ஹஜ் விசேட முன்னேற்பாட்டுக் குழு நியமனம்

ஹஜ் யாத்திரிகர்களின் நலன்கருதி விசேட முன்னேற்பாட்டுக் குழு ஒன்று நியமிக்கப்பட்டிருக்கின்றது. ஜனாபதி மஹிந்த ராஜபக்ஷ ஐந்து பேர் கொண்ட இந்த ஹஜ் முன்னேற்பாட்டுக் குழுவை நியமித்துள்ளார்.
அமைச்சர் ஏ. எச். எம். பௌஸி, மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா, பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபா, கொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயர் அஸாத் ஸாலி, முஸ்லிம் சமய விவகாரத் திணைக்களப் பணிப்பாளர் வை. எம். எம். நவவி ஆகியோர் இந்தக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஹஜ் ஏற்பாடுகள் சம்பந்தமாக சவூதி அரேபிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் பௌஸி நேற்று அந்நாட்டுக்குப் பயணமானார். ஏனைய நால்வரும் இன்று புறப்பட்டுச் செல்லவுள்ளனர்

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்