அம்பாறை சமுர்த்தி வங்கியொன்றில் ரூபா 75 ஆயிரம் நிதி மோசடி செய்த நான்கு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் .

அம்பாறை மத்திய முகாம் பிரதேச சமுர்த்தி வங்கியொன்றில் ரூபா 75 ஆயிரம் நிதி மோசடி செய்த நான்கு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கல்முனை நீதவான் நீதிமன்றினால் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சமுர்த்தி வங்கியில் வேறு நபரின் பெயரில் மோசடியாக ரூபா 75 ஆயிரம் கடனாகப் பெற்று அதை செலுத்தாதையடுத்து அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையின் பின்னர் இம்மோசடி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த உத்தியோகத்தர்கள் நான்கு பேரும் கைது செய்யப்பட்டடு இன்று (24) புதன்கிழமை அம்பாறை குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கல்முனை நிதிமன்ற நீதிபதி ஏ.யூட்சன் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டபோது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 07ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்