ஹஜ்ஜுப் பெருநாளை ஒக்டோபர் 6ஆம் திகதி திங்கட்கிழமை கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

துல்ஹிஜ்ஜஹ் மாதத்திற்கான தலைப்பிறை தென்படாத நிலையில் ஈதுல் அழ்ஹா புனித ஹஜ்ஜுப் பெருநாளை எதிர்வரும் ஒக்டோபர் 6ஆம் திகதி திங்கட்கிழமை கொண்டாட ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

துல்ஹிஜ்ஜஹ் மாத தலைப் பிறையைத் தீர்மானிப்பதற்கான மாநாடு நேற்று முன்தினம் மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.

பிறை தென்பட்டதற்கான ஆதாரபூர்வமான தகவல்கள் எதுவும் கிடைக்காத நிலையில் துல்கஃதாஹ் மாதத்தை 30 ஆகப் பூர்த்தி செய்து 26 வெள்ளிக்கிழமை மாலையுடன் புனித துல்ஹிஜ்ஜஹ் மாதத்தை ஆரம்பிக்க இதன் போது தீர்மானிக்கப்பட்டதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு பிரதி தலைவரும் பிரதம இமாமுமான மெளலவி முஹம்மத் தஸ்லீம் பாரி தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்