எமது பிரச்சினைக்கு தீர்வு பெற்று தராதவரை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுடன் கல்முனையில் பேச அனுமதிக்க மாட்டோம்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பூரண கட்டுப்பாட்டில் இயங்கும் கல்முனை மாநகர சபையினால் கல்முனை தமிழ் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு நியாயமான தீர்வு வழங்கும் வரை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு கல்முனையில் பேச்சுவார்த்தை நடத்த அனுமதிக்க மாட்டோம் என கல்முனை தமிழ் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் அனுமதிக்கப் போவதில்லை என இன்று தெரிவித்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களுக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்களுக்கும் இடையில் இன்று நடைபெறவிருந்த சந்திப்பு இறுதிநேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது. இன்று கல்முனைக்கு வரவிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பை இடை மறித்து எமக்கான தீர்வை பெற்றுத் தருமாறு வீதி மறியல் போராட்டம் செய்வதற்கு தமிழ் ஆட்டோ சாரதிகள் கல்முனை வங்கி சந்தியில் தயார் நிலையில் இருந்த போதும் இதனை அறிந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் கல்முனை வழியாக பயணிக்காமல் திருக்கோவிலுக்கு செல்வதற்கு மட்டக்களப்பிலிருந்து மன்ட்டூர் வழியாக அம்பாறைக்கு சென்று அங்கிருந்து திருக்கோவிலை சென்றடைந்துள்ளனர் . காலையில் 10.00 மணி தொடக்கம் 3.00 மணிவரை தமிழ் தேசிய கூட