கல்முனை உதவி அத்தியட்சகர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் குற்றச் செயல்களை தடுப்பதற்கான வழிமுறைகளை ஆராயும் கூட்டம்

  
கல்முனை உதவி அத்தியட்சகர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் இடம்பெறுகின்ற களவு, கொள்ளை, போலி நாணயத்தாள் பாவணை ஆகியவற்றை தடுப்பதற்கான வழிமுறைகளை ஆராயும் அரச, தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுடான உயர்மட்டக் கூட்டம் நேற்று (25) சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.
கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டவுள்யு.ஏ.கபார் தலைiiயில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பொலிஸ் நிலைய மக்கள் தொடர்பாடல் பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எல்.ஏ.வாஹிட் மற்றும் கல்முனை, சம்மாந்துறை, சவளக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரச, தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள், எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
தொழில்நுட்பத்துடன் கூடிய களவு, கொள்ளை நிகழ்வுகள் தற்போது நாட்டில இடம்பெறுகின்றன. இதில் அதிகமாக பாடசாலை மாணவர்கள் பொழுதுபோக்கிக்காக ஈடுபடுவதோடு ஏனையவர்களும் ஈடுபடுகின்றனர். இதற்கு காரணம் மாணவர்கள் மத்தியில் இன்று கணணி தொழில்நுட்ப அறிவு அதிகரித்துக் காணப்படுவதாகும்.
எனவே எமது பிரதேசத்திலுள்ள வங்கிகள் தங்களது பாதுகாப்பினை உயர்தொழில்நுட்பம் கொண்ட சீ.சீ.டி.வி கெமராக்கள் மூலம் மேற்கொள்ளுமாறும், போலி நாணயத்தாள் விடயத்திலும் எச்சரிக்கையாக இருக்குமாறும் இதன்போது கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டவுள்யு.ஏ.கபார் கேட்டுக்கொண்டார்.



Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்