சாய்ந்தமருது விதாதா வள நிலையத்தில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
மஹிந்த சிந்தனை கீழ் கிராமத்திற்கு தொழில்நுட்பம் வேலைத்திட்டத்தின் கீழ் தொழில்நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி அமைச்சினால் விதாதா வள நிலையங்கள் உருவாக்கப்பட்டு அதனூடாக இளைஞர் யுவதிகளுக்கு கணணி கற்கை நெறிகள் நடாத்தப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில் சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குட்பட்ட விதாதா வள நிலையத்தில் கணணி கற்கை நெறிகளை பூர்த்தி செய்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.
சாய்ந்தமருது விதாதா வள நிலையத்தின் பொறுப்பாளரும் விஞ்ஞான தொழில்நுட்ப உத்தியோகத்தருமான எம்.எம்.சாக்கீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், விசேட அதிதிகளாக கணக்காளர் எம்.எம்.உசைனா, உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஏ.மஜீத், கௌரவ அதிதிகளாக நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம்.உதுமாலெப்பை, திவிநெகும தலைமைக் காரியாலய முகாமையாளர் ஏ.சீ.ஏ.நஜீம், திவிநெகும திட்ட முகாமையாளர் எம்.எஸ்.மனாஸ், திவிநெகும சமுதாய வங்கி முகாமையாளர் ஏ.ஆர்.எம்.பர்ஹான் உள்ளிட்ட காரியாலய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது கணணி கற்கை நெறிகளை பூர்த்தி செய்த 70 மாணவ, மாணவிகளுக்கு அதிதிகளினால் சான்றிதழ் வழங்கப்பட்டதுடன் அதிதிகளும் கௌரவிக்கப்பட்டனர்.

Comments
Post a Comment