கிழக்கு மாகாண அரசாங்க உத்தியோகத்தர்களின் 2015ஆம் ஆண்டிற்கான வருடாந்த இடமாற்றப் பட்டியல் வெளியானது
கிழக்கு மாகாண அரசாங்க உத்தியோகத்தர்களின் 2015ஆம் ஆண்டிற்கான வருடாந்த இடமாற்றப் பட்டியல் கிழக்கு மாகாண நிருவாகத்திற்குப் பொறுப்பான பிரதிப் பிரதம செயலாளர் கலாமதி பத்மராஜா அவர்களினால் நேற்றைய தினம் (22.09.2014) nளியிடப்பட்டுள்ளது.
இவ்விடமாற்றமானது 01.01.2015 ஆந் திகதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் இவ்விடமாற்றம் தொடர்பில் மேன்முறையீடுகளைப் பெற்றுக் கொள்ளும் கடைசித் திகதி 10.10.2014 எனவும், மேன்முறையீடுகள் தொடர்பான இறுதித் தீர்மானங்கள் அனைத்தும் 01.11.2014 ஆந் திகதிக்கு முன்னர் அறியத்தரப்படும் எனவும் கிழக்கு மாகாண நிருவாகத்திற்குப் பொறுப்பான பிரதிப் பிரதம செயலாளர் கலாமதி பத்மராஜா அவர்களினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி 2015ஆம் ஆண்டிற்கான வருடாந்த இடமாற்றப் பட்டியலை http://www.ep.gov.lk என்ற இணையதளத்தில் பார்வையிட முடியும்
Comments
Post a Comment