எமது பிரச்சினைக்கு தீர்வு பெற்று தராதவரை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுடன் கல்முனையில் பேச அனுமதிக்க மாட்டோம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பூரண கட்டுப்பாட்டில் இயங்கும் கல்முனை மாநகர சபையினால் கல்முனை தமிழ் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு நியாயமான தீர்வு வழங்கும் வரை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு கல்முனையில் பேச்சுவார்த்தை நடத்த அனுமதிக்க மாட்டோம் என கல்முனை  தமிழ் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் அனுமதிக்கப் போவதில்லை என இன்று தெரிவித்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களுக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்களுக்கும் இடையில் இன்று நடைபெறவிருந்த சந்திப்பு இறுதிநேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது. 

இன்று கல்முனைக்கு வரவிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பை இடை மறித்து எமக்கான தீர்வை பெற்றுத் தருமாறு வீதி மறியல் போராட்டம் செய்வதற்கு தமிழ் ஆட்டோ சாரதிகள் கல்முனை வங்கி சந்தியில் தயார் நிலையில் இருந்த போதும்  இதனை அறிந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் கல்முனை வழியாக பயணிக்காமல் திருக்கோவிலுக்கு செல்வதற்கு மட்டக்களப்பிலிருந்து மன்ட்டூர் வழியாக அம்பாறைக்கு சென்று அங்கிருந்து திருக்கோவிலை சென்றடைந்துள்ளனர் . காலையில் 10.00 மணி தொடக்கம் 3.00 மணிவரை  தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் வருகையை தமிழ் ஆட்டோ சங்கத்தினர் காத்திருந்தனர் . 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் திடீர் பாதை மாற்றத்தால் ஆட்டோ சங்கத்தினர் பெரும் ஏமாற்றத்துடன் களைந்து சென்றதுடன்  எமது பிரச்சினைக்கு தீர்வினை அவர்கள் பெற்று தரும் வரை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் பேச்சவார்த்தை நாடாத்த  கல்முனையில்  இடம் கொடுக்க மாட்டோம் என தெரிவித்தனர்.

இந்த செயற் பாட்டின் பின்னணியில் ஜனாதிபதியின் இணைப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஒருவர்  செயற்படுவதாக கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார். 

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்