தரம் ஐந்து புலமைப் பரிசில் பரிட்சை ஓகஸ்ட் 22 இல்!
இலங்கை முழுவதும் தரம் ஐந்து
புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி
ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்தின்
உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இப்பரீட்சைக்காக 3 லட்சத்து 19 ஆயிரத்து
500 மாணவர்கள் தோற்றவுள்ளனர்.
சிங்கள மொழி மூலம் 2 லட்சத்து 38 ஆயிரத்து
500 மாணவர்களும் தமிழ் மொழி மூலம் 81 ஆயிரம் மாணவர்களும் பரீட்சைக்கு
தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment