இலங்கையில் மூன்று தேசிய மொழிகளையும் அரச பணியாளர்களுக்கு கற்றுக் கொடுக்க அரசு முடிவு!
அரசு மேற்கொண்டு வரும் புனரமைப்பு பணிகளின் ஒரு பகுதியாக பல இன மக்களுக்கு இடையே தொடர்பினை ஏற்படுத்தும் பொருட்டு நாட்டின் அனைத்து பகுதிகளிலும் அந்தந்த பகுதி ஆணையங்களின் உதவியுடன் மொழி பயிற்றுவிப்பு மையங்களை தொடங்க அரசு முடிவெடுத்துள்ளது.
பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் எதிர்காலத்தில் பதவி உயர்வு சம்பள உயர்வு ஆகியவற்றை பெற இத்திட்டம் வாய்ப்பாக அமையும் என்பதையும் மூன்று மொழிகளையும் கற்றுக் கொள்வது சமூக பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் மூன்று தரப்பு மக்களுக்கும் இடையே நட்புறவு பாலத்தையும் ஏற்படுத்த உதவும் என்று அமைச்சர் நாவின்ன மேலும் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment