அகில இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் நடாத்தும் எப்.ஏ கிண்ணம்-2013
கல்முனை பிர்லியன்ட் கழகம் 2-1 என்ற கோல் அடிப்படையில் வெற்றி
யு.எம்.இஸ்ஹாக்
அகில இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் நடாத்தும் எப்.ஏ கிண்ணம்-2013 உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் தொடராக கல்முனை பிர்லியன்ட் விளையாட்டுக்கழகத்துக்குமமுல்லைத்தீவுசென்ஜூட்ஸவிளையாட்டுக்கழகத்துக்குமிடையிலான போட்டி நேற்று முன் தினம் ஞாயிற்றுக் கிழமை முல்லைத்தீவு பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.
இந்தப் போட்டியில் கல்முனை பிர்லியன்ட் கழகம் 2-1 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்று இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகியுள்ளது.
அதன் அடிப்படையில் இரண்டாம் சுற்றுப் போட்டி கல்முனை சந்தங்கேணி பொது விளையாட்டு மைதானத்தில் எதிர்வரும் 17ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமை நடை பெறவுள்ளது. இந்த இரண்டாவது சுற்றுப் போட்டியில் கல்முனை பிர்லியன் விளையாட்டுக் கழகமும் முல்லைத்தீவு உதய சூரியன் விளையாட்டுக்கழகமும் மோதவிருப்பதாக கல்முனை பிர்லியன்ட் விளையாட்டுக்கழகத்தின் பொதுச் செயலாளர் எஸ்.ரீ.பஸ்வக் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment