முஸ்லிம் காங்கிரசுக்குள் மீண்டும் பிளவு?ஹசனலி மறுப்பு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியை விட்டு பிரிந்து அரசுடன் இணைந்து கொள்ளவுள்ளர்கள் என்றும் இதற்கான முக்கிய பேச்சுவார்த்தைகள் ஜனாதிபதியின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவுடன் இடம்பெற்றுவருகின்றது என்று செய்திகள் வெளியாகி உள்ளன .
இது சம்பந்தமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசன் அலியிடம் கல்முனை நியூஸ் இணையத்தளம் சற்று முன் தொடர்பு கொண்டு கேட்டது .
இது ஒரு முற்றிலும் உண்மைக்குப் புறம்பான விடயம் என்றும், எமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசுடன் இணையவுள்ளார்கள் என்ற செய்தியை மறுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் ஒரு சில பத்திரிகைகள் அரசுடன் சேர்ந்து கொண்டு எமது கட்சிக்கு எதிராக செயற்பட்டு வருகின்றனது என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது எமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கட்சியை விட்டு பிரிந்து செல்லமாட்டோம் என்று மக்கள் மத்தியில் வாக்குறுதியளித்துள்ளனர். அவ்வாறு நாங்கள் அரசுடன் சேர்வதாக இருந்தால் தாங்கள் அனைவரும் கட்சித் தலைவருடன் தான் ஒன்று சேர்வது என்று உயர்பீடக் கூட்டத்தில் தீர்மானித்துள்ளதாகவும் ஹசன் அலி தெரிவித்தார்.
Comments
Post a Comment