“கிழக்கின் வெற்றிப் பாதை” திருமலையில் வெளியீட்டு விழா

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பு, நிர்மாணம், கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சு லேக்ஹவுஸ் நிறுவனத்துடன் இணைந்து வெளியிடும் உத்தியோகப் பத்திரிகையான “கிழக்கின் வெற்றிப் பாதை” பத்திரிகையின் வெளியீட்டு விழா
திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது.
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் எம். எஸ். உதுமா லெப்பையின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்கிரம, முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் ஆகியோர் இவ் விழாவில் பிரதம அதிதிகளாக கலந்து கொள்கின்றனர்.
இவ்விழாவில் கிழக்கு மாகாண சபை தவிசாளர் ஆரியபதி கலபதி, லேக்ஹவுஸ் நிறுவன ஆசிரியர் பீட பணிப்பாளர் சீலரட்ண செனரத், மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் விசேட அதிதிகளாக பங்குபற்றுகின்றனர்.
மஹிந்த சிந்தனை தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண வீதியபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணம், கிராமிய மின்சாரம், நீர்வழங்கல் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி வேலைத் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் இப்பத்திரிகை வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது.
சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் வெளியிடப்படும் இந்தப் பத்திரிகை தினகரன் மற்றும் தினமின பத்திரிகைகளில் இணைப்பு பத்திரிகையாக வெளியாகும். இதனை இன்றைய தினகரனில் பெற்றுக் கொள்ளலாம்.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்