ஊடகவியலாளர்,மாநகர பிரதி முதல்வருக்கு பாராட்டு
சாய்ந்தமருது பிளைங் ஹோர்ஸ் விளையாட்டு கழகத்தின் 28 வது ஆண்டு விழா வெள்ளிக்கிழமை சாய்ந்தமருது அஸ்ரப் ஞாபகார்த்த மைதானத்தில் கழகத் தலைவி ஐ.எல்.ஏ.மஜீத் அதிபர் தலைமையில் நடை பெற்றது. இவ்விழாவில் கல்வி,விளையாட்டு மற்றும் ஊடகத்துறைக்கு பங்காற்றிய ஆசிரியர் எம்.ஐ.எம்.அஸ்கர், கல்முனை மாநகர சபைக்கு பிரதி முதல்வராக நியமனம் செயப்பட்டுள்ள எ.அப்துல் பசீர் ஆகியோர் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.கழக செயலாளர் கான் உட்பட முக்கிய அதிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment