நாடு பூராகவும் நேற்றிரவு பரவிய வதந்தியினால் மக்கள் பீதி
கையடக்கத் தொலைபேசியில் குறித்த சில இலக்கங்களில் இருந்துவரும் அழைப்புக்களைப் பெற்று அவர்களுடன் உரையாடும் போது மூளை பாதிப்படைந்து இருப்பதாக நேற்று இரவு யாழ். குடாநாடு முழுவதும் வதந்தி பரவியது. இதனால் மக்கள் பெரும் பீதியுடன் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. |
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது :
கையடக்கத் தொலைபேசிகளுக்கு 7888308001, 9316048121, 9876266211, 9888854137, 9876715587 எனும் இலக்கங்களில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்க வேண்டாம். இந்த இலக்கங்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும். இந்த அழைப்புக்களை ஏற்கும்போது அவற்றில் இருந்து வரும் உயர் ஒலி அதிர்வு (High frequency) காரணமாக மூளை வெடித்து பாதிப்புக்குள்ளாகினர் என்றும், இந்த அழைப்புக்களை ஏற்றதால் 27 பேர் இறந்துள்ளனர். என்று கையடக்கத் தொலைபேசிகளுக்கு குறுந் தகவல் (SMS) அனுப்பப்பட்டது. அக்குறுந்தகவலில் இதனை டயலொக் நியூஸ் சேவை (DD News) உறுதி செய்வதாகவும், இதனை நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் உடனடியாக அறிவியுங்கள் எனவும் மேலும் கூறப்பட்டிருந்தது. இத்தகவல்களால் பீதியடைந்த மக்கள் பலரும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த பலரிடமும் விசாரித்ததுடன் தமது தொலை பேசிகளையும் நிறுத்தி வைத்தனர். இது தொடர்பாக "டயலொக்'' நிறுவனம் எந்தச் செய்திகளையோ, குறுந் தகவல்களையோ வெளியிடவில்லை என்றும், இது மக்களைப் பீதியடையச் செய்ய சில விஷமிகளால் பரப்பப்பட்ட வதந்தியே என்றும் "டயலொக்'' நிறுவனத்தின் யாழ். அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். |
Comments
Post a Comment