சனல்4 ஊடகவியலாளர் கெலும் மக்ரே இலங்கையை சென்றடைந்தார்! எதிராக கட்டுநாயக்கவில் ஆர்ப்பாட்டம்

சனல்4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் கெலும் மக்ரே இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

சற்று முன்னர் கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்துள்ளதாகத்
தெரிவிக்கப்படுகிறது.
பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
மக்ரே இலங்கைக்கு எதிராக சில காணொளிகளை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, மக்ரேவின் இலங்கை விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விமான நிலையத்திற்கு அருகாமையில் சிலர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனின் ஊடகக் குழுவில் மக்ரேவும் உள்ளடங்குகின்றார்.
சனல் 4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர்களுக்கு எதிராக கட்டுநாயக்கவில் ஆர்ப்பாட்டம்




சனல் 4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர்களான கெலும் மக்ரே, ஜொனத்தன் மில்லர் உட்பட அந்த நிறுவனத்தின் மூன்று ஊடகவியலாளர்களுக்கு எதிராக கட்டுநாயக்கவில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.
கெலும் மக்ரே உட்பட சனல் 4 தொலைக்காட்சியின் ஊடகக் குழு இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பொழுது விமான நிலையத்திற்கு வெளியில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேசிய ஐக்கியத்தை கட்டியெழுப்பும் ஒன்றியம் என்ற அமைப்பு இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
இலங்கைக்கு எதிராக செயற்பட்ட சனல் 4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர்களான ஜொனத்தன் மில்லர், கெலும் மெக்ரே ஆகியோருக்கு இலங்கையில் கால் வைக்க வீசா அனுமதியை வழங்கிய அரசுக்கும், அரச அதிகாரிகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியதாக ஒன்றியத்தின் உறுப்பினரான எச்.கே.டி. சந்திரசோம தெரிவித்தார்.
சனல் 4 தொலை்ககாட்சியின் இந்த ஊடகவியலாளர்கள் இலங்கையின் செல்வாக்கை இழக்க செய்துள்ளதுடன் விடுதலைப்புலிகள் செய்த அட்டூழியங்களை சுட்டிக்காட்ட தவறிவிட்டதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்
அதேவேளை சனல் 4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளரும் சர்ச்சைக்குரிய போர் தவிர்ப்பு வலயம் ஆவணப்படத்தின் இயக்குனருமான கெலும் மக்ரேவை விமான நிலையத்தில் சூழ்ந்து கொண்ட இலங்கை ஊடகங்கள், அவரது இலங்கைக்கு குற்றம் சுமத்தியதாக ஊடகவியலாளர் ஜொனத்தன் மில்லர் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்