பனிச்சையடி மும்மாரியில் யானை தாக்கி இருவர் மரணம்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பனிச்சையடி மும்மாரி பிரதேசத்தில் யானை தாக்கியதில் இருவர் மரமடைந்துள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு இப்பிரதேசத்தினுள் புகுந்த யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒரு வர் ஸ்தலத்திலேயே மரணமாகியுள்ளார். படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிக:குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மற்றொருவர் நேற்றையதினம் மரணமானதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவர்களது இறுதிக்கிரியைகள். நேற்று மாலை பனிச்சையடி மும்மாரியில் நடைபெற்றன.
படுவான்கரையின் பல்வேறு பிரச்சினைகளில் இவ்வாறான பல சம்பவங்கள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment