மருதமுனை அல் – மனார் மத்திய கல்லூரி மாவட்ட சம்பியன்களாக தெரிவு



கல்முனை கல்வி மாவட்ட பாடசாலை விளையாட்டுத் தொடர் அக்கரைப்பற்று, சம்மாந்துறை, கல் முனை ஆகிய கல்வி வலயங்களை உள்ளடக்கியதாக இவ்வார முற் பகுதியில் வெகு சிறப்பாக இடம் பெற்று முடிந்திருக்கிறது.
மாவட்டத்தின் முன்னணிப் பாட சாலைகள் பங்கேற்ற இவ் விளையாட்டுத் தொடரில் மருத முனை அல்-மனார் மத்திய கல்லூரி பெருவிளையாட்டுக்கள் அனேகமானவற்றில் சம்பியன்களாகி சாதனை படைத்துள்ளது.
குறிப்பாக இக் கல்லூரிக்கு புதிய அதிபராக பதவியேற்ற எஸ். எம். எம். எஸ். உமர்மெளலானா மாண வர்களின் இணைப்பாட விதான செயற்பாடுகளிலும் பாடசாலையின் பெளதீக வள அபிவிருத்தியிலும் பாரிய பங்காற்றி வருவது குறிப்பிட த்தக்கது.
கடந்த வாரம் நிறைவுற்ற 15 வயது, 19 வயதுக்குட்பட்ட செஸ் தொடரில் அல்-மனார் மத்திய கல்லூரி 03 முதலிடங்களையும் 01 இரண்டாம் இடத்தையும் சுவீகரித்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோல ஆண்கள் பெண் களுக்கான 15 வயது, 19 வயதிற் குட்பட்ட கரம் சுற்றுப் போட்டித் தொடரிலும் 03 முலிடங்களையும் 01 இரண்டாமிடத்தையும் அல்- மனார் பெற்றிருப்பது பாராடடுக்குரியது.
இதேபோல கடந்த வாரம் இடம்பெற்ற பூப்பந்தாட்டத் தொடரிலும் அல்-மனார் வெற்றி யீட்டி சம்பியனாகியது.
இதுபோல நேற்று முன்தினம் மருதமுனை மசூர்மெளலானா விளை யாட்டரங்கில் இடம்பெற்ற 17 வயது, 19 வயது பிரிவுகளுக்கு ட்பட்ட உதைபந்தாட்ட ஏ தொட ரிலும் அல்-மனார் மத்திய கல்லூரி மாவட்ட சம்பியனாக தெரிவாகி யது.
இத் தொடரில் அல்-மனார் மத் திய கல்லூரியின் மாணவன் டபிள்யூ. வசீம் சஜ்ஜாத்தின் உதைபந்தாட்ட ஆற்றலே அல்-மனாருக்கு பாரிய வெற்றியை ஈட்டிக்கொடுத்தது.
இது போல, நேற்று முன்தினம் திருக்கோயிலில் இடம் பெற்ற “எல்லே” தொடரிலும் அல்-மனார் மாவட்ட சம்பியனாகியது குறிப்பி டத்தக்கது. மேற்படி மாவட்டத்திலே தேர்வு செய்யப்பட்ட நிகழ்வுகள் அனை த்தும் மாகாண மட்ட சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிட த்தக்கது.
 

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்