மக்கள் போரம் நிகழ்சியும் ஊடகவியலாளர்கள் கலந்துரையாடலும்


 முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையினால் 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி வெளியிடப்பட்ட பெண்கள் உரிமை மற்றும் பாதுகாப்பு தொடர்பான 1325 பிரேரணை தொடர்பான மக்கள் போரம் நிகழ்சியும் ஊடகவியலாளர்கள் கலந்துரையாடலும் நேற்று கல்முனை கிறிஸ்தா இல்லத்தில் நடைபெற்றது.
முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் பிரதான செயற்பாட்டாளர் தேசபந்து கலாநிதி ஜெசீமா இஸ்மாயீல் அவர்களின் பங்குபற்றலுடன் பிராந்திய இணைப்பாளர் எம்.எஸ்.ஜலீல் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இந்த மக்கள் போரம் ஒன்று கூடலில் அம்பாறை, மட்டக்களப்பு, புத்தளம் ஆகிய மாவட்டங்களிலிருந்து பிரதேச செயலாளர்கள், வைத்தியர்கள், சட்டத்தரணிகள், விரிவுரையாளர்கள், ஊடகவியலாளர்கள், சமயத் தலைவர்கள், குவாசி நீதிபதிகள், மத்தியஸ்த சபையினுடைய பிரதிநிதிகள், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், கிராமிய அபிவிருத்தி அமைப்புக்களின் தலைவர்கள் உட்பட பெருந்தொகையான அதிதிகள் கலந்த கொண்டனர்.

விஷேடமாக இந்த அரங்கில் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியினால் இதுகால வரைக்கும் ஆற்றப்பட்டு வந்த, வருகின்ற செயற்பாடுகள் பணிகள் தொடர்பாகவும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையினால் 2000ஆண்டு ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி வெளியிடப்பட்ட பெண்கள் உரிமை மற்றும் பாதுகாப்பு தொடர்பான 1325 பிரேரணை தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பணிகளும் அது தொடர்பான கானொளிகளும் காண்பிக்கப்பட்டன.




இந்த விடயம் தொடர்பாக பிரபல ஊடகவியலாளரும் ஆய்வாளரும் எழுத்தாளருமான ரவூப் செயின், அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர்களான அன்ஸார் மௌலான, எ.எல்.நாஸர்கனி மற்றும் மௌலவி பரிட், எம்.எஸ்.ஜலீல் ஆகியோர்களினால் ஊடகவியலாளர்களினால் குறித்த வேலைத்திட்டம் தொடர்பாக கேட்கப்பட்ட  ஒரு சில கேள்விகளுக்கு விளக்கங்களை வழங்கினர்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்