நற்பிட்டிமுனை அஸ்ரப் விளையாட்டு மைதான அரங்கின் அவலம்
யு.எம்.இஸ்ஹாக்
இன்று அந்த பார்வையாளர் அரங்கு இஸ்லாத்துக்கு முரணான செயல்கள் இடம் பெறுகின்றது.விளையாட அமைத்த அரங்கு மது,சூதுக்கான மத்திய நிலையமாக மாறியுள்ளது. மைதானம் மழை நீரால் சேறும் சகதியுமாக மாடுகள் மேயும் மேய்ச்சல் தரையாக மாறியுள்ளது.
இவற்றுக்கெல்லாம் பொறுப்புக் கூறவேண்டிய கல்முனை மாநகர சபை நிருவாகம் பொறுப்பற்ற முறையில் நடந்து வருகின்றது. நற்பிட்டிமுனையில் இருந்து அந்த மக்கள் போட்ட வாக்குப் பிச்சையில் வேதாந்தம் பேசும் 03 மாநகர சபை உறுப்பினர்களே இந்த அநீதிக்கு நீங்கள் சொல்லும் பதில்தான் என்ன?
அதாவுல்லாவின் நிதி என்பதற்காக கவனம் எடுக்காமல் இருந்தால் நீங்கள் மூவரும் இந்த கிராமத்துக்கு செய்யும் பெரும் துரோகத் தனமாகும்.
Comments
Post a Comment