பாண்டிருப்பில் அந்தோனியார் ஆலயம் திறந்துவைப்பு! (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

அம்பாறை மாவட்டத்திலுள்ள பாண்டிருப்பு கிராமத்தில் புனித அந்தோனியார் ஆலயம் ஒன்று இன்று திறந்து வைக்கப்பட்டு திரு நாள் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.


இவ்வாலயத்தை மட்டக்களப்பு-திருமலை மறை மாவட்ட துணை ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை சம்பிரதாய முறைப்படி திறந்து வைத்தார்.


இதில் கல்முனை பங்குத் தந்தை யூட் ஜோன்ஸனும் கலந்து கொண்டார். இந்த ஆலயம் கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப் பேரலை அனர்த்தத்தின் போது முற்றாக சேதடைந்திருந்தது.


ஆனால் இதன் புனரமைப்புக்காக அரசுத் தரப்பாலோ, அரச சார்பற்ற நிறுவனங்களாலோ , இதுவரை எவ்வித உதவிகளும் செய்யப்பட்டிருக்கவில்லை.

இதனால் கடந்த 05 வருடங்களாக ஆலயம் மீள் அமைக்கப்படாமல் இருந்தது. பின்னர் இப்பிரதேச இந்து-கிறிஸ்தவ மக்களின் முழுப் பங்களிப்புடன் இவ்வாலயம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்