பிரதியைமச்சர் ஹிஸ்புல்லாஹ் பற்றி 50 கவிஞர்களால் பாடப்பட்ட இலங்கையின் முதலாவது கவிதைத்தொகுதி ‘நதியைப்பாடும் நந்தவனங்கள்’

ஈழத்து இலக்கிய உலகில் ஒரு புதுமை நிகழ்ந்திருக்கிறது…அதுதான் மாங்காய்த்தீவின் 50 பிரசித்தி பெற்ற கவிஞர்கள் இணைந்து ஒரு காத்திரமான கவிதை நூலை வெளியிட்டுள்ளனர்.அதுதான் ‘நதியைப்பாடும் நந்தவனங்கள்’ எனும் கவிதை நூலாகும்..
மூத்த முஸ்லிம் அரசியில் தலைமையும் 25 வருடங்களாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாக இருந்துவரும் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களின் 50தாவது அகவையை ஒட்டி 50 கவிஞர்கள் இணைந்து இக்கவிதை தொகுதியை வெளியீடு செய்துளளனர்.
மூத்த ஊடகவியலாளரும் சாஹித்திய மண்டல விருது பெற்ற கவிஞருமான ரீ.எல்.ஜவ்பர்கான் இதனை தொகுத்துள்ளார்.கிழக்குமண் பதிப்பகம் இதனை வெளியீடு செய்துள்ளது.அதன் வெளியீட்டு விழா எதிர்வரும் வெள்ளிக்கிழம (26.9.2014) அன்று காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் தென்கிழக்கு பல்கலைகழக துணைவேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் தலைமையில் நடைபெறவுள்ளது.
தென்னிந்திய கவிஞரும் இலக்கியவாதியுமான பேராசிரியர், முனைவா, கவிமாமணி தி.மு.அப்துல்காதர் அவர்கள் விசேட  வருகையாளராக கலந்து கொள்ளவுள்ளார்.அமைச்சர்கள், அரசியல், இலக்கிய பிரமுகர்கள் என பலரும் இவ்விராவில் இணையவுள்ளனர்.நூலின் நயவுரைகளை கிழக்கு பல்கலைகழக சுவாமி விபுலாநந்தா அழகியற்கற்கைகள் நிறுவக பணிப்பாளர் கலாநிதி கே.பிரேம்குமார் தென்கிழக்கு பல்கலைகழக மொழித்துறைத்தலைவர் கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ் ஆகியோர் நிகழ்த்துகின்றனர்.
இந்நூலில் கீழ்வரும் கவிஞர்கள் கவிதைகளை யாத்துள்ளனர்.புலவர்மணி ஜின்னாஹ் ஷரிபுத்தீன்இகவிமணி அ. கௌரிதாசன்,லாபூஷணம்.ஆசுகவி அன்புடீன் ,சாஹித்யசூரி ரீ.எல். ஜவ்பர்கான்,கவிச்சுடர் அன்பு முகைதீன்,கவிஞர் நிலா தமிழின்தாசன்,கவிஞர். எஸ். ரபீக்,கவிஞர். ஏ.எம்.எம். அலி இடாக்டர். தாஸிம் அகமது,கவிஞர். செ. குணரத்தினம்,கவிஞர். இப்றாகீம் (நத்வி)இசெழியன் பேரின்பநாயகம,கவிஞர். மருதூர் ஜமால்தீன், ஒலுவில் அஸீஸ் எம். பாயிஸ்,தோப்பூர்சிராஜ்தீன்,கவிமணி. எம். நஜ்முல் குஸைன,தமிழ்மணி அன்புமணி,தாமரைச் செல்வி, கவிஞர். கலைவாதி கலீல்,கலாபூஷணம் காத்தான்குடி பாத்திமா, பாவரசு பதியத்தலாவ பாறூக்கலாபூஷணம். பாலமுனை பாறூக்இகவித்தாரகை எம்.எம். ஜனைதீன், கவிதாயினி கலைமகள் ஹிதாயா, கவிஞர். ஏறாவூர் அனலக்தர்,ஆரையூர் இளவல்இசம்மாந்துறை மசூறா,அபூமின்ஹாஜ், கலைமதி எம்.ஏ.சீ. றபாய்தீன், கவிஞர். சுஐப் எம். காசிம், இக்பால் அலி, முகைதீன் சாலி, எச்.எம். இக்பால்கான், ஏ.எல்.ஏ. ஜப்பார்,கலாஜோதி அ.மு. அப்துல் கஹ்ஹார், புஸல்லாவ இஸ்மாலிகா,கவிஞர். ஓடையூரான்,ஏ.எம்.எம். சித்திக், எம்.ஐ.எம். முஸ்தபா, ஏறாவூர். தாஹிர், புன்னகை வேந்தன, நஸீலா,தமிழ்த்தென்றல் அலி அக்பர, இல்மி அஹமட்லெப்பை,பாவலர் சாந்தி முஹியித்தின்,கலாஜோதி காத்தான்குடி பௌஸ, கிண்ணியா அமீர் அலி, கிண்ணியா ஜெனீரா தௌபீக, மூதூர் கலைமேகம்,கவிமணி நீலாபாலன் ஆகியோர் இந்நூலில் கவிதைகளை யாத்துள்ளமை விசேட  அம்சமாகும்.
குறித்த நூல் வெளியீட்டுவிழாவில் தென்னிந்திய பேராசிரியர் முனைவர் கவிமாமணி தி.மு அப்துல்காதர் தலைமையில் ‘நதியே…நீ பாடிக்கொண்டிரு..’எனும் தலைப்பில் கவியரங்கும் இ;டம்பெறவுள்ளது.
காப்பியக்கோ புலவர்மணி ஜின்னாஹ் செரிபுத்தீன் கவிஞர்களை அறிமுகம் செய்கிறார்.கவிஞர்களான ரீ.எல்.ஜவ்பர்கான், நீலாபாலன், அன்புடீன,அ.கௌரிதாசன், என்.நஜ்முல் குசைன், செ.குணரட்னம், எம்.எச்.ம்.புஹாரி, எஸ்.ரபீக, தமிழ்த்தென்றல் அலிஅக்பர், கலைவாதிகலீல் ,ஆகியோர் கவிமழை பொழியவுள்ளனர்.கவிஞர்களான சுஐப் எம்.காசீம் கவிதாயினி கலைமகள் ஹிதாயா ஆகியோர் வாழ்த்துக்கவிதை வாசிக்கவுள்ளனர்.நூலில் கவிதைபாடிய 50 கவிஞர்களும் பொற்கிழி மற்றும் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளமை விசேட  அம்சமாகும்.


இம்மாபெரும் இலக்கிய விழாவில் சகலரும் கலக்க ஏற்பாட்டாளர்கள் விரும்புகின்றனர்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்