நாட்டைவிட்டு வெளியேற ஏழு இந்தியர்களுக்கு கல்முனை நீதவான் உத்தரவு
இந்தியாவில் இருந்து சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து கல்முனை பிரதேசத்தில் புடைவை வியாபாரத்தில் ஈடுபட்ட ஏழு இந்தியர்களையும் உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற வேண்டுமெனவும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட புடைவைகளை அரசுடமையாக்குமாறும் கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி அந்தோனி ஜுட்சன் உத்தரவிட்டுள்ளார்.
கல்முனை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றையடுத்து கல்முனை, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நற்பிட்டிமுனை பிரதேசத்தில் வைத்து கடந்த சனிக்கிழமை, வீடு வீடாக புடைவை வியாபாரத்தில் ஈடுபட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏழு பேரை கல்முனை பொலிஸார் கைது செய்து விசாரணைக்குட்படுத்தியதுடன், அவர்களிடமிருந்த புடைவைகளையும் கைப்பற்றினர்.
இவர்களை கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி அந்தோனி ஜுட்சன் முன்னிலையில் நேற்று (22) ஆஜர் படுத்தியபோது இவர்களிடமிருந்து வியாபார நோக்கத்துடன் கொண்டு வரப்பட்ட புடைவைகள் மற்றும் துணிமணிகளை பறிமுதல் செய்து அரசுடமையாக்குமாறும், உடனடியாக இவர்கள் நாட்டை விட்டு வெளியேறவேண்டும் எனவும் நீதிபதி தீர்ப்பளித்தார்.
Comments
Post a Comment