கல்முனை மட்டக்களப்பு வீதியில் மின்கம்பத்துடன் வான் மோதி சாரதி பலி! ஐவர் படுகாயம்
கொழும்பில் இருந்து கல்முனை நோக்கி வந்த
வான் ஒன்று இன்று அதிகாலை 4.30 மணியளவில் மட்டக்களப்பு-கல்முனை பிரதான
வீதியில் மின்கம்பத்துடன் மோதியதில் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அந்த வானில் பயணம் செய்தவர்களில், 3
பெண்கள் உட்பட ஐவர் படுகாயமடைந்து களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில்
சேர்க்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்த சாரதி
கல்முனையைச்சேர்ந்த 38 வயதுடைய சீனித்தம்பி கலால்தீன் எனத்
தெரியவந்துள்ளது.
Comments
Post a Comment