Posts

Showing posts from July, 2010

பாண்டிருப்பில் அந்தோனியார் ஆலயம் திறந்துவைப்பு! (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

Image
அம்பாறை மாவட்டத்திலுள்ள பாண்டிருப்பு கிராமத்தில் புனித அந்தோனியார் ஆலயம் ஒன்று இன்று திறந்து வைக்கப்பட்டு திரு நாள் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது. இவ்வாலயத்தை மட்டக்களப்பு-திருமலை மறை மாவட்ட துணை ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை சம்பிரதாய முறைப்படி திறந்து வைத்தார். இதில் கல்முனை பங்குத் தந்தை யூட் ஜோன்ஸனும் கலந்து கொண்டார். இந்த ஆலயம் கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப் பேரலை அனர்த்தத்தின் போது முற்றாக சேதடைந்திருந்தது. Click to open image! Click to open image! Click to open image! Click to open image! Click to open image! Click to open image! Click to open image! Click to open image!   ஆனால் இதன் புனரமைப்புக்காக அ...

மட்டு.சிறைச்சாலையில் பள்ளிவாசல் திறந்து வைப்பு

Image
மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்படுகின்ற முஸ்லிம் கைதிகளின் சமய வழிபாடுகளுக்காக ஆறு இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசல் திறந்து வைக்கப்பட்டது. மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜும்மா பள்ளிவாசலின் தலைவரும் மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தகர் சங்கத் தலைவருமான பிலால் ஹாஜியாரின் வேண்டுகோளின் பேரில் கொழும்பிலுள்ள தனவந்தர் யாஸீன் பாய் என்பவரின் நிதியுதவியுடன் இப்பள்ளிவாசல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக்கல்லூரியின் அதிபர் அப்துல்லா றஹ்மானி ஹஸரத்தின் இதனைத் திறந்து வைத்துத் தொழுகை நடத்தினார். இத்திறப்பு விழாவில் காத்தான்குடி பள்ளிவாசல் சம்மேளன பிரதிநிதிகள், உலமாக்கள் ,தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா, மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் கித்சிறி பண்டார ஆகியோர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நீதிமன்றத்தை விமர்சித்தார் என ஹக்கீம் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முயற்சி ?

Image
நீதிமன்றம் தொடர்பாக காணப்படும் நம்பிக்கை சீர்குலைந்திருப்பதாகவும் அந்த நம்பிக்கையை வெளிக்காட்டும் தன்மைகள் தற்போது காணப்படவில்லை எனவும் நீதிமன்றத்தை விமர்சித்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமிற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியுமா என்பதை உடனடியாக ஆராய்ந்து அறியத்தருமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன என இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது என்று பல இணையத்தளயங்களில் இந்த செய்தி வெளியாகியுள்ளது பாக்கீர் மாக்கார் நிலையத்தினால் கொழும்பு வெள்ளவத்தை மெராய்ன் ரைவ் விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் உரையாற்றும்போதே நீதிமன்றத்தின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் விமர்சனங்களை முன்வைத்திருந்தார் விரிவாக பார்க்க இந்தக் கருத்தரங்கில் அமைச்சர் டியூ குணசேகர, மேல் மாகாண அமைச்சர் உதய கம்மன்பில, ஐக்கிய தேசியக் கட்சியின் பதில் தலைவர் கரு ஜயசூரிய போன்ற அரசியல்வாதிகளும் கலந்துகொண்டனர். நீதியரசர் சரத் என் சில்வ...

தேங்காய்க்குள் கை உருவம் கல்முனையில் அதிசயம்

Image
கல்முனை  பொலிஸ் பிரிவுக்குள் உள்ள கல்முனை குடியில் சமையலுக்கு வாங்கிய  தேங்காய்க்குள் ஆறு விரல் கொண்ட மனித உருவக் கை ஓன்று  கண்டு பிட்டிக்கப் பட்டுள்ளது. இந்த அதிசயத்தை மக்கள் பார்வை இட்டு வருகின்றனர் .

குடியேற்றப்பட்ட கல்முனை வீட்டுத் திட்டத்தில் குடி நீர் பிரச்சினை

Image
சுனாமியால் பாதிக்கப்பட்டு மக்கள் குடியேற்றப்பட்ட கல்முனை வீட்டுத் திட்டத்தில் குடி நீர் பிரச்சினை பெரும் பிரச்சினையாக உள்ளது.   500 க்கும்  மேற்ற்பட்ட குடும்பங்கள் வாழும் வீட்டுத் திட்டத்தில் ஒரே ஒரு குழாய் நீர் பெரும் வசதி உள்ளது. இதில் போதுமான நீர் கிடைப்பதில்ல இதற்கும் மேலாக கல்முனை மாநகர சபை ஒரு நாளைக்கு ஒரு பவுசர் நீர் வழங்குகின்றன. இதி நீரை பெற  மக்கள் முண்டியடிக்க வேண்டிய நிலை உள்ளது. கல்முனை இறை வெளிக்கண்டது வீடமைப்பு திட்டத்திற்கு குடி நீர் வழங்குவதில்  வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கும், நீர் வளங்கள் அதிகார சபைக்கும் இடையே இழுபறி நிலை காணப்படுகின்றது, வாக்கு கேட்கும் வங்குரோத்து  அரசியல் வாதிகள்  நீருக்காக இம்மக்கள் படும் அவஸ்தைக்கு என்ன செயப் போகின்றார்கள்.

கல்முனை பாளிகாவுக்கு கிழக்கு கல்வி அமைச்சர்

Image
கடந்த சனிக்கிழமை  கல்முனை பாலிகா மகளிர் கல்லூரி  அதிபர் காரியாலயம் தீப்பிடித்து நாசமானது. அதனைப் பார்வையிட கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமல வீர திசாநாயக்க  இன்று கல்லூரிக்கு விஜயம் செய்தார். சேத விபரம்  அடங்கிய  மகஜரை கல்லூரி அதிபர் திருமதி,லியாகத் அலி  அமைசருக்கு கையளித்தார். அமைச்சர் சேதமடைந்த  அதிபர் அலுவலகத்தை  பார்வை இட்டார்.

கிழக்கு மாகாண தமிழ் செம்மொழி விழா

Image
கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் 2010க்கான மாகாண தமிழ் செம்மொழி விழா  திங்கள் காரைதீவில் கோலாகலமாக நடைபெற்றது.. கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.எ.நிசாம் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் அதிதிகளான கிழக்கு முதலமைச்சர்  சிவ.சந்திரகாந்தன் தமிழ்நாடு புதுவை பல்கலைக்கழக தலைவர் முனைவர் அ.அறிவுநம்பி சிங்கப்புர் முனைவர் எ.வெங்கடேசன் பேராசிரியர்களான எஸ்.தில்லைநாதன் அ.சண்முகதாஸ் மனோன்மணி சண்முகதாஸ் உஸ்.சிவலிங்கராசா உபவேந்தர்களான கே.பிரேம்குமார் எம்.இஸ்மாயில் கிழக்கு கல்வியமைச்சின் பிரதிச் செயலாளர் எஸ்.தண்டாயுதபாணி  உள்ளிட்டோர்  அழைத்துவரப்படுவதையும் காரைதீவு சுவாமி விபுலானந்தர் மணிமண்டபத்தில் சிங்கப்புர் முனைவர் எ.வெங்கடேசன் சுவாமியியன் திருவுருவசட் சிலைக்கு மாலைஅணிவிப்பதையும் அதிதகள் சுவாமி பிறந்த வீடிலுள்ள நூதனவாலையைப் பார்வையிடுவதையும் படங்களில் காணலாம்.;

சாய்ந்தமருது மத்தியஸ்த தின விழா

Image
சாய்ந்தமருது மத்தியஸ்த குழாம் ஏற்பாடு செய்த மத்தியஸ்த   தின விழா சாய்ந்தமருது அல்-`ஹிலால்  மகா வித்தியாலயத்தில்  நேற்று முன்தினம்  நடை பெற்றது. கௌரவ  அதிதியாக கலந்து கொண்ட கல்முனை உயர் நீதி மன்ற ஆணையாளர் பீ.சசி மகேந்திரன்  உரை நிகழ்த்துவதையும் ,மத்தியஸ்த சபை அங்கத்தவர்களையும், இங்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட கல்முனை உயர் நீதி மன்ற நீதிபதி  திருமதி வீ.சந்திரமணி மத்தியஸ்த சபை தலைவர் அலியார் முசம்மிலுக்கு   சான்றிதழ் வழங்குவதையும் காணலாம்.

கிழக்குமாகான தமிழ் தினப் போட்டி இன்று ஆரம்பம்

Image
கிழக்கு மாகாண அகில இலங்கை தமிழ் தினப் போட்டி இன்று 18.07.2010 கல்முனை கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலையில்  ஆரம்பமானது. கிழக்குமாகான கல்விப் பணிப்பாளர்  எம்.டி.நிசாம் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

கல்முனை பாளிகாவில் அதிபர் அலுவலகம் எரிந்து நாசம்

Image
கல்முனை மஹ்மூத் பாலிகா மகளிர் கல்லூரியில் இடம் பெற்ற தீ விபத்தில் அதிபர் அலுவலகம் சேதம் அடைந்துள்ளது, இச்சம்பவம் சனிக்கிழமை இரவு  8.40 மணியளவில் இடம் பெற்றுள்ளது. சனிக்கிழமை மின்சாரம் தடைப்பட்டு இருந்து மீண்டும் கிடைத்த போதே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. தீ விபத்தினால் அலுவலக கணணி உட்பட பல உபகரணங்கள் எரிந்து சேதம் அடைந்திள்ளன. இச்சம்பவம் தொடர்பாக கல்லூரி அதிபர் திருமதி .லியாகத் அலி கல்முனை போலீஸ் நிலையத்தில்  மின் ஒழுக்கினால் இவ்விபத்து இடம் பெற்றுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளார். முழுமையான சேத விபரம் கல்முனை நியூஸ் இணைய தலத்தில் வெளியிடப்படும்.

புதிய மௌலவி ஆசிரியர்களுக்கு பயிற்சி செயலமர்வு

Image
கிழக்கு மாகாணத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மௌலவி ஆசிரியர்களுக்கு பயிற்சி செயலமர்வு  சனிக்கிழமை சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் இடம் பெற்றது, அம்பாறை ஜமியதுல் உலமாவின் இந்த செயலமர்வு இடம் பெற்றது,

கிப்லாவின் திசையை கணிப்பிடலாம்

Image
இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 2.56க்கு புனித மக்காவூக்கு நேராக சு+ரியன் தோன்ற உள்ளதாகவூம் அதன் மூலம் கிப்லாவின் திசையை சரியாகக் கணிக்க முடியூம் எனவூம் கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ஜுலை 16 ஆம் திகதி ஷஃபான் 3 இல் பிற்பகல் 2 மணி 56 நிமிடத்திற்கு சு+ரியன் மக்காவூக்கு நேராக உச்சம் கொடுக்கின்றது. குறித்த நேரத்தில் கோணலில்லாத தடியொன்றை நிறுத்தி வைத்து அத்தடியின் நிழலுக்கு நேராக கோடிட வேண்டும். இக்கோட்டிற்கு நேராகவே சு+ரியன் நகர்ந்து கொண்டிருக்கும். இக்கோடு காட்டும் திசையே சரியான கிப்லாவாகும். இலங்கை நாட்டில் உள்ளோர் தமது பள்ளிவாசல்கள் தக்கியா ஸாவியாக்கள் மற்றும் தொழும் இடங்களிலும் இல்லங்களிலும் உள்ள கிப்லாவின் திசையை சரிபார்த்துக் கொள்ள முடியூம். இவ்வாறு கிப்லாவின் திசையை இலகுவாக அறிந்து கொள்ளும் முறையினை முன்னாள் அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா சபையின் தலைவரும் ஹஸனிய்யா அரபுக் கலாசாலையின் முன்னாள் அதிபருமான மர்ஷுஹம் மௌலானா மௌலவி எம். ஐ. அப்துல் ஸமத் ஆலிம் மக்தூமி இலங்கையில் முதன் முறையாக அறிமுகப்படுத்தினார் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிரதம இமாம் மௌலவி எம். எஸ். எ...

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் அரசுக்குமிடையில் நல்லுறவு ஏற்பட்டுள்ளது.

Image
ரவூப் ஹக்கீம் இலங்கை அரசியலில் 40 வருடகால அனுபவம்  கொண்டவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ.இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் அரசுக்குமிடையில் நல்லுறவு ஏற்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். நெக்டெப் திட்டத்தின் அனுசரணையுடன் நிர்மாணிக்கப்பட்ட கல்முனை பொதுச்சந்தைக்கட்டிடத் திறப்பு விழா நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை மாலை பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட ரவூப் ஹக்கீம் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது; தமிழ்த்தேசிய கூட்டமைப்பை பேச்சுக்கழைத்து தனியாக பேசத்தெரிந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸையும் சந்தித்து பேசவேண்டுமென்று யாரும் சொல்லிக்கொடுக்கும் அளவுக்கு அவர் அரசியல் ஞானம் அற்றவரல்ல. எமது கட்சிக்கும் ஜனாதிபதியுடன் பேசுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இருந்தும் உங்களை சந்திக்கவேண்டுமென்பதற்காகவே நான் அவ்வழைப்பின்படி அவரைச் சந்திக்கமுடியவில்லை. ஆனால், அவரைச் சந்திக்கவில்லையென்பதற்காக அவர் எம்மை தவறாகப் புரிந்து கொள்ளாதளவிற்கு இன்று ஸ்ரீலங்கா முஸ...

கல்விக்கடல் ஜமால்தீன் அதிபர் காலமாகி விட்டார்

Image
கல்முனை பிர தேசத்தின் கல்விக்கடல் நட்பிட்டிமுனையின் தங்க மூளை என செல்லமாக அழைக்கும் ஏ.எம்.ஜமால்தீன்  இன்று மாலை நட்பிட்டிமுனையில்  காலமானார். நற்பிட்டிமுனை அல்-அக்சா மகா வித்தியாலயத்தில் நீண்ட கால அதிபராக இருந்து தன சமுகத்திற்காக  அரும் பணியாற்றி கல்விப்பணிக்காக தன வாழ்நாளை அர்பணித்தவர். நற்பிட்டிமுனை கிராமத்தின் பூர்வீக வரலாற்றை தொகுத்து வெளீயீடு செய்ய இருந்த சந்தர்பத்தில் அவர் மறைந்து விட்டார்.நான்கு பிள்ளைகளின் தந்தையான  இவருக்கு இறக்கும் போது  63வயதாகும் இவரது ஜனாசா இன்று வெள்ளிக்கிழமை நற்பிட்டிமுனை போது மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது . ஜனாஸா நல்லடக்கத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

கல்முனை மாநகர சபை அமர்வு

Image
கல்முனை மாநகர சபை  முதல்வர் அல்-ஹாஜ்  மசூர் மௌலானாவின் தலைமையிலான  உத்தியோக பூர்வ அமர்வு இன்று புதுப் பொலிவுடன்  இடம் பெற்றது. அமர்வின் போது  முதல்வருக்கு பாராட்டு தெரிவித்து உரையாற்றினார்கள்.

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரிட்சை ஓகஸ்ட் 22 இல்!

Image
இலங்கை முழுவதும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்தின் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இப்பரீட்சைக்காக 3 லட்சத்து 19 ஆயிரத்து 500 மாணவர்கள் தோற்றவுள்ளனர். சிங்கள மொழி மூலம் 2 லட்சத்து 38 ஆயிரத்து 500 மாணவர்களும் தமிழ் மொழி மூலம் 81 ஆயிரம் மாணவர்களும் பரீட்சைக்கு தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கல்முனை மட்டக்களப்பு வீதியில் மின்கம்பத்துடன் வான் மோதி சாரதி பலி! ஐவர் படுகாயம்

Image
கொழும்பில் இருந்து கல்முனை நோக்கி வந்த வான் ஒன்று இன்று அதிகாலை 4.30 மணியளவில் மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் மின்கம்பத்துடன் மோதியதில் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அந்த வானில் பயணம் செய்தவர்களில், 3 பெண்கள் உட்பட ஐவர் படுகாயமடைந்து களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்த சாரதி கல்முனையைச்சேர்ந்த 38 வயதுடைய சீனித்தம்பி கலால்தீன் எனத் தெரியவந்துள்ளது. Click to open image! Click to open image! Click to open image! Click to open image! Click to open image! Click to open image!

ஹரிஸ் எம்.பி அதிதியாக கலந்து கொண்ட நிகழ்வை த.தே.கூ பகிஷ்கரிப்பு

Image
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.என்.ஹரிஸ் அதிதியாக கலந்து கொண்ட நிகழ்வை கல்முனை மாநகரசபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் பகிஷ்கரித்தனர். கல்முனை மாநகரசபையின் புதிய மேயர் மசூர் மௌலானாவை கௌரவிக்கும் நிகழ்வும் கல்முனைக்குடி பகுதியில் சந்தைக்கட்டிடமொன்று திறக்கும் நிகழ்வும் நேற்று இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினரும் கல்முனை மாநகரசபையின் முன்னாள் மேயருமான  எச்.எம்.என்.ஹரிஸ் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொள்ளவில்லை. இது தொடர்பாக கல்முனை மாநகரசபையின் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினருமான ஹென்றி மகேந்திரன் இவ்வாறு கருத்துக் கூறினார். "வடக்கு-கிழக்கு மாகாணங்களை இணைக்கக் கோரும் உரிமை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இல்லை என்று கூறும் அருகதை  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர்...

மாணவியை துஷ்பிரயோகம் செய்தாராம்! அதிபருக்கு எதிராக குற்றச்சாட்டு

Image
அம்பாறை மாவட்டத்தின் கல்முனைக் கல்வி வலயத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் மீது அப்பாடசாலையில் பயிலும் மாணவி ஒருத்தியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. பாண்டிருப்பு நாவலர் வித்தியாலய அதிபரான என்.கமலநாதன் என்பவரே இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறார். தரம் 07 பயிலும் மாணவி ஒருத்தியே சுமார் இரு மாதங்களுக்கு முன் துஷ்பிரயோகம் இவரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருக்கின்றார் என்று அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இவருக்கு எதிராக 1994 ஆம் ஆண்டும் பாலியல் குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டிருந்தது. அப்போது இவர் பாண்டிருப்பு இந்து மகா வித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையாற்றிக் கொண்டிருந்தார்.பின் வேறு பாடசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரட்டைவேடத்தை முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் ஏற்காது

Image
வடக்கு,கிழக்கை மீண்டும் இணைக்குமாறு கோரும் எந்தவித உரிமையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இல்லை. அவ்வாறு வடக்கு,கிழக்கு மீண்டும் இணைக்கப்படுவதை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ளாதென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட எம்.பி.யான ஹரீஸ் தெரிவித்துள்ளார் பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிதியமைச்சு மீதான வரவுசெலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;அரசியல் யாப்புத் திருத்தம் செய்யப்படும்போது சிறுபான்மை இனம் பாதிக்கப்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.முஸ்லிம்களின் கோரிக்கைகளும் அரசியல் யாப்பில் உள்வாங்கப்பட வேண்டும் விரிவாக பார்க்க Read the rest of this entry »

கல்முனை தமிழ் பிரதேச அபிவிருத்தி கூட்டம்

Image
கல்முனை தமிழ் பிரதேச அபிவிருத்தி சம்பந்தமாக இடம்பெற்ற வீஷேட கலந்துரையாடல் கூட்டம் 10-07-2010ம் தகதி கல்முனை தமிழ்ப்பிரிவு பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றபோது இந்நிகழ்வில் அதிதிகளாக கலந்து சிறப்பித்த கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சோ. புஸ்பராஜா பிரதேச செயலாளர் க. லவநாதன் ஆகியோர் வரவேற்கப்படுவதையும்   பொண் செல்வநாயகம் முதலமைச்சரிடம் மகஜரினை கையளிப்பதையும் நிகழ்வில் கலந்து கொண்டவர்களையும் படங்களில் காண்க. 

ஊடகவியலாளர்,மாநகர பிரதி முதல்வருக்கு பாராட்டு

Image
சாய்ந்தமருது பிளைங் ஹோர்ஸ் விளையாட்டு கழகத்தின் 28 வது ஆண்டு விழா வெள்ளிக்கிழமை சாய்ந்தமருது அஸ்ரப் ஞாபகார்த்த மைதானத்தில்  கழகத் தலைவி ஐ.எல்.ஏ.மஜீத் அதிபர் தலைமையில்  நடை பெற்றது. இவ்விழாவில் கல்வி,விளையாட்டு மற்றும் ஊடகத்துறைக்கு பங்காற்றிய ஆசிரியர் எம்.ஐ.எம்.அஸ்கர், கல்முனை மாநகர சபைக்கு பிரதி முதல்வராக நியமனம் செயப்பட்டுள்ள எ.அப்துல் பசீர் ஆகியோர் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.கழக செயலாளர் கான் உட்பட முக்கிய அதிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

தென் கிழக்கு பல்கலைகழகத்தின் சமூகவியல் பீடாதிபதி மௌலவி , கலாநிதி கே.எம்.எச். காலித்தீன் வபாதானார்

Image
தென் கிழக்கு பல்கலைகழகத்தின் சமூகவியல் பீடத்தின் பீடாதிபதியாக மௌலவி , கலாநிதி கே . எம் .எச் காலித்தீன் நேற்று மாலை 4.00 மணியளவில் ராஜகிரியவில் அமைந்துள்ள அவரின் இல்லத்தில் வபாதாகியுள்ளார் இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் இவர் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கிண்ணியா ஈச்சந்தீவு கிராமத்தில் 1944 ஆண்டு பிறந்தார் இவர் ஒரு இஸ்லாமிய மற்றும் பொதுத்துறை புத்திஜிவியுமாவார் இவர் தனது ஆரம்ப கல்வியை முடித்து அறபு கல்லூரி ஒன்றில் மௌலவி பட்டம் பெற்ற இவர் தனது உயர் கல்வியை இலங்கையின் மூன்று பல்கலைகழகங்களில் பெற்றுள்ளார் விரிவாக பார்க்க இவர் யாழ்ப்பாண பல்கலைகழகத்திலும் விரிவுரையாளராக கடமையாற்றியுள்ளார் என்பது குறிபிடதக்கது இவர் எழுத்து உலகுக்கு பல படைப்புகளை தந்துள்ளார் அவற்றில் இஸ்லாமும் முஸ்லிம் சமுகமும்- உலக முஸ்லிம்கள் ஒரு நோக்கு , இலங்கை முஸ்லிம்களின் வரலாறு , இலங்கை முஸ்லிம்களின் கல்வி , அரசியல் வரலாற்றில் கலாநிதி பதியுதீன் மஹ்மூத் அவர்களின் பங்களிப்பு போன்ற ஆக்கங்கள் குறிபிடதக்கவை இவரின் ஜனாஸா ராஜகிரியவில் அமைந்துள்ள 94/2 மொரகஸ்முள்ள என்ற விலாசத்தில் அவரின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது...

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டி திருமலையில் ஆரம்பம்!

Image
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான வருடாந்த விளையாட்டுப் போட்டி திருகோணமலை மக்கேசர் விளையாட்டு அரங்கில் இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது. இப்போட்டி ஓரிரு நாட்களுக்கு தொடர்ந்து இடம்பெறும். பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் மொஹான் விஜேவிக்கிரம கலந்து கொண்டு போட்டியை ஆரம்பித்து வைத்தார். இவ் விளையாட்டுப் போட்டியில் திருக்கோணமலை,மட்டக்களப்பு,அம்பாறை மற்றும் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பாடசாலை வீரர்,வீராங்கனைகள் பங்குபற்றி வருகின்றனர். இது 15 ஆவது விளையாட்டுப் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. Click to open image! Click to open image! Click to open image! Click to open image!

கல்முனை மாநகர சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்

Image
கல்முனை மாநகர சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்  வழங்கும் வைபவம்  வியாழக்கிழமை மாநகர முதல்வர் மசூர் மௌலானா தலைமையில்  இடம் பெற்றது. இங்கு ஆராட்சி உத்தியோகத்தர் உட்பட ஏழு தொழிலாளர் நியமனமும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெமீல்,பிரதி மாநகர முதல்வர் பசீர்,ஆணையாளர்  சலீம், உட்பட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

முன்னாள் பிரதியமைச்சர் மயோனை கைது செய்ய பிடியாணை உத்தரவு!

Image
தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறி இலஞ்ச ஊழல் மோசடியில் ஈடுபட்டிருக்கிறார் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் முன்னாள் உயர்கல்வித் துறைப் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபாவைக் கைது செய்ய வேண்டும் என்று கல்கிசை நீதவான் நீதிமன்றம் இன்று பிடியாணை உத்தரவு பிறப்பித்தது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க் கட்சிகளின் பொதுவேட்பாளராகப் போட்டியிட்ட முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு தேடுவதற்காக விமல் வீரவன்ஸ தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர் முஹமட் முஸாமிலுக்கு 4.2 மில்லியன் ரூபாவை இலஞ்சமாகக் கொடுக்க முற்பட்டார் என்று மயோனுக்கு எதிராக இந்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கு இன்று அழைக்கப்பட்டபோது மயோன் மன்றில் ஆஜராகவில்லை. இதை அடுத்து மயோனைக் கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது. முஸ்தபா தற்போது நாட்டில் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

துறைநீலாவணை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய உற்சவம்.

Image
துறைநீலாவணை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய உற்சவத்தின் சமுத்திர நீராடல் வைபவம்  24-06-2010ம் திகதி பிற்பகல் இடம்பெற்றபோது சிவஸ்ரீ நல்லராசா குருக்கள் தலமையில் கிரியைகள் இடம்பெறுவதையும் நிகழ்வில் கலந்து கொண்ட பொதுமக்களையும் மற்றும் அடியார்கள் பக்தியுடன் தீர்தமாடுவதையும் படத்தில் காண்க