தேசிய பாடசாலை மட்ட கிரிக்கட் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று மண்ணுக்கு பெருமை தேடி தந்த கல்முனை ஸாகிரா மாணவர்கள் பாராட்டுக்குரியவர்கள் ...ஹரீஸ் MP

(யு .எம்.இஸ்ஹாக் )தேசிய ரீதியில் பாடசாலை மட்டத்தில் நடைபெற்ற கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று பிறந்த  மண்ணுக்கு பெருமை சேர்த்த  கல்முனை ஸாகிரா மாணவர்கள் போற்றி பாராட்டப்படக் கூடியவர்கள் என பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு தலைவருமான  எச்.எம்.எம்.ஹரீஸ்  தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
வெற்றி பெற்று சாதணைபுரிந்த மாணவர்களை வாழ்த்தி இன்று(22) திங்கள்கிழமை பாடசாலையின் அதிபர்  பீ.எம்.எம்.பதுருதீனுக்கு  அனுப்பி வைத்துள்ள இவ்வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.
கல்முனை ஸாகிரா கல்லூரி  பரீட்சை  அடைவு மட்டங்களில் மாத்திரமின்றி கல்விக்குப் புறம்பான விளையாட்டு  மற்றும் போட்டிகளில்  பல சாதனைகளைப் படைத்த படைசாலையாகும்
.
கல்வித்துறையில் பல துறைசார்ந்த கல்விமான்களை  உருவாக்கி  கல்முனை மண்ணுக்கு பெருமை கண்டுள்ள ஸாகிராக் கல்லூரி பல  துறைகளிலும்  பல சாதனையாளர்களை உருவாக்கியுள்ளது.

அந்தவகையில், ஸ்ரீலங்கா கிரிக்கட் சபை மற்றும் அகில இலங்கை பாடசாலைக் கிரிக்கட் சம்மேளனம் ஆகியன இணைந்து யாழ்ப்பாணத்தில் நடத்திய அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையில்  17 வயதுக்குட்பட்ட மாணவர்களுகான கடினபந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டியில் யாழ்;பாணம் மத்திய கல்லுரியை எதிர்கொண்டு வெற்றியீட்டி இச்சுற்றுப்போட்டியின் வெற்றியாளர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இம் மாணவர்களையும் அதற்காக உழைத்த அதிபர்,ஆசிரியர்களையும்  பாராட்டி வாழ்த்துகின்றேன்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்