கல்முனை மாநகர மேயராக சட்டத்தரணி ரக்கீப் ?
கல்முனை மாநகர மேயராக சட்டத்தரணி ரக்கீப் நியமிக்கப் படலாம் என எதிர் பார்க்கப்படுகிறது. மாநகர மேயராக மசூர் மௌலானவை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீடம் தீர்மானித்திருந்த போதிலும் அதனை மீள் பரிசீலனை செயப்போவதாக
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மருதமுனை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுவிடம் தெரிவித்துள்ளார்.
மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி ரக்கீப்பை கல்முனை மாநகர மேயராக நியமிக்குமாறு மருதமுனை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு விடுத்த கோரிக்கைக்கு இணங்க இந்த மீள் பரிசீலனை நிலை தோன்றி இருப்பதாக மருதமுனை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு உறுப்பினர் ஒருவர் கல்முனை நியூஸ் இணைய தளத்திற்கு தெரிவித்தார்.
Comments
Post a Comment