மருதமுனைக்கான பிரதேச சபை ஒன்றை ஸ்தாபித்தல்

எம்.எம். பாஸில்
மருதமுனை



மருதமுனைக்கான பிரதேச சபை ஒன்றை ஸ்தாபித்தல்
அறிமுகம்
பின்வரும் இச்சிறு கட்டுரை மருதனைக்கான தனியான பிரதேச சபை ஒன்றை ஸ்தாபித்தல் தொடர்பான விவாதத்தை தொடக்கி வைக்கும் ஒரு முயற்சியாகும். அவ்வாறானதொரு சபை அமைக்கப்படுகின்றபோது ஏற்படக்கூடிய சாதக பாதகங்களையும் வலியுறுத்துகின்றது.

உள்ளுர் மட்டத்தில் பொது மக்களின் சுகாதாரம், பொதுப் பயன்பாட்டுச் சேவைகள், பொதுத் தெருக்கள், மக்கள் நலன்புரி வசதிகள், பொழுதுபோக்கு என்பனவற்றை நிர்வகித்துப் பராமரிப்பதற்காகவே உள்ளுராட்சி நிறுவனங்கள் மக்கள் பிரதிநிதிகள் மன்றங்களாக உருவாக்கப்பட்டுள்ளன. தமது வருமானத்தில் ஒரு பகுதியையேனும் வரிப்பணமாக சேகரிப்பது உள்ளுராட்சி நிறுவனங்களின் விசேட பண்பாகும். சட்டரீதியான மட்டுப்பாடுகள் இரண்டாவது விசேட பண்பாகும். குறிப்பிட்ட உள்ளுராட்சி நிறுவனங்களுக்கு தமது அதிகார விடயப்பரப்பிற்கு ஏற்ற வகையில் செயற்படும் ஆற்றல் உண்டு. ஆனால், பிரதேசரீதியான தற்துணிவு  இரு வகையில் வரையறுக்கப்பட்டுள்ளது. முதலாவது, குறிப்பிட்டதொரு சேவையை தான் விரும்பியவாறு மேம்படுத்துவதற்குத் தேவையான சாதாரண அதிகாரங்கள் உள்ளுராட்சி நிறுவனங்களுக்கு கிடையாது. வரையறுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கதுமான ஒரு சில சட்டவாக்க அதிகாரங்களே உள்ளுராட்சி நிறுவனங்களுக்கு உண்டு. இரண்டாவதாக அவை மத்திய அரசாங்கத்தால், அல்லது இரண்டாம் மட்ட அரசாங்கங்களால் நிர்வகிக்கப்படுகின்றன.
உலகத்தில், பல்வேறு நாடுகளில், பல்வகை மட்டங்களில்இ செயற்படுத்தப்படும் பல்வேறு பெயர்களிலான உள்ளுராட்சி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இன்றைய இலங்கையில் பின்வரும் உள்ளுராட்சி நிறுவனங்கள் அமுலில் உள்ளன.
1.   மாநகர சபைகள்
2.   நகர சபைகள்
3.   பிரதேச சபைகள்
நகரமயமாக்கல் மிக உயர் மட்டத்தில் நிலவும் பிரதேசங்களில் மாநகர சபைகள் அமைந்துள்ளன. நகரமயமாக்கல் குறைந்த பிரதேசங்களில் நகர சபைகள் உருவாக்கப்பட்டுள்ளன. கிராமியப் பிரதேசங்களில் பிரதேச சபைகள் அமைந்துள்ளன. சட்டபூர்வமான ஆள் எனக் கருதப்படுதல் இந்த உள்ளுராட்சி நிறுவனங்களின் விசேட பண்பாகும்.    
இந்தப் பின்னணியில் பல்லின சமூகங்கள் வாழும் நாடு என்றவகையில் இலங்கையில் தேர்தலானது மக்களின் உரிமைகளை வெளிக்காட்டும் களமாக அமைந்து விளங்குகின்றது.  தேர்தலானது, மக்கள் ஒரு கட்சியை ஆட்சியில் அமர்த்துவதற்கும் பிரிதொரு கட்சியை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்கும் சிறந்ததொரு சந்தர்ப்பமாக அமைவதனால் தேர்தல் வாக்குறுதிகள் முக்கிய பங்கு வகிக்கின்றது. அந்தவகையில், தேசிய கட்சிகள் மற்றும் இனத்துவ கட்சிகள் போன்றன தேர்தல் வாக்குறுதிகளை வழங்குவதும் மக்கள் ஏமாந்து வாக்களிப்பதும் கிழக்கு மாகாணத்தின் அரசியல் கலாசாரமாக வளர்ந்து வருகின்றது (முறையே மட்டக்களப்பு தொடக்கம் பொத்துவில் வரையான புகையிரத விஸ்தரிப்புஇ கல்முனை கரையோர மாவட்டம்). ஆனால் அவை இன்றும் முன்னெடுக்கப்படாமை குறிப்பிட்டுக் கூறக்கூடிய வெளிப்படையான யதார்த்தமாக உள்ளன. இதன்பிரகாரம் மருதமுனை பிரதேசத்தில் ஒரு பிரதேச சபையினை அமைப்பது தொடர்பான கருத்தாடல் தேர்தல் நெருங்குகின்ற வேளையிலான ஒரு வாக்குறுதியாக அமையுமா? இல்லையா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அதன்படி தற்போதைய கல்முனை மாநகர சபையின் எல்லைக்குள் ஒரு முக்கிய முஸ்லிம் கிராமமாக மருதமுனை அமைந்துள்ளது. கல்முனை பிரதேசம் அதன் புவியியல் அமைவிடம், பல்லின சமூகத்தின் பரம்பல் போன்ற விடயங்களில் பல சிக்கல் தன்மைகளை கொண்ட ஒரு பகுதியாக குறிப்பிட முடியூம். பெரும்பான்மை முஸ்லிம்களைக் கொண்ட இப்பிரதேசத்தில் சிறுபான்மையினராக வாழும் தமிழர்கள் தமக்கென தனியான பிரதேச செயலகம்இ பிரதேச சபை என்பன குறித்து கனவு  காண்கின்றனர். இவ்வாறான சிக்கல் நிலைகளுக்குள் நின்றுகொண்டே மருதமுனைக்கென தனியானதொரு பிரதேச சபையின் உருவாக்கம் குறித்து சிந்திக்க வேண்டி உள்ளது. எவ்வாறாயினும் கல்முனை மாநகர சபை துண்டாடப்பட்டே மருதமுனைக்கான தனியான பிரதேச சபை அமைக்கப்பட வேண்டும். உள்ளுராட்சிஇ மாகாண சபைகள் அமைச்சர்  இவ்வாறான புதிய சபை ஒன்றை அல்லது சபைகளை உருவாக்குவதற்கான அதிகாரத்தையும் ஆற்றலையும் கொண்டவராவர். ஆனால், அப்படியான ஒரு சபையின் உருவாக்கம் பல்வேறு தீமைகளையு ம் நன்மைகளையும் ஏற்படுத்தக்கூடியதாக அமையலாம். அவ்விடயங்கள் பின்வருமாறு சுருக்கமாக ஆராயப்படுகின்றன.   

பாதகங்கள்

புதிய சபையின் உருவாக்கம் கல்முனை மாநகர சபையின் அரசியல் பலத்தினை சிதைவூறச் செய்யூம்.
·      பிரதேச சபையின் எல்லைகளாக எவற்றினை வரையறுத்துக் கொள்வது என்ற கேள்வி எழும்புகின்றது.
·      மருதமுனைக்கான புதிய பிரதேச சபையின் உருவாக்கம் கல்முனைக்கான தமிழ் பிரதேச சபை மற்றும் பிரதேச செயலகங்களின் உருவாக்கம் தொடர்பான கேள்விகளை அதிகாpக்கச் செய்யும்.
·      மாநகர சபையின் பகுதியாக இருப்பதனால் ஏற்கனவே உள்ள அந்தஸ்து புதிய பிரதேச சபை உருவாக்கத்தின் மூலம் சிறுமைப்படுத்தப்படக் கூடும்.
·      மாநகர சபையோடு ஒப்பிடுகின்ற போது நிதி மூலங்களைக் கண்டறிவதில் பிரச்சினைகள் இருக்கின்றது.
·      பிரதேச சபைகளுக்குhpய அதிகாரங்களை நோக்குகின்ற போது சமுக, கலாசார மற்றும் பண்பாட்டு வளா;ச்சிகளில் மட்டுமே அபிவிருத்திகளை எட்டமுடியூம்.
·      பொதுவாக உள்ளுராட்சி மன்றங்கள் மத்திய மாகாண அரசுகளின் நேரடி முகவர்களாகச் செயற்படுவதிலிருந்து அம்மன்றங்களின் ஊடாகத்தான் பிரதேசத்தின் அபிவிருத்தியினை எட்டமுடியூம் என்று கூறுவது மிகவும் பொருத்தமான கருத்தன்று. குறிப்பாக இம்மன்றங்களினால் சுயமாகச் செயற்படக்கூடிய வாய்ப்பு இல்லை.
·      இலங்கை போன்ற குறைவிருத்தி பொருளாதாரம் உள்ள நாடுகளில் புதிய உள்ளுராட்சி மன்றங்களின் உருவாக்கம் மக்களின் சுமையினை அதிகாpக்கச் செய்வதற்கு வழிவிடத்தக்கது.
·      தொடர்ச்சியாக மாநகர சபையின் முக்கிய பொறுப்புக்கள் இப்பிரதேச உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வந்திருப்பதிலிருந்து புதியதொரு சபையின் உருவாக்கம் தேவைதானா என்ற கேள்வி எழுகின்றது.
·      உள்ளுராட்சி மன்றச் சட்டங்கள் முற்றுமுழுதாக மறுசீரமைக்கப்படாத ஒரு சூழ்நிலையில் இப் பிரதேச சபையின் உருவாக்கத்தினால் பொpய அடைவூகள் எதனையூம் எட்டமுடியாது.
·      அண்மைய உள்ளுராட்சி மன்றத் தேர்ல் திருத்தச் சட்டத்திற்கிணங்க மருதமுனைக்கான பிரதிநிதித்துவத்தினை உறுதிசெய்வதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உண்டு.
·      அரசியல் காரணங்களுக்காக சபை உருவாக்கம் இடம்பெறுகின்ற போது சமூகத்தில் மேலும் பிரச்சினைகளை உருவாக்குமே தவிர பிரச்சினைகளுக்கான தீh;வினைப் பெற்றுத்தருவதாக இருக்காது (சாய்ந்தமருது பிரதேசத்தின் அரசியல் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக அல்லது அம்மக்களை கையாள்வதற்கான ஒரு தந்திரோபாயமாக இம்முன்னெடுப்பு அமைந்த விடக்கூடாது).
·      பிரதேச சபை உருவாக்கத்தினை விட பிரதேச செயலகம் ஒன்றினைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்ற போது நிh;வாக ரீதியில் பல நன்மைகள் கிட்டும்.



சாதகங்கள்

·      முதன் முறையாக மருதமுனைக்கென்று ஒரு அரசியல் நிறுவனத்தினைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இதன் மூலம் உருவாகும்.
·      புதியதொரு உள்ளுராட்சி மன்றத்தின் உருவாக்கம் அதிகாரத்தினைப் பரவலுறச் செய்யும் செயற்பாடாகையால் எமது பிரதேசத்திற்கும் அதிகாரம் கிட்டுவதற்கு வாய்ப்பு ஏற்படும்.
·      மருதமுனையின் வரலாறுஇ கலாசாரம் மற்றும் பண்பாட்டினைப் வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் ஏற்படும். 
·      பிரதேசஇ சமுகஇ பொருளாதார மற்றும் கலாசார அபிவிருத்தியினை துhpதப்படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்படும்.
·      பிரதேசத்திலிருந்து திரட்டப்படுகின்ற நிதியினை குறித்த பிரதேசத்தில் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்படும்
·      பிரதேசத்தின் அரசியல் அந்தஸ்த்தினை உயர்த்தி அதன் மூலம் தேசிய அரசியலில் ஒரு இடத்தினைப் பெறுவதற்கான வாய்ப்பு இதன் மூலம் உருவாகும்.
·      பிரதேசப் பாகுபாடுஇ அநீதிஇ பாரபட்சம் என்பவற்றிலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்பு உருவாகும். 
·      அரசியல் தலைவர்களின் கவனம் இப்பிரதேசத்தின் மீது குவிக்கப்படுவதற்கும் அதன் மூலம் இப்பிரதேசம் அபிவிருத்தியினை எட்டுவதற்கும் வாய்ப்புக்கள் உண்டு.
·      வாக்களிப்பு உள்ளடங்கலான மக்களின் அரசியல் பங்கேற்பு அதிகரிப்பதற்கு வாய்ப்பு உண்டாகும்.
·      நல்லாட்சி மற்றும் உள்ளுர் ஜனநாயகத்தினை கட்டியெழுப்பி நிலையான அபிவிருத்தியினை எட்டுவதற்கு இச்சபை உருவாக்கம் பங்களிக்கத்தக்கது. 
·      நீண்டகாலமாக நிலவிவருகின்ற சமூகத்தின் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றுக்குத் தீர்வுகளைப் பெற்றுத்தருவதற்கும் அதன் மூலம் சமூக, கலாசார வளர்ச்சியினை பிரதேசத்தில் ஏற்படுத்துவதற்கும் பங்களிப்புச் செய்யும்.
·      பிரதேச சபையுடன் தொடர்புடைய தொழில்வாய்ப்புக்களைப் பெறுவதற்கும் (ஊழியா;கள்இ சிற்றூழியர்கள்) குறிப்பிட்ட சில உட்கட்டமைப்பு விருத்திகளை மேற்கொள்வதற்கும் பங்களிப்புச் செய்யும்.
·      இப்பிரதேசத்தின் தனித்துவத்தினை வெளிப்படுத்தி முன்மாதிரியானதொரு பிரதேச சபையாகத் தொழிற்படுவதற்கும் வாய்ப்புக்கள் அதிகம் உண்டு.
·      இப் பிரதேசத்தின் சுற்றுச் சூழலைப் பாதுகாத்து முகாமைப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் உருவாகும்.
·      அரசியல் பயிற்சிக்கான களமாக இப் பிரதேச சபை அமையவருவதிலிருந்து எமது பிரதேசத்தவா;கள் அரசியல் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.
·      எமது பிரதேசத்தவர்களுக்கிருக்கின்ற தொடர்புகள், வாய்ப்புக்கள் என்பவற்றினை பிரதேச அரசியலோடு ஒன்றிக்கச் செய்து பிரதேசத்தினை அபிவிருத்தியுறச் செய்வதற்கு இப் பிரதேச சபை உருவாக்கம் பங்களிப்புச் செய்யும்.
·      பிரதேச சபையின் பிரதிநிதித்துவ எண்ணிக்கை வரையறை செய்யப்படுவதிலிருந்து எமது பிரதேசத்திற்கென நிலையான பிரதிநிதித்துவத்தினை உறுதிசெய்ய முடியும்.
·      எதிர்காலங்களில் அரசியல் பிரதிநிதித்துவத்திற்கான கூறுகள் அல்லது பிரிவுகள் உருவாக்கப்படும் போது எமது பிரதேசமும் கருத்திற்கொள்ளப்படுவதற்கான வாய்ப்புக்கள் உருவாகும். 
·      மாவட்ட ரீதியில் முஸ்லிம் பெரும்பான்மை உள்ளுராட்சி மன்றங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு இதன் மூலம் வாய்ப்பு உருவாகும்.
·      எமது பிரதேசத்தில் காணப்படுகின்ற வளங்களை இனங்கண்டு அவற்றினை முகாமை செய்து பொருளாதார அபிவிருத்தியினை ஏற்படுத்துவதற்கும் புதிய பிரதேச சபையின் உருவாக்கம் பங்களிப்புச் செய்யும்.



முடிவுரை

மேற்கூறிய அடிப்படையில் பல சாதக மற்றும் பாதக அம்சங்கள் மருதமுனைக்கான புதிய பிரதேச சபை உருவாக்கத்தில் உள்ள போதிலும் குறித்த பிரதேச சபை உருவாக்கமானது கல்முனை மாநகர சபையினை பலவீனமுறச் செய்து அதன் மூலம் அரசியல் ஆதாயங்களைத் தேடுவதற்கு களம் அமைத்துக் கொடுக்கும் முயற்சியாக அது அமைந்து விடக்கூடாது. இப் புதிய சபையின் உருவாக்கம் பிரதேச முஸ்லிம்களின் அரசியல் பலத்தினை சிதைவடையச் செய்யும் என்றிருந்தால் அக்கைங்கரியத்திற்கு படித்தவர்களைக் கொண்ட இம் மருதமுனை மண்ணும் இப்பிரதேச அரசியல்வாதிகளும் துணைபோகக்கூடாது.         

Comments

Popular posts from this blog

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்