மலே வீதியில் கட்டிடங்கள் உடைக்கப்பட்டுள்ளது
கொழும்பு 02 மலே வீதியில் Slave Island
பகுதியில் சட்டத்துக்கு புறம்பான முறையில் கட்டபட்டுள்ளதாக தெரிவிக்படும்
கட்டுமானங்களை இன்று இராணுவமும் , போலிசும் இணைந்து அவற்றை உடைக்கும்
பணியில் இறங்கியபோது அங்குள்ள பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையில்
சிறு மோதல் ஏற்பட்டுள்ளது உடைக்கபட்ட கட்டிடங்கள் சட்ட பூர்வமாக கட்டபட்டவை
என்று அதை கட்டியவர்கள் கூறியுள்ளனர் கொழும்பு , மற்றும் கண்டி நகர
பகுதிகளில் அமைக்கபட்டிருக்கும் நடை பாதை வியாபார கடைகள்
அகற்றப்பட்டுவருகின்றமை குறிபிடதக்கது பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து
அகற்றினர். அங்கு 20 குடியிருப்புகளில் வசித்த 35 குடும்பங்களைச் சேர்ந்த
162 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குடியிருப்புகள் அகற்றப்படும்போது மக்கள்
கண்ணீர் வடித்து கதறியழுததைக் காணக்கூடியதாக இருந்ததாக செய்திகள்
தெரிவிகின்றன சட்டவிரோதமாக கட்டப்பட்ட குடியிருப்புகளை அகற்றுவதாக கொழும்பு
மாநகர சபையினரால் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. எனினும் அவர்கள்
தங்குவதற்கான மாற்று ஏற்பாடுகளோ நிவாரணங்களோ வழங்கப்படவில்லை என
பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்