லெடர் ஒப் கோப் அமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினம் தொடர்பான ஊர்வலமும் நிகழ்வுகளும்

(யு.எம்.இஸ்ஹாக் )


லெடர்  ஒப் கோப் அமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச சிறுவர்  மற்றும் முதியோர் தினம் தொடர்பான ஊர்வலமும் நிகழ்வுகளும்
சர்வதேச சிறுவர்  மற்றும் முதியோர்  தினத்தை கொண்டாடும் முகாமாக லெடர் ஒப் கோப் அமைப்பின் ஏற்பாட்டில் களுவாஞ்சிகுடி நாகபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அமைப்பின் வளாகத்தில் முகாமையாளர்  திருமதி.ரஞ்சினி மதிதரன் தலைமையில் எதிர் வரும் 2014.10.01 ஆம் திகதி காலை சிறுவார் தின ஊர்வலங்களுடன் ஆரம்பமாகி கலை நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.
அன்றைய நாள் உத்தியோகபூர்வமாக ஊர்வல நிகழ்வுகள் மகிழூர்முனை சக்தி வித்தியாலயம், மகிழூர் சரஸ்வதி வித்தியாலயம் மற்றும் கண்ணகிபுரம் விநாயகர்  வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் இருந்து ஆரம்பமாகி பிரதான வீதியின் ஊடாக லெடர்  ஒப் கோப் அமைப்பின் வளநிலையத்தை வந்தடைந்து மேடை நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர்  கலாநிதி.எம்.கோபாலரெத்தினம் மற்றும் களுவாஞ்சிக்குடி வலயக்கல்விப் பணிப்பாளர்  திருமதி.என்.புள்ளநாயகம் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்