இளைஞர் யுவதிகளுக்கு சுய தொழில் பயிற்சியும் பரிசளிப்பும்
அம்பாறை மாவட்ட கிராம அபிவிருத்தித் திணைக்களம் நடாத்திய பாடசாலை பை மற்றும் அலுவலகப் பை தயாரித்தல் நான்கு நாள் செயலமர்வில் கலந்து கொண்ட இளைஞர் யுவதிகள் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக கலந்து கொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ. எல். ஏ. அஸீஸ், கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களப் பணிப்பாளர் கே. அருந்தவராஜா, அம்பாறை மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எச். கலீலுல்ரஹ்மான் ஆகியோர் சான்றிதழ் வழங்கி வைத்தனர்.
Comments
Post a Comment