மாணவர்களினால் எடுக்கப்பட்ட ஆபாச இறுவெட்டுக்கள் விற்பனையில்.


அம்பாறையில் அப்பிரதேச மாணவர்களினால் எடுக்கப்பட்ட ஆபாச இறுவெட்டுக்கள் பெருமளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளமை பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து இறுவெட்டுக்களைபொலிஸார் கைப்பற்றியதோடு இருமாணவர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தியுள்ளனர்.
இவ்இறுவெட்டுத்தொடர்பாக இதனை விற்பனை செய்த கடை உரிமையாளரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசரணையின் போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளதாக தெரியவருகின்றது.

இப்பிரதேசத்தில் உள்ள ருகுணகம என்ற பாடசாலையில் கல்விகற்கும் இருமாணவிகளும்,மூன்று மாணவர்களுமே இவ்இறுவெட்டில் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்
 இதில் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மற்றவர்களை கைது செய்யநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாணவிகளை காதலிப்பது போல் நடித்தே இவ் இறுவெட்டுக்கள் எடுக்கப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்