ஊடகவியலாளர் கௌரவத்திற்கு பங்கமேற்பட இடமளியேன் கல்முனை மேயர் தெரிவிப்பு

"கல்முனை மாநகர சபையின் மாதாந்தக் கூட்டங்களுக்குச் செய்தி சேகரிக்க வரும் ஊடகவிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களது ஊடகச் சுதந்திரத்திற்கு எத்தகைய பாதிப்பு ஏற்பட நான் இடமளியேன்" - இவ்வாறு கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி எம். நிஸாம் காரியப்பர் உறுதிபடத் தெரிவித்தார். 

கல்முனை மாநகர சபையின் மாதாந்தக் கூட்டம் கடந்த புதன்கிழமை நடைபெற்ற போது கூட்டத்திற்கு தலைமை தாங்கிய மேயர் விசேட அறிவிப்பாக மேற்படி தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார். மேயர் நிஸாம் காரியப்பர் தொடர்ந்து கூறுகையில், இன்று ஊடகவியலாளர் சார்பிலும், உறுப்பினர் ஒருவர் சார்பிலும் இரு கடிதங்கள் எனக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன. 

சபையின் அழைப்பின் பேரிலும், அழைப்பின்றி அனுமதி பெற்றும் சபை மாதாந்தக் கூட்டங்களுக்கு ஊடகவியலாளர்கள் வருகை தந்து கலந்து கொள்கின்றனர். இத்தகைய ஊடகவியலாளர்களின் ஊடகச் சுதந்திரத்திற்கும் அவர்களது நேர்மை தவறா நடுநிலைத் தன்மைக்கும் நாமே தீர்ப்பளிக்க வேண்டும். 
அதேவேளை இச்சபைக்கு வரும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களது ஊடகச் சுதந்திரம் என்பவற்றுக்கு எத்தகைய பாதிப்பு ஏற்படுவதற்கு நான் ஒருபோதும் இடமளியேன். 
இருந்தும் ஊடகவிலாளர்கள் இங்கு இடம்பெறுவனவற்றை திரிவுபடுத்தவோ, அல்லது உண்மைக்குப் புறம்பாக உறுப்பினர்களைப் பாதிக்கும் வகையிலோ செய்தி அறிக்கையிடல் இடம்பெறாவண்ணம் தம்பணிகளை முன்னெடுக்க வேண்டுமென்பதிலும் நான் கவனம் கொள்வேன். 
இதேவேளை உறுப்பினர்களைப் பாதிக்ககும் வகையில், உண்மைக்குப் புறம்பாக சபைக் கூட்டச் செய்திகள் வெளியானால் சம்பந்தப்பட்ட ஊடகங்களுக்கு மறுப்பறிக்கை ஒன்றை அனுப்பிவிட்டு, அதனை செயலாளரூடாக என் கவனத்திற்குக் கொண்டு வந்தால் மேற்கொண்டு நடவடிக்கைகளை நான் மேற்கொள்வேன். உறுப்பினர்களின் சிறப்புரிமைகளுக்குப் பங்கம் ஏற்படவும் நான் இடமளியேன். - என்றார். 

நன்றி-மலரும் .கொம் 

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்