Posts

யுத்த வெற்றியைக் கொண்டாடும் முகமாக காலிமுகத்திடலில் மே12 முதல் 18வரை நிகழ்வுகள்..!

Image
புலிகளுடனான யுத்த வெற்றியினைக் கொண்டாடும் முகமாக எதிர்வரும் மே 20ம் திகதி காலிமுகத்திடலிலும் நாடாளுமன்ற மைதானத்தில் அமைந்துள்ள நினைவுத் தூபிக்கு அருகிலும் இடம்பெற இருப்பதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை மே 12ம் திகதிமுதல் மே 18ம் திகதிவரை நாடளாவிய ரீதியில் யுத்தவெற்றிக் கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் பிரதி அமைச்சரின் சாரதி எம்16 துப்பாக்கியுடன் கைது.

Image
முன்னாள் பிரதி அமைச்சர் கே.ஏ. பாய்ஸின் சாரதி உட்பட இருவரை புத்தளம் பொலிஸார் நேற்று இரவு கைது செய்துள்ளனர். கொச்சி கட்டுவ சோதனைச் சாவடி நிலையத்தில் வைத்து இவர்கள் பயணம் செய்த வாகனத்தை சோதனையிட்ட பொலிஸார் எம்16 ரக துப்பாக்கி ஒன்றினை அதற்கான தோட்டாக்களுடன் கண்டு பிடித்துள்ளதுடன் இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். விசாணைகள் தொடர்வதாக தெரியவருகின்றது. ஆயுதக்குழுக்கள் , பதாளக்குழுக்களினால் மக்களுக்கு உள்ள அதே அச்சுறுத்தல் அமைச்சர்கள் பாதுகாப்பு பிரிவினராலும் உள்ளது என்பதை இவ்விடயம் உணர்த்துகின்றது. குறிப்பாக இலங்கையில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கடற்படையினர் பாவிக்கும் இவ்வாயுதம் எவ்வாறு இவ்நபர்கள் கைக்குச் சென்றது என்பது கேள்வியாகும்.

ஹஜ் விசேட முன்னேற்பாட்டுக் குழு நியமனம்

Image
ஹஜ் யாத்திரிகர்களின் நலன்கருதி விசேட முன்னேற்பாட்டுக் குழு ஒன்று நியமிக்கப்பட்டிருக்கின்றது. ஜனாபதி மஹிந்த ராஜபக்ஷ ஐந்து பேர் கொண்ட இந்த ஹஜ் முன்னேற்பாட்டுக் குழுவை நியமித்துள்ளார். அமைச்சர் ஏ. எச். எம். பௌஸி, மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா, பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபா, கொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயர் அஸாத் ஸாலி, முஸ்லிம் சமய விவகாரத் திணைக்களப் பணிப்பாளர் வை. எம். எம். நவவி ஆகியோர் இந்தக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர். ஹஜ் ஏற்பாடுகள் சம்பந்தமாக சவூதி அரேபிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் பௌஸி நேற்று அந்நாட்டுக்குப் பயணமானார். ஏனைய நால்வரும் இன்று புறப்பட்டுச் செல்லவுள்ளனர்

SMS குறுந்தகவல் சூத்திரதாரிகளை கண்டுபிடிக்குமாறு தொ.தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவு!

Image
அநாமதேய குறுந்தகவல்கள் மூலம் பொதுமக்களை வீண் பீதிக்கு உட்படுத்தியவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தொலைத் தொடர்பு நிறுவனங்களைக் கோரியுள்ளது. இது தொடர்பில் நேற்றுத் தகவல் தெரிவித்த ஆணைக்குழுவின் தலைவர் அனுஷ்பெல்பிட்ட குறுந்தகவல்கள் மூலம் புரளியைக் கிளப்பியவர்களைக் கண்டுபிடிப்பதில் தீவிர கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இது தொடர்பில் தொலைத் தொடர்பு நிறுவனச் செயற்பாட்டாளர்களுக்கு விசேட பணிப்புரைகளை வழங்கியுள்ளதாகத் தெரிவித்த அவர், சம்பந்தப்பட்டவர்களைக் கண்டுபிடிக்க உதவுமாறு அவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். இவ்வாறு உறுதிப்படுத்தப்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் குறிப்பிட்டார். இதேவேளை மேற்படி புரளிகளைக் கிளப்பியவர்கள் சம்பந்தமாகத் தகவல்களைத் தெரிவிக்க முன்வருவோர் பொலிஸ் நிலையங்களில் தமது தகவல்களைத் தெரிவிக்க முடியுமெனவும் தெரிவித்தார்.

பொது மக்கள், போலிஸ் உயரதிகாரிகளை புதன் கிழமை சந்திக்கலாம்

Image
பொது மக்கள் போலிஸ் உயரதிகாரிகளை  புதன் கிழமை சந்திப்பதற்கு   அம்பாறை மாவட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் படி  அம்பாறை பிரதி போலிஸ் மா  அதிபர் ,சிரேஷ்ட போலிஸ் அத்தியட்சகர் ,கல்முனை  உதவி  போலிஸ் அத்தியட்சகர் ஆகியோரை குறித்த தினத்தில்  காலை   9.00       மணி தொடக்கம்  1.00         மணி வரை சந்திக்கலாம் என கல்முனை போலீஸ் நிலைய மக்கள் தொடர்பாடல் பிரிவு பொறுப்பதிகாரி எ.எம்.நவ்பார்  தெரிவித்தார். இது தொடர்பான விளம்பரம் கல்முனை போலீஸ் நிலைய மக்கள் தொடர்பாடல் பிரிவு பொறுப்பதிகாரி எ.எம்.நவ்பார் தலைமைல் பொது மக்களுக்கு காட்சிப்படுதப்பட்டுள்ளன.

கல்முனை மாநகர மேயராக சட்டத்தரணி ரக்கீப் ?

Image
கல்முனை மாநகர மேயராக சட்டத்தரணி ரக்கீப் நியமிக்கப் படலாம் என எதிர் பார்க்கப்படுகிறது. மாநகர மேயராக மசூர் மௌலானவை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீடம் தீர்மானித்திருந்த போதிலும்  அதனை மீள் பரிசீலனை செயப்போவதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மருதமுனை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுவிடம் தெரிவித்துள்ளார். மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி ரக்கீப்பை கல்முனை மாநகர மேயராக நியமிக்குமாறு  மருதமுனை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு விடுத்த கோரிக்கைக்கு இணங்க இந்த மீள் பரிசீலனை நிலை தோன்றி இருப்பதாக மருதமுனை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு உறுப்பினர் ஒருவர் கல்முனை நியூஸ் இணைய தளத்திற்கு தெரிவித்தார்.

கல்விக்கென தனியான தொலைக்காட்சி!

Image
கல்விக்கெனத் தனியான தொலை க்காட்சி அலைவரிசையொன்றை அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளது. இது தொடர்பில் தகவல்இ ஊட கத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச் சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். கல்விக்கான தனித் தொலைக் காட்சி அலைவரிசைக் கான தொழி ல்நுட்ப உதவிகளை வழங்க ‘யுனெ ஸ்கோ’ நிறுவனம் முன்வந்துள்ள தாகவும் கல்வி அமைச்சர் கூறினார்.

‘அரந்தலாவ கொலைகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை’ பிரதியமைச்சர் முரளிதரன்

Image
அரந்தலாவையில் பெளத்த பிக்குகளும் சிவிலியன்களும் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கும் தனக்கும் தொடர்பில்லையென பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். கண்டிக்கு நேற்று விஜயம் செய்த பிரதியமைச்சர் முரளிதரன், அஸ்கிரிய, மகாநாயக்க தேரர்களைச் சந்தித்துப் பேசும் போதே மேற்கண்டவாறு கூறினார். ‘அரந்தலாவ பெளத்த குருக்கள் மற்றும் அப்பிரதேச சிவிலியன்கள் ஆகியோர்களினது கொலைச் சம்பவத்திற்கும் எனக்கும் எவ்வித தொடர்புமில்லை. நான் அப்போது யாழ்ப்பாணத்தில் பிரபாகரனோடு செயலாற்றி வந்தேன்.’ ‘பொட்டு அம் மான், நியூட்டன், குமாரப்பா போன்றோரே இதனைச் செய்தனர். இந்த விடயம் இராணுவத்தினருக்கும் நன்கு தெரியும். வீணாக என்மீது பழி சுமத்தப்படு கிறது’ என்றும் அவர் தெரிவித்தார். பிரதி அமைச்சர் அங்கு கருத்துத் தெரிவிக்கையில் :- 1,63,000 பேர் அகதிகள் தற்போது அவர்களினது சொந்த இடங்களுக்கு மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் ஏனைய வசதிகள் செய்யப் பட்டுள்ளன. எனினும் இவர்கள் நிரந்தரமான இயல்பு வாழ்க்கை யைப் பெறுவதற்கு அவர்களுக்கான அடிப்படை வசதிகளான குடியிருப்பு

மாணவர்களினால் எடுக்கப்பட்ட ஆபாச இறுவெட்டுக்கள் விற்பனையில்.

Image
அம்பாறையில் அப்பிரதேச மாணவர்களினால் எடுக்கப்பட்ட ஆபாச இறுவெட்டுக்கள் பெருமளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளமை பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து இறுவெட்டுக்களைபொலிஸார் கைப்பற்றியதோடு இருமாணவர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தியுள்ளனர். இவ்இறுவெட்டுத்தொடர்பாக இதனை விற்பனை செய்த கடை உரிமையாளரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசரணையின் போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளதாக தெரியவருகின்றது. இப்பிரதேசத்தில் உள்ள ருகுணகம என்ற பாடசாலையில் கல்விகற்கும் இருமாணவிகளும்,மூன்று மாணவர்களுமே இவ்இறுவெட்டில் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்   இதில் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மற்றவர்களை கைது செய்யநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாணவிகளை காதலிப்பது போல் நடித்தே இவ் இறுவெட்டுக்கள் எடுக்கப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மே 17 ஆம் திகதியை துக்க தினமாக அனுஷ்டிக்குமாறு த.தே.கூ கோரிக்கை

Image
  வருடாந்தம் மே 17 ஆம் திகதியை துக்க தினமாக கடைப்பிடிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களைக் கோரியுள்ளது. உச்சக்கட்ட போரின் போது பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டமை, இலட்சக் கணக்கானோர் பல்வேறு பாரிய பாதிப்புகளுடன் இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டமை போன்றவற்றைச் சுட்டிக்காட்டியே இத் துக்கதின அனுஷ்டிப

மலே வீதியில் கட்டிடங்கள் உடைக்கப்பட்டுள்ளது

Image
கொழும்பு 02 மலே வீதியில் Slave Island  பகுதியில் சட்டத்துக்கு புறம்பான முறையில் கட்டபட்டுள்ளதாக தெரிவிக்படும் கட்டுமானங்களை இன்று இராணுவமும் , போலிசும் இணைந்து அவற்றை உடைக்கும் பணியில் இறங்கியபோது அங்குள்ள பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையில் சிறு மோதல் ஏற்பட்டுள்ளது உடைக்கபட்ட கட்டிடங்கள் சட்ட பூர்வமாக கட்டபட்டவை என்று அதை கட்டியவர்கள் கூறியுள்ளனர் கொழும்பு , மற்றும் கண்டி நகர பகுதிகளில் அமைக்கபட்டிருக்கும் நடை பாதை வியாபார கடைகள் அகற்றப்பட்டுவருகின்றமை குறிபிடதக்கது பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து அகற்றினர். அங்கு 20 குடியிருப்புகளில் வசித்த 35 குடும்பங்களைச் சேர்ந்த 162 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் . குடியிருப்புகள் அகற்றப்படும்போது மக்கள் கண்ணீர் வடித்து கதறியழுததைக் காணக்கூடியதாக இருந்ததாக செய்திகள் தெரிவிகின்றன சட்டவிரோதமாக கட்டப்பட்ட குடியிருப்புகளை அகற்றுவதாக கொழும்பு மாநகர சபையினரால் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. எனினும் அவர்கள் தங்குவதற்கான மாற்று ஏற்பாடுகளோ நிவாரணங்களோ வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்

பனிச்சையடி மும்மாரியில் யானை தாக்கி இருவர் மரணம்.

Image
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பனிச்சையடி மும்மாரி பிரதேசத்தில் யானை தாக்கியதில் இருவர் மரமடைந்துள்ளனர் . நேற்று முன்தினம் இரவு இப்பிரதேசத்தினுள் புகுந்த யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒரு வர் ஸ்தலத்திலேயே மரணமாகியுள்ளார் . படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிக : குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மற்றொருவர் நேற்றையதினம் மரணமானதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன . இவர்களது இறுதிக்கிரியைகள் . நேற்று மாலை பனிச்சையடி மும்மாரியில் நடைபெற்றன . படுவான்கரையின் பல்வேறு பிரச்சினைகளில் இவ்வாறான பல சம்பவங்கள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

ஐ.தே.கட்சியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் இணையும் சாத்தியம்

Image
ஐக்கிய தேசியக்கட்சியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணையும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் காதர் மற்றும் சக்தி தொலைக்காட்சியில் மின்னல் நிகழ்ச்சியை தொகுத்தளித்த நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்கா ஆகியோரே ஆளும் கட்சியில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வரவுசெலவுத்திட்ட வாக்கெடுப்பின் போது அதற்கு எதிராக வாக்களித்த ரங்கா, தாம் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து போட்டியிட்ட போதும் புரவசி பெரமுன என்ற கட்சியை சேர்ந்தவன் என நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார். ஏற்கனவே ரங்கா, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருந்த போதும் கடந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் பரிந்துரையின் பேரில் நுவரெலிய மாவட்டத்தில் அவர் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளராக போட்டியிட்டார். இந்த நிலையில் ரங்காவின் தற்போது அறிவிப்பு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கவலையை ஏற்படுத்தி

தமக்கு கிடைக்கப் பெற்ற தேசியப்பட்டியல் ஆசனங்களை எக்காரணத்திற்காகவும் வேறு ஓர் கட்சிக்கு விட்டுக் கொடுக்க முடியாது

Image
தமக்கு கிடைக்கப் பெற்ற தேசியப்பட்டியல் ஆசனங்களை எக்காரணத்திற்காகவும் வேறு ஓர் கட்சிக்கு விட்டுக் கொடுக்க முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு இரண்டு தேசியப்பட்டியல் ஆசனங்களை ஐக்கிய தேசிய கட்சி வழங்கியுள்ளது. முஸ்லிம் காங்கிரஸிற்கு இரண்டு தேசியப்பட்டியல் ஆசனங்கள் வழங்கப்பட்ட காரணத்தினால் தமக்கு ஆசனம் கிடைக்கவில்லை என சில கூட்டணி கட்சிகள் செய்து வரும் பிரச்சாரங்களில் உண்மையில்லை என முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிப்பதனை தவிர எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதனை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது எனவும் அக்கட்சி சுட்டிக் காட்டியுள்ளது.

முஸ்லிம் காங்கிரசுக்குள் மீண்டும் பிளவு?ஹசனலி மறுப்பு

Image
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியை விட்டு பிரிந்து அரசுடன் இணைந்து கொள்ளவுள்ளர்கள் என்றும் இதற்கான முக்கிய பேச்சுவார்த்தைகள் ஜனாதிபதியின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவுடன்  இடம்பெற்றுவருகின்றது என்று  செய்திகள் வெளியாகி உள்ளன . இது சம்பந்தமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசன் அலியிடம் கல்முனை நியூஸ் இணையத்தளம் சற்று முன் தொடர்பு கொண்டு கேட்டது . இது ஒரு முற்றிலும் உண்மைக்குப் புறம்பான விடயம் என்றும், எமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசுடன் இணையவுள்ளார்கள் என்ற செய்தியை மறுப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் ஒரு சில பத்திரிகைகள் அரசுடன் சேர்ந்து கொண்டு எமது கட்சிக்கு எதிராக செயற்பட்டு வருகின்றனது  என்று அவர் குறிப்பிட்டார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது எமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கட்சியை விட்டு பிரிந்து செல்லமாட்டோம் என்று மக்கள் மத்தியில் வாக்குறுதியளித்துள்ளனர். அவ்வாறு நாங்கள் அரசுடன் சேர்வதாக இருந்தால் தாங்கள் அனைவரும் கட்சித் தலைவருடன் தான் ஒன்று சேர்வது என்று உ

நாடு பூராகவும் நேற்றிரவு பரவிய வதந்தியினால் மக்கள் பீதி

Image
கையடக்கத் தொலைபேசியில் குறித்த சில இலக்கங்களில் இருந்துவரும் அழைப்புக்களைப் பெற்று அவர்களுடன் உரையாடும் போது மூளை பாதிப்படைந்து இருப்பதாக நேற்று இரவு யாழ். குடாநாடு முழுவதும் வதந்தி பரவியது. இதனால் மக்கள் பெரும் பீதியுடன் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது : கையடக்கத் தொலைபேசிகளுக்கு 7888308001, 9316048121, 9876266211, 9888854137, 9876715587 எனும் இலக்கங்களில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்க வேண்டாம். இந்த இலக்கங்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும். இந்த அழைப்புக்களை ஏற்கும்போது அவற்றில் இருந்து வரும் உயர் ஒலி அதிர்வு (High frequency) காரணமாக மூளை வெடித்து பாதிப்புக்குள்ளாகினர் என்றும், இந்த அழைப்புக்களை ஏற்றதால் 27 பேர் இறந்துள்ளனர். என்று கையடக்கத் தொலைபேசிகளுக்கு குறுந் தகவல் (SMS) அனுப்பப்பட்டது. அக்குறுந்தகவலில் இதனை டயலொக் நியூஸ் சேவை (DD News) உறுதி செய்வதாகவும், இதனை நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் உடனடியாக அறிவியுங்கள் எனவும் மேலும் கூறப்பட்டிருந்தது. இத்தகவல்களால் பீதியடைந்த மக்கள் பலரும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த

சாய்ந்தமருது சமுர்த்திவங்கி கட்டிட திறப்பு விழா

Image
சாய்ந்தமருது சமுர்த்திவங்கி கட்டிட திறப்பு விழா வெள்ளிக் கிழமை நடை பெற்றது .முகாமையாளர் ஐ.அலியார் தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் இலங்கை சமுர்த்தி அதிகார சபை பணிப்பாளர் நாயகம் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்

இலங்கையில் பெற்றோல் உற்பத்தி நடவடிக்கையில் மத்திய சுற்றாடல் அதிகார சபை

Image
மத்திய சுற்றாடல் அதிகார சபை இலங்கையில் பெற்றோல் உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதனடிப்படையில் பிளாத்திக் மற்றும் பொலித்தீன் கழிவுகளைக் கொண்டு பெற்றோல் உற்பத்தி செய்யப்படவுள்ளது. இதன் முதற்கட்டப்பணிகளை யட்டியந்தோட்டை மற்றும் கேகாலை ஆகிய பகுதிகளில் ஆரம்பித்துள்ளது.

உல்லாசப் பயணிகளை கவரும் பொத்துவில் மண் மலை.

Image
பொத்துவில் பிரதேசத்தில் உல்லாசப் பயணிகளை ஈர்க்கும் மற்றுமொரு இடமாக பொத்துவில் மண்மலை திகழ்கிறது. இயற்கையாகவே அமைந்த இம் மண்மலை தென்னை மர உயரத்திற்கு மேலான உயரத்தைக் கொண்டது.பல வருட காலமாக இம்மண்மலை உள்ளது. உல்லைக்குச் செல்வோர் அம்மலையையும் பார்த்து ஓடிவிளையாடி குதூகல்த்து வருவது குறிப்பிடத்தக்கது.மண்மலையையும் உல்லாச பயணிகளையும் படங்களில் காணலாம்

முன்னாள்அம்பாறை மாவட்ட தமிழர் மகா சங்க தலைவர் மறைவு

கல்முனையில் கல்விமானும் முன்னாள் கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை அதிபரும் அம்பாறை மாவட்ட தமிழர் மகா சங்க தலைவருமான கா .சுப்பிரமணியம் இன்று காலமானார். இவரது மறைவு அம்பாறை மாவட்ட தமிழர்கள் மத்தியில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளது. இவரது மறைவையொட்டி கல்முனை நியூஸ் இணைய தளம் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கிறது

4 அமைச்சர்களும்- 6 பிரதி அமைச்சர்களும்

Image
இன்று 4 அமைச்சர்களும் 6 பிரதி அமைச்சர்களும் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். விபரம் பின்வருமாறு. அமைச்சர்கள் கெஹலிய ரம்புக்வெல்ல - தகவல் மற்றும் ஊடக அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்க - உயர் கல்வி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் - கால்நடைகள் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பேராசிரியர்.திஸ்ஸவிதாரண - தொழிநுட்ப ஆராய்ச்சி அமைச்சர் பிரதி அமைச்சர்கள் சரத் அமுனுகம - நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா - பெருந்தெருக்கல் பிரதி அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே - இளைஞர் விவகார பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா - சூழல் பிரதி அமைச்சர் எம்.கே.பீ.எஸ்.குணவர்தன - புத்தசாசன மற்றும் சமய விவகார பிரதி அமைச்சர் ஜெகத் பாலசூரிய - தொழில் உறவுகள் திறன் அபிவிருத்தி பிரதி அமைச்சர்

பிரதி ஊடகத்துறை அமைச்சர் பதவியிலிருந்து மேர்வின் ராஜினாமா

Image
பிரதி ஊடகத்துறை அமைச்சர் மேர்வின்  சில்வா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். கெஹலிய ரம்புக்வெல்ல, புதிய ஊடகத்துறை அமைச்சராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முன்னிலையில் இன்று பதவிப் பிரமாணம் செய்த நிலையிலேயே மர்வின்  சில்வா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த செய்தியினை ஜனாதிபதி அலுவலகம் உறுதி செய்தது. இதேவேளை, நெடுஞ்சாலைகள் துறை பிரதி அமைச்சராக மேர்வின் சில்வா நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் ஜனாதிபதி அலுவலகம் கூறியது.

வாகரையில் பிரதேச சபை உறுப்பினர் கைது.

Image
மக்கள் விடுதலைப்புலிகள்   கட்சியின்வாகரை  பிரதேச சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார் . போலியான சாரதி அனுமதிப் பத்திரங்களைத் தயாரித்து விற்று வந்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது . வாகரைப் பிரதேச சபையின் உறுப்பினரான இவர் ஒரு சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு 15 ஆயிரம் ரூபா வரையில் அறவிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது .  

மருதமுனை அல் – மனார் மத்திய கல்லூரி மாவட்ட சம்பியன்களாக தெரிவு

Image
கல்முனை கல்வி மாவட்ட பாடசாலை விளையாட்டுத் தொடர் அக்கரைப்பற்று, சம்மாந்துறை, கல் முனை ஆகிய கல்வி வலயங்களை உள்ளடக்கியதாக இவ்வார முற் பகுதியில் வெகு சிறப்பாக இடம் பெற்று முடிந்திருக்கிறது. மாவட்டத்தின் முன்னணிப் பாட சாலைகள் பங்கேற்ற இவ் விளையாட்டுத் தொடரில் மருத முனை அல்-மனார் மத்திய கல்லூரி பெருவிளையாட்டுக்கள் அனேகமானவற்றில் சம்பியன்களாகி சாதனை படைத்துள்ளது. குறிப்பாக இக் கல்லூரிக்கு புதிய அதிபராக பதவியேற்ற எஸ். எம். எம். எஸ். உமர்மெளலானா மாண வர்களின் இணைப்பாட விதான செயற்பாடுகளிலும் பாடசாலையின் பெளதீக வள அபிவிருத்தியிலும் பாரிய பங்காற்றி வருவது குறிப்பிட த்தக்கது. கடந்த வாரம் நிறைவுற்ற 15 வயது, 19 வயதுக்குட்பட்ட செஸ் தொடரில் அல்-மனார் மத்திய கல்லூரி 03 முதலிடங்களையும் 01 இரண்டாம் இடத்தையும் சுவீகரித்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல ஆண்கள் பெண் களுக்கான 15 வயது, 19 வயதிற் குட்பட்ட கரம் சுற்றுப் போட்டித் தொடரிலும் 03 முலிடங்களையும் 01 இரண்டாமிடத்தையும் அல்- மனார் பெற்றிருப்பது பாராடடுக்குரியது. இதேபோல கடந்த வாரம் இடம்பெற்ற பூப்பந்தாட்டத் தொடரிலும் அல்-மனார்

இலங்கையில் மூன்று தேசிய மொழிகளையும் அரச பணியாளர்களுக்கு கற்றுக் கொடுக்க அரசு முடிவு!

Image
இலங்கை அரசின் பொது நிர்வாக சேவைப் பணியாளர்களுக்கு சிங்களம் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளையும் பயிற்றுவிக்கும் புதிய திட்டத்தை தொடங்குவதற்கான நடவடிக்கைகளை தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சு மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் நாவின்ன தெரிவித்துள்ளார். அரசு மேற்கொண்டு வரும் புனரமைப்பு பணிகளின் ஒரு பகுதியாக பல இன மக்களுக்கு இடையே தொடர்பினை ஏற்படுத்தும் பொருட்டு நாட்டின் அனைத்து பகுதிகளிலும் அந்தந்த பகுதி ஆணையங்களின் உதவியுடன் மொழி பயிற்றுவிப்பு மையங்களை தொடங்க அரசு முடிவெடுத்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் எதிர்காலத்தில் பதவி உயர்வு சம்பள உயர்வு ஆகியவற்றை பெற இத்திட்டம் வாய்ப்பாக அமையும் என்பதையும் மூன்று மொழிகளையும் கற்றுக் கொள்வது சமூக பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் மூன்று தரப்பு மக்களுக்கும் இடையே நட்புறவு பாலத்தையும் ஏற்படுத்த உதவும் என்று அமைச்சர் நாவின்ன மேலும் தெரிவித்துள்ளார்.