதுகுறைவும் ,தொடர்பாடல் மற்றும் உள்வாங்கல் போன்றவிடயங்கள் சம்மந்தமாகவும் அடையாளம் காணப்பட்டமாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரசெயற்

அம்பாறை சமுர்த்தி வங்கியொன்றில் ரூபா 75 ஆயிரம் நிதி மோசடி செய்த நான்கு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் .

Image
அம்பாறை மத்திய முகாம் பிரதேச சமுர்த்தி வங்கியொன்றில் ரூபா 75 ஆயிரம் நிதி மோசடி செய்த நான்கு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கல்முனை நீதவான் நீதிமன்றினால் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சமுர்த்தி வங்கியில் வேறு நபரின் பெயரில் மோசடியாக ரூபா 75 ஆயிரம் கடனாகப் பெற்று அதை செலுத்தாதையடுத்து அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையின் பின்னர் இம்மோசடி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த உத்தியோகத்தர்கள் நான்கு பேரும் கைது செய்யப்பட்டடு இன்று (24) புதன்கிழமை அம்பாறை குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கல்முனை நிதிமன்ற நீதிபதி ஏ.யூட்சன் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டபோது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 07ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாண அரசாங்க உத்தியோகத்தர்களின் 2015ஆம் ஆண்டிற்கான வருடாந்த இடமாற்றப் பட்டியல் வெளியானது

Image
கிழக்கு மாகாண அரசாங்க உத்தியோகத்தர்களின் 2015ஆம் ஆண்டிற்கான வருடாந்த இடமாற்றப் பட்டியல் கிழக்கு மாகாண நிருவாகத்திற்குப் பொறுப்பான பிரதிப் பிரதம செயலாளர் கலாமதி பத்மராஜா அவர்களினால் நேற்றைய தினம் (22.09.2014) nளியிடப்பட்டுள்ளது. இவ்விடமாற்றமானது 01.01.2015 ஆந் திகதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் இவ்விடமாற்றம் தொடர்பில் மேன்முறையீடுகளைப் பெற்றுக் கொள்ளும் கடைசித் திகதி 10.10.2014 எனவும், மேன்முறையீடுகள் தொடர்பான இறுதித் தீர்மானங்கள் அனைத்தும் 01.11.2014 ஆந் திகதிக்கு முன்னர் அறியத்தரப்படும் எனவும் கிழக்கு மாகாண நிருவாகத்திற்குப் பொறுப்பான பிரதிப் பிரதம செயலாளர் கலாமதி பத்மராஜா அவர்களினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி 2015ஆம் ஆண்டிற்கான வருடாந்த இடமாற்றப் பட்டியலை  http://www.ep.gov.lk  என்ற இணையதளத்தில் பார்வையிட முடியும்

பிரதியைமச்சர் ஹிஸ்புல்லாஹ் பற்றி 50 கவிஞர்களால் பாடப்பட்ட இலங்கையின் முதலாவது கவிதைத்தொகுதி ‘நதியைப்பாடும் நந்தவனங்கள்’

Image
ஈழத்து இலக்கிய உலகில் ஒரு புதுமை நிகழ்ந்திருக்கிறது…அதுதான் மாங்காய்த்தீவின் 50 பிரசித்தி பெற்ற கவிஞர்கள் இணைந்து ஒரு காத்திரமான கவிதை நூலை வெளியிட்டுள்ளனர்.அதுதான் ‘நதியைப்பாடும் நந்தவனங்கள்’ எனும் கவிதை நூலாகும்.. மூத்த முஸ்லிம் அரசியில் தலைமையும் 25 வருடங்களாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாக இருந்துவரும் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களின் 50தாவது அகவையை ஒட்டி 50 கவிஞர்கள் இணைந்து இக்கவிதை தொகுதியை வெளியீடு செய்துளளனர். மூத்த ஊடகவியலாளரும் சாஹித்திய மண்டல விருது பெற்ற கவிஞருமான ரீ.எல்.ஜவ்பர்கான் இதனை தொகுத்துள்ளார்.கிழக்குமண் பதிப்பகம் இதனை வெளியீடு செய்துள்ளது.அதன் வெளியீட்டு விழா எதிர்வரும் வெள்ளிக்கிழம (26.9.2014) அன்று காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் தென்கிழக்கு பல்கலைகழக துணைவேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் தலைமையில் நடைபெறவுள்ளது. தென்னிந்திய கவிஞரும் இலக்கியவாதியுமான பேராசிரியர், முனைவா, கவிமாமணி தி.மு.அப்துல்காதர் அவர்கள் விசேட  வருகையாளராக கலந்து கொள்ளவுள்ளார்.அமைச்சர்கள், அரசியல், இலக்கிய பிரமுகர்கள் என பலரும் இவ்விராவில் இணையவு

ஊவா மாகாணத்தில் கிடைக்கவிருந்த இரு முஸ்லிம் பிரதிநிதித்துவத்துக்கு ஹக்கீம் -றிசாத் கூட்டணி ஆப்பு!

Image
கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் குற்றச்சாட்டு (திருமலை அஹ்மத்) ஊவா மாகாண சபையில் இரு முஸ்லிம் பிரதிநிதித்துவம் கிடைப்பதற்கு சாத்தியம் இருந்த போதிலும் அமைச்சர்களான ஹக்கீம் - றிசாத் கூட்டணி அதனை இல்லாமல் செய்து விட்டது என கிழக்கு மாகாணசபையின் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் குற்றஞ்சாட்டியூள்ளார் ஊவா மாகாணசபை தேர்தல் முடிவூகள் குறித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது: ஊவா மHகாண முஸ்லிம் மக்கள் தங்களுக்கான பிரதிநிதித்துவத்தைப் பெறக்கூடிய உச்சக்கட்ட சந்தர்ப்பமாக மாகாணசபைத் தேர்தலே காணப்படுகின்றது. எனவே நடைபெற்ற இத்தேர்தலில் தங்களுக்கான ஒரு பிரதிநிதித்துவத்தைப் பெற்று விட வேண்டும் என்ற ஆதங்கத்துடன் அம்மக்கள் இருந்தனர் எனினும் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் - றிசாத் பதியூத்தீன் கூட்டணி வாக்குளைப் பிரித்து அதனை இல்லாமல் செய்து விட்டது. இந்த அரசாங்கம் முற்றிலும் முஸ்லிம்களுக்கு எதிரான அரசாங்கம் என்பது கடந்த கால சம்பவங்கள் மூலம் முஸ்லிம்களின் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது. அரசா

மாற்றுத்திறனாளிகளின் தொழில் முக்கியத்துவம் தொடர்பானவிழிப்புர்ணவூட்டல் நிகழ்வு

Image
ஜரோப்பியஒன்றியம் மற்றும் கன்டிகப் இன்ரர்நெசனல் நிறுவனங்களின் நிதியுதவியுடன் கமீட் நிறுவனம் அமுல்ப்படுத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கான வாழ்வாதாரதிட்டத்தின் ஒருபகுதியானதொழில் முக்கியத்துவம் தொடர்பானவி ழிப்புணர்வூட்டல் நிகழ்வு கமீட் அமைப்பின் திட்ட வெளிக்கள உத்தியோகத்தர்  எம்.ஜெயகுமார் தலைமையில் நேற்று முன்தினம் செங்கலடி பிரதேச செயலாளர்   பிரிவிற்குட்பட்ட வேப்பவெட்டுவான் நூலகத்திலும் ஜயங்கேணிவள நிலையத்திலும்  நடைபெற்றது. இதன் போது அப்பிரதேசத்திற்குட்பட்ட யுத்தத்தினாலும் இயற்கையாலும் வலதுகுறைந்த மாற்றுத்திறணாளிகளும் அவா;களது குடும்பத்தினா;களும் பலர்  கலந்துகொண்டதுடன் அவ;ர்ளுக்கான தொழில் தொடர்பான உள்நாட்டு மற்றும் சா;வதேச சட்டங்கள் சம்மந்தமாகவும் அனுவப் பகிர;வும் நடைபெற்றது அத்துடன் மாற்றுத்திறணாளிகளின் தொழில் முக்கியத்துவம் தொடர்பானவிழிப்புணர்வூட்டல் நாடகமும் அரங்கேற்றப்பட்டது. 

கல்முனை வலய உலக சமாதான தின நிகழ்வு

Image
கல்முனை கல்வி வலய உலக சமாதான தின நிகழ்வு நேற்றுத் திங்கட்கிழமை நிந்தவூர் அல் - மஸ்ஹர் பெண்கள் பாடசாலை கலாநிதி அஷ்ரப் மண்டபத்தில் நடைபெற்றது.  கல்முனை வலய சமாதானக் கல்வியதிகாரி எம்.ஏ.எம். றஸீன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கல்முனை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.ஏ.றகீம் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன் சமாதான தினம் தொடர்பான சிறப்புரையும் ஆற்றினார்.  நிகழ்வில் கல்வி அதிகாரிகள் பலர் உட்பட ஆசிரியர்கள், பாடசாலை தமிழ், முஸ்லிம் மாணவியர்கள் பெருந்தொகையில் கலந்துகொண்டனர். சமாதான தின போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவியர்களுக்குப் பரிசில்களும் வழங்கப்பட்டன. சமாதானம், பரஸ்பர இன செளஜன்யம் அற்றுப் போயுள்ள இக்கால கட்டத்தில் சமாதானத்தின் முக்கியத்துவம் உணர்ந்து செயற்படவேண்டுமென பிரதம அதிதி தமது சிறப்புரையில் கூறினார்.

கல்முனை வாகன விபத்தில் ஒருவர் பலி ஒருவர் படுகாயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி

Image
கல்முனையில் சற்று நேரத்துக்கு முன்னர் இடம் பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியாகி உள்ளார் இன்னுமொருவர் படுகாயத்துடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பலியானவரின் சடலம் கல்முனை அஸ்ரப் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதியே இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. விபத்தில் பலியானவர்   சாய்ந்தமருது பழைய வைத்தியசாலை வீதியை சேர்ந்த 60 வயதுடைய மீரா லெவ்வை அப்துல் ஹமீட் என்பவராவார்

நாட்டைவிட்டு வெளியேற ஏழு இந்தியர்களுக்கு கல்முனை நீதவான் உத்தரவு

Image
இந்தியாவில் இருந்து சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து கல்முனை பிரதேசத்தில் புடைவை வியாபாரத்தில் ஈடுபட்ட ஏழு இந்தியர்களையும் உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற வேண்டுமெனவும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட புடைவைகளை அரசுடமையாக்குமாறும் கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி அந்தோனி ஜுட்சன் உத்தரவிட்டுள்ளார். கல்முனை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றையடுத்து கல்முனை, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நற்பிட்டிமுனை பிரதேசத்தில் வைத்து கடந்த சனிக்கிழமை, வீடு வீடாக புடைவை வியாபாரத்தில் ஈடுபட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏழு பேரை கல்முனை பொலிஸார் கைது செய்து விசாரணைக்குட்படுத்தியதுடன், அவர்களிடமிருந்த புடைவைகளையும் கைப்பற்றினர். இவர்களை கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி அந்தோனி ஜுட்சன் முன்னிலையில் நேற்று (22) ஆஜர் படுத்தியபோது இவர்களிடமிருந்து வியாபார நோக்கத்துடன் கொண்டு வரப்பட்ட புடைவைகள் மற்றும் துணிமணிகளை பறிமுதல் செய்து அரசுடமையாக்குமாறும், உடனடியாக இவர்கள் நாட்டை விட்டு வெளியேறவேண்டும் எனவும் நீதிபதி தீர்ப்பளித்தார்.

மக்களின் தேவைக்கே செஸ்டோ அமைப்பின் சேவை

Image
கல்முனை ஸாஹிராக் கல்லூhயில் 1999ம் கல்வி கற்ற பழைய மாணவர்களால் உருவாக்கப்பட்ட செஸ்டோ அமைப்பினால் கொள்வனவு செய்யப்பட்ட ஜனாஸா அம்பியுலன்ஸ் வாகனத்தை பராமரித்தல் மற்றும் அதனை வெள்ளோட்டம் செய்வது பற்றி நன்கொடையாளர்களுடனான கலந்துரையாடல் பிஸ்மில்லாஹ் றெஸ்டூரன்டில் நேற்று (21) இடம்பெற்றது. செஸ்டோ அமைப்பின் தலைவரும், கல்முனை பிராந்திய மின் பொறியியலாளருமான எம்.ஆர்.எம்.பர்ஹான் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், வீதி அபிவிருத்தித் திணைக்கள அம்பாறை மாவட்ட பிரதம பொறியியலாளர் ஏ.எம்.றிஸ்வி, சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் என்.ஆரிப், செஸ்டோ அமைப்பின் செயலாளர் எம்.சீ.எம்.சீ.றிழா உள்ளிட்ட வர்த்தக பிரமுகர்கள், தனவந்தர்கள், செஸ்டோ அமைப்பின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர். ஜனாஸா அம்பியுலன்ஸ் வாகனத்தினை 18 இலட்சத்து 36 ஆயிரத்திற்கு கொள்வனவு செய்துள்ளதாகவும், அதனை மக்கள் சேவைக்கு எவ்வாறு பயன்படுத்துவது, ஆரம்பிப்பது மற்றும் ஏனைய தேவைப்பாடுகள் பற்றிய விரிவாக விளக்கத்தினை செஸ்டோ அமைப்பின் தலைவரும், கல்முனை பிராந்திய மின் பொ

தேசிய பாடசாலை மட்ட கிரிக்கட் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று மண்ணுக்கு பெருமை தேடி தந்த கல்முனை ஸாகிரா மாணவர்கள் பாராட்டுக்குரியவர்கள் ...ஹரீஸ் MP

Image
(யு .எம்.இஸ்ஹாக் ) தேசிய ரீதியில் பாடசாலை மட்டத்தில் நடைபெற்ற கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று பிறந்த  மண்ணுக்கு பெருமை சேர்த்த  கல்முனை ஸாகிரா மாணவர்கள் போற்றி பாராட்டப்படக் கூடியவர்கள் என பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு தலைவருமான  எச்.எம்.எம்.ஹரீஸ்  தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். வெற்றி பெற்று சாதணைபுரிந்த மாணவர்களை வாழ்த்தி இன்று(22) திங்கள்கிழமை பாடசாலையின் அதிபர்  பீ.எம்.எம்.பதுருதீனுக்கு  அனுப்பி வைத்துள்ள இவ்வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. கல்முனை ஸாகிரா கல்லூரி  பரீட்சை  அடைவு மட்டங்களில் மாத்திரமின்றி கல்விக்குப் புறம்பான விளையாட்டு  மற்றும் போட்டிகளில்  பல சாதனைகளைப் படைத்த படைசாலையாகும் . கல்வித்துறையில் பல துறைசார்ந்த கல்விமான்களை  உருவாக்கி  கல்முனை மண்ணுக்கு பெருமை கண்டுள்ள ஸாகிராக் கல்லூரி பல  துறைகளிலும்  பல சாதனையாளர்களை உருவாக்கியுள்ளது. அந்தவகையில், ஸ்ரீலங்கா கிரிக்கட் சபை மற்றும் அகில இலங்கை பாடசாலைக் கிரிக்கட் சம்மேளனம் ஆகியன இணைந்து யாழ்ப்பாணத்தில் நடத்திய அகில இலங

அகில இலங்கை கிறிக்கட் சம்பியன்களான கல்முனை ஸாஹிரா அணி வீரர்களுக்கு மகத்தான வரவேற்பு

Image
கல்முனை நியூஸ் இணையதளமும்  வாழ்த்துகிறது  ஸ்ரீலங்கா கிறிக்கட் மற்றும் பாடசாலைகள் கிறிக்கட் சம்மேளனம் ஆகியன இணைந்து ஒழுங்கு செய்திருந்த அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கடினபந்து 50 ஓவர்கள்  மட்டுப்படுத்தப்பட்ட கிறிக்கட் சுற்றுப் போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியை இறுதிப் போட்டியில் 4 விக்கட்டுக்களினால் வெற்றிகொண்டு அகில இலங்கை சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்ட கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி கிறிக்கட் அணியினருக்கும் அதன் பயிற்சியாளர் உடற்கல்வித்துறை ஆசிரியர் அலியார் பைஸருக்கும் இன்று மருதமுனை முதல் மாளிகைக்காடு வரை பெரும் வரவேற்பளிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் இருந்து வருகை தந்த கல்லூரி கிறிக்கட் அணியினரை கல்லூரி முதல்வர் பீ.எம்.எம்.பதுறுதீன் உள்ளிட்ட உதவி அதிபர் ஏ.எச்.ஏ.அமீன் மற்றும் உயர்தர தொழில்நுட்பப்பிரிவு பகுதித் தலைவர் ஏ.ஆதம்பாவா , 7 ஆம் ஆண்டு பகுதித்தலைவர் எம்.ஐ.எம்.அஸ்ஹர் , ஆசிரியர்களான ஐ.எம்.உவைஸ் , எம்.ஏ. ஹக்கீம் , எம்.சப்ரான் , எம்.ரீ.அமீர் அலி , ஏ.எம்.அன்சார் ஆகியோர் பெரியநீலாவணை சந்தியில் மாலையிட்டு வரவேற்று பாண்ட் வாத்தியம் முழங்க , பட்டாசு வெடிச் சத்தம

சாய்ந்தமருது விதாதா வள நிலையத்தில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

Image
மஹிந்த சிந்தனை கீழ் கிராமத்திற்கு தொழில்நுட்பம் வேலைத்திட்டத்தின் கீழ் தொழில்நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி அமைச்சினால் விதாதா வள நிலையங்கள் உருவாக்கப்பட்டு அதனூடாக இளைஞர் யுவதிகளுக்கு கணணி கற்கை நெறிகள் நடாத்தப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குட்பட்ட விதாதா வள நிலையத்தில் கணணி கற்கை நெறிகளை பூர்த்தி செய்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இன்று இடம்பெற்றது. சாய்ந்தமருது விதாதா வள நிலையத்தின் பொறுப்பாளரும் விஞ்ஞான தொழில்நுட்ப உத்தியோகத்தருமான எம்.எம்.சாக்கீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், விசேட அதிதிகளாக கணக்காளர் எம்.எம்.உசைனா, உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஏ.மஜீத், கௌரவ அதிதிகளாக நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம்.உதுமாலெப்பை, திவிநெகும தலைமைக் காரியாலய முகாமையாளர் ஏ.சீ.ஏ.நஜீம், திவிநெகும திட்ட முகாமையாளர் எம்.எஸ்.மனாஸ், திவிநெகும சமுதாய வங்கி முகாமையாளர் ஏ.ஆர்.எம்.பர்ஹான் உள்ளிட்ட காரியாலய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்