தென் கிழக்கு பல்கலைகழகத்தின் சமூகவியல் பீடாதிபதி மௌலவி , கலாநிதி கே.எம்.எச். காலித்தீன் வபாதானார்




தென் கிழக்கு பல்கலைகழகத்தின் சமூகவியல் பீடத்தின் பீடாதிபதியாக மௌலவி , கலாநிதி கே . எம் .எச் காலித்தீன் நேற்று மாலை 4.00 மணியளவில் ராஜகிரியவில் அமைந்துள்ள அவரின் இல்லத்தில் வபாதாகியுள்ளார் இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் இவர் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கிண்ணியா ஈச்சந்தீவு கிராமத்தில் 1944 ஆண்டு பிறந்தார் இவர் ஒரு இஸ்லாமிய மற்றும் பொதுத்துறை புத்திஜிவியுமாவார் இவர் தனது ஆரம்ப கல்வியை முடித்து அறபு கல்லூரி ஒன்றில் மௌலவி பட்டம் பெற்ற இவர் தனது உயர் கல்வியை இலங்கையின் மூன்று பல்கலைகழகங்களில் பெற்றுள்ளார் விரிவாக பார்க்க

இவர் யாழ்ப்பாண பல்கலைகழகத்திலும் விரிவுரையாளராக கடமையாற்றியுள்ளார் என்பது குறிபிடதக்கது இவர் எழுத்து உலகுக்கு பல படைப்புகளை தந்துள்ளார் அவற்றில் இஸ்லாமும் முஸ்லிம் சமுகமும்- உலக முஸ்லிம்கள் ஒரு நோக்கு , இலங்கை முஸ்லிம்களின் வரலாறு , இலங்கை முஸ்லிம்களின் கல்வி , அரசியல் வரலாற்றில் கலாநிதி பதியுதீன் மஹ்மூத் அவர்களின் பங்களிப்பு போன்ற ஆக்கங்கள் குறிபிடதக்கவை இவரின் ஜனாஸா ராஜகிரியவில் அமைந்துள்ள 94/2 மொரகஸ்முள்ள என்ற விலாசத்தில் அவரின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது -அவர்கள் செய்த சேவைகளை அல்லாஹ் ஏற்றுகொண்டு அவரின் தவறுகள் அவரது குற்றம் குறைகளை என்பன வற்றை அல்லாஹ் மன்னிப்பானாக- ஆமீன்



Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்