அகில இலங்கை கிறிக்கட் சம்பியன்களான கல்முனை ஸாஹிரா அணி வீரர்களுக்கு மகத்தான வரவேற்பு
கல்முனை நியூஸ் இணையதளமும்
வாழ்த்துகிறது
ஸ்ரீலங்கா கிறிக்கட் மற்றும் பாடசாலைகள் கிறிக்கட் சம்மேளனம் ஆகியன இணைந்து ஒழுங்கு செய்திருந்த அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கடினபந்து 50 ஓவர்கள்
மட்டுப்படுத்தப்பட்ட கிறிக்கட் சுற்றுப் போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியை இறுதிப் போட்டியில் 4 விக்கட்டுக்களினால் வெற்றிகொண்டு அகில இலங்கை சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்ட கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி கிறிக்கட் அணியினருக்கும் அதன் பயிற்சியாளர் உடற்கல்வித்துறை ஆசிரியர் அலியார் பைஸருக்கும் இன்று மருதமுனை முதல் மாளிகைக்காடு வரை பெரும் வரவேற்பளிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் இருந்து வருகை தந்த கல்லூரி கிறிக்கட் அணியினரை கல்லூரி முதல்வர் பீ.எம்.எம்.பதுறுதீன் உள்ளிட்ட உதவி அதிபர் ஏ.எச்.ஏ.அமீன் மற்றும் உயர்தர தொழில்நுட்பப்பிரிவு பகுதித் தலைவர் ஏ.ஆதம்பாவா , 7 ஆம் ஆண்டு பகுதித்தலைவர் எம்.ஐ.எம்.அஸ்ஹர் , ஆசிரியர்களான ஐ.எம்.உவைஸ் , எம்.ஏ. ஹக்கீம் , எம்.சப்ரான் , எம்.ரீ.அமீர் அலி , ஏ.எம்.அன்சார் ஆகியோர் பெரியநீலாவணை சந்தியில் மாலையிட்டு வரவேற்று பாண்ட் வாத்தியம் முழங்க , பட்டாசு வெடிச் சத்தம் வானைப் பிளக்க திறந்த வாகப் பவனி மூலம் பாண்டிருப்பு கல்முனை நகர் , கல்முனைக்குடி , சாய்ந்தமருது , மாளிகைக்காடு வழியாக கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டனர்.
Comments
Post a Comment