Posts

நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Image
கடந்த சில வாரங்களாக நிந்தவூரில் இடம் பெற்ற அசம்பாவிதங்களுடன் தொடர்புடையவர்கள் எனக் கருதப்படுகின்றவர்களை சுற்றி வளைத்துக் கொண்ட போது பாதுகாப்புத் தரப்பினர் மேற்கொண்ட துப்பாக்கி வேட்டுக்களினாலும், அதனையடுத்து ஏற்பட்ட கலவரத்தினாலும் காயமடைந்த நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர் எம்,ஏ.எம்.தாஹிர் மற்றும் முகம்மட் இல்யாஸ் ஆகியோர்கள் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதனை படங்களில் காணலாம்.

பிறந்த நாள் வாழ்த்துக்கள்...!

Image
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது 68ஆவது பிறந்த தினத்தை இன்று கொண்டாடுகிறார். ஆலரி மாளிகையில் தனது குடும்பத்தாருடன் அவர் கேக் வெட்டி பிறந்த தினத்தை கொண்டாடியுள்ளார். மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, மகன்களாக நாமல், யோஷித மற்றும் ரோஹித ஆகியோருடன் தனது பிறந்த நாளை ஜனாதிபதி கொண்டாடுவதை படங்களில் காணலாம்.

நிந்தவூரில் பதற்றம்: ரயர் எரிப்பு ஹர்த்தால் அனுஸ்டிப்பு

Image
நிந்தவூர் கடற்கரை பகுதியில் பொதுமக்களுக்கும் விசேட அதிரடிப்படையினருக்கும் இடையில் முறுகல் நிலையொன்று ஏற்பட்டதையடுத்து அங்கு பதற்றம் நிலவுகிறது.  அத்துடன், பிரதேசத்தில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நிந்தவூர் பகுதியில் இரவு வேளைகளில் தொடர்ச்சியாக இடம்பெறுகின்ற கொள்ளை சம்பவங்களை கட்டுப்படுத்தல் மற்றும் கொள்ளையர்களை கண்டுபிடித்தல் தொடர்பில் விசேட விழிப்பு குழுவொன்று அமைக்கப்பட்டு ஆராயப்பட்டது. இதன் பிரகாரம் இரவு 9 மணிக்கு பின்னர் வீடுகளிலிருந்து வெளியே செல்கின்றவர்கள் தங்களுடைய ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களை எடுத்துசெல்லவேண்டும் என்று அந்த குழு தீர்மானித்து. அந்த தீர்மானத்தை பள்ளிவாயில்களின் ஊடாக பொதுமக்களுக்கு அறிவித்தது. இந்நிலையில், விசேட அதிரடிப்படையினர் அணியும் ஆடைகளை ஒத்த ஆடைகளை அணிந்து நிந்தவூர் கடற்கரை பகுதிக்கு வந்த நான்கு அல்லது ஐந்து பேர் அடங்கிய குழுவினர் கடற்கரையில் வைத்து ஆடைகளை மாற்றிக்கொண்டு நேற்றிரவு ஊருக்குள் வருவதை கண்ட பொதுமக்கள் அவர்களை சுற்றிவளைத்து ஆள் அடையா...

யுனிசெப் நிறுவனம் நடாத்தும் சர்வதேச சிறுவர் தின இலங்கைக்கான நிகழ்வு மருதமுனையில்

Image
யு.எம்.இஸ்ஹாக் யுனிசெப் நிறுவனம் நடாத்தும் சர்வதேச சிறுவர் தின இலங்கைக்கான நிகழ்வை கிழக்கு மாகாணத்தில்  நடாத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஐக்கியநாடுகள் சிறுவர் நிதியம் செயற்படும் நாடுகளில் சரவதேச சிறுவர் தின நிகழ்வுகளை யுனிசெப் நிறுவனம் கொண்டாடி வருகின்றது. யுனிசெப் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள  இலங்கைக்கான சர்வதேச சிறுவர் தின விழா  இவ்வருடம் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்ட கல்முனை கல்வி வலயத்தில் உள்ள மருதமுனை சம்ஸ் மத்திய கல்லூரியில் எதிர்வரும் 20.11.2013 ஆந் திகதி நடாத்துவதென உத்தேசிக்கப்பட்டுள்ளது. கடந்த  திங்கட் கிழமை 11 ஆந் திகதி கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஸாம் தலைமையில்  யுனிசெப் இணைப்பாளர் எம்.எம்.நிபால் ,கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர்  யு.எல்.எம்.ஹாஸிம், பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி புள்ளநாயகம் ,திருக்கோயில் வலயக்கல்விப் பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன் உட்பட வலயக்கல்வி அலுவலகங்களின்  பிரதிநிதிகள் அடங்கிய குழு மேற்படி விழாவை நடாத்துவதற்கான  சாத்தியவளங்கள் பற்றி  ஆராய்ந்...

மூதூர் அஸ்ரின் ஷீமா புலமை பரிசில் பரீட்சையில் சித்தி

Image
மூதூர் தி/அஸ்ரப் வித்தியாலய மாணவி  செல்வி அறூஸ்  அஸ்ரின் ஷீமா  இம்முறை நடை பெற்ற ஐந்தாம் தர  புலமை பரிசில்  பரீட்சையில்  163 புள்ளிகளை பெற்று  சித்தியடைந்துள்ளார். இவர்  அப்துல் அரூஸ்  சுசானா  தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வியாவார் .

அட்டாளைச்சேனை தேசியக் கல்விக் கல்லூரியில்"கனியூம் கனா " கவிதை நூல் வெளியீட்டு விழா

Image
யூ.எம்.இஸ்ஹாக் அட்டாளைச்சேனை தேசியக் கல்விக்  கல்லூரி  விரிவுரையாளர்களும் ஆசிரியப் பயிலுனர்களினதும்  ஆக்கத்தில் உருவான "கனியூம் கனா " கவிதை நூல் வெளியீட்டு விழா  தேசியக் கல்விக்  கல்லூரி கேட்போர் கூடத்தில் செவ்வாய்கிழமை  2013.11.19 ஆந்  திகதி  பீ.ப  2.30 க்கு நடை பெறவூள்ளது. விரிவூரையாளர்  அஷ்செய்க்  ஏ.எல்.நாசீர்கனி  தலைமையில் நடை பெறவூள்ள  நிகழ்வில்  தென் கிழக்குப் பல்கலைகழக  மொழியியல் துறை தலைவர்  கலாநிதி ரமீஸ் அப்துல்லாஹ்  பிரதம அதிதியாகவூம்இ அட்டாளைச்சேனை தேசியக் கல்விக்  கல்லூரி பீடாதிபதி  அல் -ஹாஜ் எம்.ஐ.எம்.நவாஸ் கௌரவ   அதிதியாகவூம் இசிறப்பு அதிதிகளாக தேசியக் கல்விக்  கல்லூரி உப பீடாதிபதிகளான  எம்.ஏ.கலீல்இஎஸ்.எல்.ஏ.எஸ்.சத்தார் இ அல் -ஹஜ் எம்.எச்.எம்.மன்சு+ர்  ஆகியோரும்  மற்றும் விசேட அதிதிகளாக  இணைப்பாளர்கள்இபீடத் தலைவர்கள்இசிரேஸ்ட விரிவூரையாளர்கள் கலந்து கொள்ளவிருப்பதாக  விரிவூரையாளர்  அஷ்செய்க்  ஏ.எல்.நாசீர்கனி தெரிவித்தார்.

மக்கள் போரம் நிகழ்சியும் ஊடகவியலாளர்கள் கலந்துரையாடலும்

Image
  முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையினால் 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி வெளியிடப்பட்ட பெண்கள் உரிமை மற்றும் பாதுகாப்பு தொடர்பான 1325 பிரேரணை தொடர்பான மக்கள் போரம் நிகழ்சியும் ஊடகவியலாளர்கள் கலந்துரையாடலும் நேற்று கல்முனை கிறிஸ்தா இல்லத்தில் நடைபெற்றது. முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் பிரதான செயற்பாட்டாளர் தேசபந்து கலாநிதி ஜெசீமா இஸ்மாயீல் அவர்களின் பங்குபற்றலுடன் பிராந்திய இணைப்பாளர் எம்.எஸ்.ஜலீல் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. இந்த மக்கள் போரம் ஒன்று கூடலில் அம்பாறை, மட்டக்களப்பு, புத்தளம் ஆகிய மாவட்டங்களிலிருந்து பிரதேச செயலாளர்கள், வைத்தியர்கள், சட்டத்தரணிகள், விரிவுரையாளர்கள், ஊடகவியலாளர்கள், சமயத் தலைவர்கள், குவாசி நீதிபதிகள், மத்தியஸ்த சபையினுடைய பிரதிநிதிகள், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், கிராமிய அபிவிருத்தி அமைப்புக்களின் தலைவர்கள் உட்பட பெருந்தொகையான அதிதிகள் கலந்த கொண்டனர். விஷேடமாக இந்த அரங்கில் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்...

கல்முனை மாநகர புதிய முதல்வருக்கு வரவேற்பு

Image
கல்முனை முதல்வராக புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதி செயலாளர் நாயகமும் சிரேஷ்ட சட்டத்தரணியு மான நிசாம் காரியப்பர் எதிர்வரும் திங்கட்கிழமை (18.11.2013) காலை 9 மணிக்கு கல்முனை மாநகர முதல்வர் அலுவலகத்தில் தனது கடமையை பொறுப் பேற்கவுள்ளார். இந்நிகழ்வில் புதிய முதல்வரை கல்முனைக்குடி முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாசலில் இருந்து மாநகர சபைவரை வரவேற்று அழைத்துச்செல்லப்படவுள்ளார். இவ்வரவேற்பினை பள்ளிவாசல்கள் சம்மேளனங்கள், வர்த்தக சமூகங்கள், விளையாட்டு கழகங்கள், பொது அமைப்புக்கள், தன்னார்வ தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர். இதே வேளை  எதிர்வரும் 24ஆம் திகதி  கல்முனை பிரதான வீதியில்  பெறவுள்ளது  இக்கூட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கலந்து கொள்ளவுள்ளார் . மறு தினம் 25ஆந்  திகதி கல்முனை மாநகர சபையின் ஐந்தாவது   முதல்வர் தலைமயிலான  முதலாவது அமர்வு இடம் பெறவுள்ளது. 

அரசியலும் – இலக்கியமும்

Image
ஏ.எம்.பறகதுல்லா  அரசியல் ஒரு சாக்கடை என்றும் அரசியல் வாதிகள் தவறிழைப்பவர்கள் என்றும் எதிலுமே தொடர்புபடாத சிலர் பேசுவதுண்டு. தேர்தல் காலங்களில் வேட்பாளர்களுக்குள்ளும் ஆதவளர்களுக்குள்ளும் மோதல்கள் வருவது ஒரு சாதரணமாகவே கருதப்படுகின்றது. தேர்தலுக்கு பின்னர் அவர்கள் ஒன்றிணைந்து விடுவதும் பழகிப்போன விடயமாக இருக்கிறது. வேறுபட்ட கட்சி பிரதிநிகள் பொது சபைகளில் ஓன்று கூடும்பொது அவர்களுக்குள் சில வேளைகளில் மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டும் ஒருவரை மற்றொருவர் தாக்கியும் பேசுவது பழகிப்போன விடயமே எனலாம்.   இன்னும் சந்திகளிலும் ,  கடைகளிளலும் அடிக்கடி சந்தித்துக்கொள்ளும் சிலர் யாராவது ஒரு அரசியல்வாதியின் பெயரை உச்சரித்து அவரை தாறுமாறாக விமர்சிப்பதையும் காணக்கூடியதாக இருக்கும். ஆனால் அவர்களால் விமர்சிக்கப்படும் குறித்த அரசியல்வாதியினை நேரில் காணும் சந்தர்ப்பம் கிடைத்தால் அவருடன் கைகுலுக்கவும் அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுக்கவும் முந்திக்கொள்வதையும் பல தடவைகளில் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.   மிக நீண்ட காலமாக இலக்கியத்துறை சார்ந்த எழுத்தாளர் நண்பர்களுடன் பழகும் வாய்...

நற்பிட்டிமுனை கிராமத்தில் அரச உத்தியோகத்தர்களின் விபரங்கள் அடங்கிய ஆவணப்படுத்தல் நூல் வெளியிட்டு வைக்கப் படவுள்ளது..

Image
யு.எம்.இஸ்ஹாக்  கல்முனை மாநகர சபைக்குட்பட்ட நற்பிட்டிமுனை  கிராமத்தில்  அரச ஊழியர்களின் உத்தியோகத்தர்களின் விபரங்கள் அடங்கிய  ஆவணப்படுத்தல்  நூல் வெளியிட்டு வைக்கப் படவுள்ளது.. நற்பிட்டிமுனை அரச ஊழியர்களின் ஒன்றியம்  கிராமத்தின்  எதிர் கால சந்ததியினரின் நலன் கருதியும்  கிராமத்தின் புகழை  நாடறியச்  செய்யும் நோக்கிலும்  இந்த மண்ணில் வாழ்ந்து மறைந்த அரச உத்தியோகத்தர்களையும், வாழ்ந்து கொண்டிருக்கும்  அரச உத்தியோகத்தர்களையும்  கௌரவப்படுத்தி  அவர்களின் விபரங்கள் அடங்கிய  ஆவணப் படுத்தல் நூலுருவாக்கம் செய்யவுள்ளனர். அதன் அடிப்படையில்  # இன்று வரைக்கும்  அரச திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் ,அமைச்சுக்கள் ,அதிகார சபைகள் மற்றும் சபை கல் போன்றவற்றில் பணியாற்றியவர்கள்,பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள்  # கிராமத்தில் பிறந்து தொழில்வாய்ப்பு பெற்று  திருமண நிமித்தம் மற்றும் வேறுகாரணங்களுக்காக  வெளியூர்களுக்கு சென்றவர்கள்  # வெளியூர்களில் இருந்து அரச ஊழியர்களாக நற்பிட்டிமுனை கிரா...

பிரதிக் கல்விப் பணிப்பாளருக்கு மருதமுனையில் பாராட்டு விழா

Image
யு.எம்.இஸ்ஹாக்  மருதமுனை  கமு/ அல் -ஹம்றா  வித்தியாலயத்தின்  முன்னாள் அதிபரும் கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தின்  முகாமைதுவதுக்குப் பொறுப்பான  பிரதிக்கல்விப் பணிப்பாளருமான பீ.எம்.முகம்மது பதுறுதீன் அவர்களுக்கு  இலங்கை கல்வி நிருவாக சேவைக்கு  பதவி உயர்வு பெற்றமைக்காக  மருதமுனை அல் -ஹம்றா  கல்வி சமூகத்தினர் பாராட்டி கெளரவிக்கவுள்ளனர் . இந்த பாராட்டு விழா  எதிர் வரும் 21.11.2013 திகதி வியாழக் கிழமை மருதமுனை அல் -ஹம்றா வித்தியாலய அதிபரும் ஏற்பாட்டாளருமான  ஏ.குனுக்கதுல்லா  தலைமையில் மருதமுனை அல் -ஹம்றா வித்தியாலயத்தில் நடை பெறவுள்ளது .

சம்மாந்துறையை சேர்ந்த ஒருவர் துப்பாக்கி ஒன்றுடன் மருதமுனை விசேட அதிரடிப்படையினரால் கைது

Image
யு.எம்.இஸ்ஹாக்  கல்முனை பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட மருதமுனை பிரதேசத்தில் வைத்து  சம்மாந்துறையை சேர்ந்த ஒருவர் துப்பாக்கி ஒன்றுடன் மருதமுனை விசேட அதிரடிப்படையினரால் கைது  செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று 13.11.2013 மாலை 5.00 மணிக்கு இடம் பெற்றுள்ளது. கைது செய்யப்பட்டவரிடமிருந்து எஸ்.எல்.ஆர்  துப்பாக்கி ஒன்றும், ரவைக்கூடு ஒன்றும்,27 ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன்  கைது செய்யப்பட்டவர்  விசேட அததிரடிப்படயினரால் கல்முனை பொலிஸ்  நிலையத்தில் ஒப்படைக்கப் பட்டுள்ளார்  இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது  விசேட அதிரடிப்படையினரின் விசேட புலனாய்வு பிரிவினர் கைது செய்யப்பட்ட நபருடன் ஆயுத விற்பனை தொடர்பான தொடர்புகளை  வைத்து  விலைபேசி  குறித்த ஆயுதத்தை சம்மாந்துறையில்  இருந்து  மட்டக்களப்புக்கு  எடுத்துவருமாறு கூறியதற்கு அமைய கைது செய்யப்பட்டவர் முச்சக்கர வண்டி ஒன்றில் எடுத்து செல்லும் வேளையில் தான் இந்த கைது மருதமுனையில் வைத்து இடம் பெற்றுள்ளது . இந்த சம்பவம் தொடர்பாக கல்முனை பொலிசார் தீ...

அரசாங்க கட்டிடங்களில் தேசிய கொடியை பறக்கவிட அரசாங்கம் வேண்டுகோள்

Image
உச்சிமாநாடு, ஜனாதிபதியின் பதவியேற்பு 4 வருட பூர்த்தி நாளை முதல் 19ஆம் திகதி வரை இலங்கையில் நடைபெறும் 23 ஆவது பொதுநல வாய அரச தலைவர்கள் மாநாட்டையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவி ஏற்பின் 4 ஆவது வருட நிறைவு விழாவையும் முன்னிட்டு நாளை (14) முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நாடு பூராவுமுள்ள சகல அரச நிறுவனங்களின் கட்டிடங்களில் தேசிய கொடியேற்றுமாறு பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு கோரியுள்ளது. இது தொடர்பில் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர், சகல அமைச்சுக்களின் செயலாளர்கள் அடங்கலான சகல அரச நிறுவன தலைவர்களுக்கும் சுற்று நிருபம் ஊடாக அறிவித்துள்ளார். இதேபோன்று தனியார் நிறுவனங்கள், வீடுகள் என்பவற்றிலும் தேசிய கொடியேற்றுமாறு அரசாங்கம் கோரியுள்ளது.

நீதிமன்றத்தினுள் கையடக்க தொலைபேசி ஒலி1000 ரூபா தண்டப்பணம்

Image
நீதிமன்ற விசாரணையின்போது நீதிமன்றத்தினுள் கையடக்க தொலைபேசி ஒலி எழுப்பிய குற்றத்திற்காக நபர் ஒருவருக்கு 1000 ரூபா தண்டப்பணம் விதித்து கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.யூட்சன் இன்று செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார். நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்த கல்முனைக்குடியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கே இவ்வாறு தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது. குறித்த நபர் தண்டப்பணத்தை செலுத்த தவறும் பட்சத்தில் ஒரு மாத கால சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டுமெனவும் நீதவான் இதன்போது உத்தரவிட்டார்.

நற்பிட்டிமுனை அஸ்ரப் விளையாட்டு மைதான அரங்கின் அவலம்

Image
யு.எம் .இஸ்ஹாக்  நற்பிட்டிமுனை அஸ்ரப் விளையாட்டு மைதான அரங்கின் அவலம் என்ற தலைப்புடன் வெளியாகிய செய்திக்கு கல்முனை மாநகர சபையின் நட்பிட்டிமுனையை சேர்ந்த   எதிகட்சி உறுப்பினர் ஏ.எச்.ஏ.நபார்(ஐ.தே .க )  தரும் விளக்கம் .................. ஊருக்கும் என்னை ஒரு மாநகர சபை உறுப்பினராக்கிய மக்களுக்கும் என்றும் அடிபணிந்தவன் கட்டுப்பட்டவன்!!! பிற்போக்குத்தனமான அரசியல் சிந்தனை படைத்த அரசியல் வாதிகளின் நடத்தைகளுக்கு உள்வாங்கப்பட்ட அரசியல் முனைத்தாக்குதலில் விளைவே தவிர என்னைப் பொறுதளவில் இக் கூற்றினை முற்றிலும் மறுக்கின்றேன். ஏனெனில் இவ்விடையம் தொடர்பாக மாத்திரமின்றி அதாவது மைதானம் பொதுச்சந்தை மற்றும் நூலகம் சம்மந்தமான பிரச்சினைகளை மாநகர சபையின் முதலாவது கூட்டத்தொடர் தொடக்கம் கடந்த இரண்டு வருடங்கள் சபையில் எண்ணிறைந்த தடவைகள் பேசப்பட்டும் நூலக பிரச்சினை மாத்திரம் முதலாம் கட்ட வேலை முடிவுற்று திறக்கும் தறுவாயில் இருக்கின்றது. ஆனால் கடந்த வருட மாநகர சபையின் ஒரு கோடி ரூயஅp;பா ஊர்களுக்கான அபிவிருத்தி ஒதுக்கீட்டில் நற்பிட்டிமுனைக்கு ஏழு இலட்சம் ரூயஅp;பா மாத்திரம் ஒதுக்கீ...

“கிழக்கின் வெற்றிப் பாதை” திருமலையில் வெளியீட்டு விழா

Image
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பு, நிர்மாணம், கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சு லேக்ஹவுஸ் நிறுவனத்துடன் இணைந்து வெளியிடும் உத்தியோகப் பத்திரிகையான “கிழக்கின் வெற்றிப் பாதை” பத்திரிகையின் வெளியீட்டு விழா திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது. கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் எம். எஸ். உதுமா லெப்பையின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்கிரம, முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் ஆகியோர் இவ் விழாவில் பிரதம அதிதிகளாக கலந்து கொள்கின்றனர். இவ்விழாவில் கிழக்கு மாகாண சபை தவிசாளர் ஆரியபதி கலபதி, லேக்ஹவுஸ் நிறுவன ஆசிரியர் பீட பணிப்பாளர் சீலரட்ண செனரத், மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் விசேட அதிதிகளாக பங்குபற்றுகின்றனர். மஹிந்த சிந்தனை தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண வீதியபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணம், கிராமிய மின்சாரம், நீர்வழங்கல் அமைச்சினால் முன்னெடுக்...

சனல்4 ஊடகவியலாளர் கெலும் மக்ரே இலங்கையை சென்றடைந்தார்! எதிராக கட்டுநாயக்கவில் ஆர்ப்பாட்டம்

Image
சனல்4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் கெலும் மக்ரே இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். சற்று முன்னர் கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். மக்ரே இலங்கைக்கு எதிராக சில காணொளிகளை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, மக்ரேவின் இலங்கை விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விமான நிலையத்திற்கு அருகாமையில் சிலர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனின் ஊடகக் குழுவில் மக்ரேவும் உள்ளடங்குகின்றார். சனல் 4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர்களுக்கு எதிராக கட்டுநாயக்கவில் ஆர்ப்பாட்டம் சனல் 4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர்களான கெலும் மக்ரே, ஜொனத்தன் மில்லர் உட்பட அந்த நிறுவனத்தின் மூன்று ஊடகவியலாளர்களுக்கு எதிராக கட்டுநாயக்கவில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. கெலும் மக்ரே உட்பட சனல் 4 தொலைக்காட்சியின் ஊடகக் குழு இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பொழுது விமான நில...

இளவரசர் சாள்ஸ் பிறந்த தினத்தை இலங்கையில் கொண்டாட ஏற்பாடு-

Image
பிரிட்டனின் முடிக்குரிய இளவரசர் சாள்ஸ் தமது துணைவியார் கெமிலா சீமாட்டியுடன் பொதுநல வாய நாடுகளின் அரசாங்கத் தலை வர்களின் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக இம்மாதம் 14ம் திகதி இலங்கை வரவுள்ளார். அன்றைய தினம் இளவரசர் சாள்ஸின் 65ஆவது பிறந்த தினமாகும். தனது 65ஆவது பிறந்த தினத்தை இளவரசர் சாள்ஸ் தனது பாரியாருடன் இலங்கையிலுள்ள தனது நண்பர்கள் மற்றும் அரசாங்கத் தலைவர்களுடன் கொண்டாடுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. இவ்வுச்சிமாநாட்டின் போது இளவரசர் சாள்ஸ் பல அரசாங்கத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவார். 87 வயதான பிரிட்டிஷ் எலிசபத் மகாராணியார் 22 ஆவது உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள இருந்த போதிலும் அவரது உடல் நிலை காரணமாக இம்முறை கலந்து கொள்ளாமல் தனது மகன் இளவரசர் சாள்ஸை அனுப்பி வைத்துள்ளார். எலிசபத் மகாராணியார் 1971ம் ஆண்டில் நடைபெற்ற முதலாவது உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் 1973 முதல் 2011 வரையிலான சகல உச்சி மாநாடுகளிலும் கலந்து கொண்டார். - See more at: http://www.athirady.com/tamil-news/news/284641.html#sthash.mnZAHvc7.dpuf

நற்பிட்டிமுனை அஸ்ரப் விளையாட்டு மைதான அரங்கின் அவலம்

Image
யு.எம்.இஸ்ஹாக்   உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தேசியத் தலைவருமான  அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவினால் 49 இலட்சம் ரூபா நிதியில் கட்டிமுடிக்கப்பட்ட  நற்பிட்டிமுனை அஸ்ரப் விளையாட்டு மைதான பார்வையாளர் அரங்கு இரண்டு வருடங்கள் கடந்தும் இன்னும் விளையாட்டு வீரர்களின் பாவனைக்கு பயன்படுத்தப்படாமலிருந்து வருகின்றது.  இன்று அந்த பார்வையாளர் அரங்கு இஸ்லாத்துக்கு முரணான செயல்கள் இடம் பெறுகின்றது.விளையாட அமைத்த அரங்கு மது,சூதுக்கான மத்திய நிலையமாக மாறியுள்ளது. மைதானம் மழை நீரால் சேறும் சகதியுமாக மாடுகள் மேயும் மேய்ச்சல் தரையாக மாறியுள்ளது.  இவற்றுக்கெல்லாம் பொறுப்புக் கூறவேண்டிய கல்முனை மாநகர சபை நிருவாகம்  பொறுப்பற்ற முறையில்  நடந்து வருகின்றது. நற்பிட்டிமுனையில் இருந்து அந்த மக்கள் போட்ட வாக்குப் பிச்சையில் வேதாந்தம் பேசும்  03 மாநகர சபை உறுப்பினர்களே இந்த அநீதிக்கு நீங்கள் சொல்லும் பதில்தான் என்ன? அதாவுல்லாவின் நிதி என்பதற்காக கவனம் எடுக்காமல் இருந்தால் நீங்கள் மூவரும் இந்த கிராமத்துக்கு செய்யும் பெரும் துரோகத் த...

நொச்சியாகாமத்தில் மீன் மழை!!

Image
அநுராதபுரம் நொச்சியாகாமம் – வெடியாவ பிரதேசத்தில் வழமைக்கு மாறாக மீன் மழை பெய்துள்ளது. நேற்று பிற்பகல் 4.30 மணியளவில் இப் பிரதேசத்தில் மீன் மழை பெய்துள்ளது. தொடர்ச்சியாக பெய்த கடும் மழையுடன் கூடிய காலநிலையில் பல மணத்தியாலங்களாக இங்கு மீன் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மீன் மழையில் போது 400 – 500 வரையான மீன்கள் தரையில் விழுந்துள்ளன.

அகில இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் நடாத்தும் எப்.ஏ கிண்ணம்-2013

Image
கல்முனை பிர்லியன்ட் கழகம் 2-1 என்ற கோல் அடிப்படையில் வெற்றி யு.எம்.இஸ்ஹாக்   அகில இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் நடாத்தும் எப்.ஏ கிண்ணம்-2013 உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் தொடராக கல்முனை பிர்லியன்ட் விளையாட்டுக்கழகத்துக்குமமுல்லைத்தீவுசென்ஜூட்ஸவிளையாட்டுக்கழகத்துக்குமிடையிலான போட்டி நேற்று முன் தினம் ஞாயிற்றுக் கிழமை முல்லைத்தீவு பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது. இந்தப் போட்டியில் கல்முனை பிர்லியன்ட் கழகம் 2-1 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்று இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகியுள்ளது.  அதன் அடிப்படையில் இரண்டாம் சுற்றுப் போட்டி கல்முனை சந்தங்கேணி பொது விளையாட்டு மைதானத்தில் எதிர்வரும் 17ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமை நடை பெறவுள்ளது. இந்த இரண்டாவது சுற்றுப் போட்டியில் கல்முனை பிர்லியன் விளையாட்டுக் கழகமும் முல்லைத்தீவு உதய சூரியன் விளையாட்டுக்கழகமும் மோதவிருப்பதாக கல்முனை பிர்லியன்ட் விளையாட்டுக்கழகத்தின் பொதுச் செயலாளர் எஸ்.ரீ.பஸ்வக் தெரிவித்துள்ளார்.

சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் வைத்திய சாலையில் சிறுநீரக சத்திர சிகிச்சையின் போது சிறு நீரகத்தில் இருந்து எடுக்கப்பட்ட 35 துண்டு சிறு நீரக கல்அகற்றப்பட்டுள்ளன.

Image
யூ.எம்.இஸ்ஹாக் -நற்பிட்டிமுனை     சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் வைத்திய சாலையில் கடந்த சனிக்கிழமை 09.11.2013 சம்மாந்துறையை சேர்ந்த  ஒரு நோயாளிக்கு செய்யப்பட்ட சிறுநீரக  சத்திர சிகிச்சையின் போது  சிறு நீரகத்தில் இருந்து எடுக்கப்பட்ட 35 துண்டு சிறு நீரக   கல்  அகற்றப்பட்டுள்ளன. அத்தோடு  இன்னுமொருவருக்கு பெரியளவிலான சிறுநீரக கல் ஓன்று சத்திர சிகிச்சி மூலம் அன்றய தினம் அகற்றப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை மூலம்  அகற்றப்பட்ட  சிறுநீரக கல்லில்  ஒன்று மான்கொம்பு வடிவிலானதாகும்  எனவூம் குறித்த நோயாளி யின் குருதி(ழு-) வகயானதாகையால் அம்பாறை மாவட்ட வைத்திய  சாலைகளில்  இந்த வகை குருதியை பெறுவது கடினமாக இருந்த தாகவூம் அம்பாறை வைத்திய சாலையில் இருந்து உதவியாகப்  பெற்ற  ஒரு பைந்  இரத்தத்தை மாத்திரம் நம்பி வைத்துக்கொண்டு  இந்த சத்திர சிகிச்சை செய்யப்பட்டதாகவூம் கல்முனை அஷ்ரப் வைத்திய சாலை மயக்க    மருந்தேற்றல் நிபுணரின் பூரண ஒத்துழைப்புடன் இந்த சிறுநீரக  அறுவை  சத்திர சிகிச்சையை மே...

கல்முனை மாநகர முதல்வர் நன்றிப்பூக்கள்

Image
கல்முனை மாநகர சபை முதல்வராக நான் பதவி வகித்த காலப்பகுதியில் என்னோடு கைகோர்த்து ஒத்தாசை புரிந்த சகலருக்கும் விஷேடமாக என்னை முதல்வர் பதவியில் அமர்த்தி அழகுபார்த்த எனது ஆதரவாளர்களுக்கும் நன்றிப்பூக்களை சொரிகின்றேன் என முன்னாள் கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார். கல்முனை மாநகர முதல்வராக இரண்டு வருடங்கள் கடமையாற்றி இருக்கின்றேன். இக்காலப்பகுதியில் என்னோடு இணைந்து அர்ப்பணிப்புடன் கடமையாற்றிய கல்முனை மாநகர சபையின் ஆணையாளர், பொறியியலாளர், கணக்காளர், செயலாளர் மற்றும் ஏனைய அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள், அதேபோன்று மாநகர சபையின் உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். நாங்கள் எல்லோருமாகச் சேர்ந்து என்னால் முடியுமானவரை இம்மாநகர வாழ் மக்களுக்காக பல்வேறுபட்ட சேவைகளை ஆற்றி இருக்கின்றோம். இது உள்ளங்கை நெல்லிக் கனிபோல் தெட்டத் தெளிவான விடயமாகும். இன்று (08.11.2013) நான் உத்தியோக பூர்வமாக கல்முனை மாநகர முதல்வர் பதவியினை இராஜினாமா செய்திருக்கின்றேன். கட்சியினுடைய நலனுக்காகவும் மக்களுடைய நலனுக்காகவும் இந்த அதிரடி ம...