இளவரசர் சாள்ஸ் பிறந்த தினத்தை இலங்கையில் கொண்டாட ஏற்பாடு-


பிரிட்டனின் முடிக்குரிய இளவரசர் சாள்ஸ் தமது துணைவியார் கெமிலா சீமாட்டியுடன் பொதுநல வாய நாடுகளின் அரசாங்கத் தலை வர்களின் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக இம்மாதம் 14ம் திகதி இலங்கை வரவுள்ளார்.
அன்றைய தினம் இளவரசர் சாள்ஸின் 65ஆவது பிறந்த தினமாகும். தனது 65ஆவது பிறந்த தினத்தை இளவரசர் சாள்ஸ் தனது பாரியாருடன் இலங்கையிலுள்ள தனது நண்பர்கள் மற்றும் அரசாங்கத் தலைவர்களுடன் கொண்டாடுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
இவ்வுச்சிமாநாட்டின் போது இளவரசர் சாள்ஸ் பல அரசாங்கத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவார். 87 வயதான பிரிட்டிஷ் எலிசபத் மகாராணியார் 22 ஆவது உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள இருந்த போதிலும் அவரது உடல் நிலை காரணமாக இம்முறை கலந்து கொள்ளாமல் தனது மகன் இளவரசர் சாள்ஸை அனுப்பி வைத்துள்ளார்.
எலிசபத் மகாராணியார் 1971ம் ஆண்டில் நடைபெற்ற முதலாவது உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் 1973 முதல் 2011 வரையிலான சகல உச்சி மாநாடுகளிலும் கலந்து கொண்டார்.
- See more at: http://www.athirady.com/tamil-news/news/284641.html#sthash.mnZAHvc7.dpuf

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்