மக்களின் தேவைக்கே செஸ்டோ அமைப்பின் சேவை
கல்முனை ஸாஹிராக் கல்லூhயில் 1999ம் கல்வி கற்ற பழைய மாணவர்களால் உருவாக்கப்பட்ட செஸ்டோ அமைப்பினால் கொள்வனவு செய்யப்பட்ட ஜனாஸா அம்பியுலன்ஸ் வாகனத்தை பராமரித்தல் மற்றும் அதனை வெள்ளோட்டம் செய்வது பற்றி நன்கொடையாளர்களுடனான கலந்துரையாடல் பிஸ்மில்லாஹ் றெஸ்டூரன்டில் நேற்று (21) இடம்பெற்றது.
செஸ்டோ அமைப்பின் தலைவரும், கல்முனை பிராந்திய மின் பொறியியலாளருமான எம்.ஆர்.எம்.பர்ஹான் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், வீதி அபிவிருத்தித் திணைக்கள அம்பாறை மாவட்ட பிரதம பொறியியலாளர் ஏ.எம்.றிஸ்வி, சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் என்.ஆரிப், செஸ்டோ அமைப்பின் செயலாளர் எம்.சீ.எம்.சீ.றிழா உள்ளிட்ட வர்த்தக பிரமுகர்கள், தனவந்தர்கள், செஸ்டோ அமைப்பின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஜனாஸா அம்பியுலன்ஸ் வாகனத்தினை 18 இலட்சத்து 36 ஆயிரத்திற்கு கொள்வனவு செய்துள்ளதாகவும், அதனை மக்கள் சேவைக்கு எவ்வாறு பயன்படுத்துவது, ஆரம்பிப்பது மற்றும் ஏனைய தேவைப்பாடுகள் பற்றிய விரிவாக விளக்கத்தினை செஸ்டோ அமைப்பின் தலைவரும், கல்முனை பிராந்திய மின் பொறியியலாளருமான எம்.ஆர்.எம்.பர்ஹான் இதன்போது விளக்கமளித்தார்.
Comments
Post a Comment