கிப்லாவின் திசையை கணிப்பிடலாம்
இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 2.56க்கு புனித மக்காவூக்கு நேராக சு+ரியன் தோன்ற உள்ளதாகவூம் அதன் மூலம் கிப்லாவின் திசையை சரியாகக் கணிக்க முடியூம் எனவூம் கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
ஜுலை 16 ஆம் திகதி ஷஃபான் 3 இல் பிற்பகல் 2 மணி 56 நிமிடத்திற்கு சு+ரியன் மக்காவூக்கு நேராக உச்சம் கொடுக்கின்றது. குறித்த நேரத்தில் கோணலில்லாத தடியொன்றை நிறுத்தி வைத்து அத்தடியின் நிழலுக்கு நேராக கோடிட வேண்டும். இக்கோட்டிற்கு நேராகவே சு+ரியன் நகர்ந்து கொண்டிருக்கும். இக்கோடு காட்டும் திசையே சரியான கிப்லாவாகும்.
இலங்கை நாட்டில் உள்ளோர் தமது பள்ளிவாசல்கள் தக்கியா ஸாவியாக்கள் மற்றும் தொழும் இடங்களிலும் இல்லங்களிலும் உள்ள கிப்லாவின் திசையை சரிபார்த்துக் கொள்ள முடியூம்.
இவ்வாறு கிப்லாவின் திசையை இலகுவாக அறிந்து கொள்ளும் முறையினை முன்னாள் அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா சபையின் தலைவரும் ஹஸனிய்யா அரபுக் கலாசாலையின் முன்னாள் அதிபருமான மர்ஷுஹம் மௌலானா மௌலவி எம். ஐ. அப்துல் ஸமத் ஆலிம் மக்தூமி இலங்கையில் முதன் முறையாக அறிமுகப்படுத்தினார் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிரதம இமாம் மௌலவி எம். எஸ். எம். தஸ்லிம் தெரிவித்தார்.
Comments
Post a Comment