கல்முனை மாநகர புதிய முதல்வருக்கு வரவேற்பு

கல்முனை முதல்வராக புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதி செயலாளர் நாயகமும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான நிசாம் காரியப்பர் எதிர்வரும் திங்கட்கிழமை (18.11.2013) காலை 9 மணிக்கு கல்முனை மாநகர முதல்வர் அலுவலகத்தில் தனது கடமையை பொறுப் பேற்கவுள்ளார்.
இந்நிகழ்வில் புதிய முதல்வரை கல்முனைக்குடி முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாசலில் இருந்து மாநகர சபைவரை வரவேற்று அழைத்துச்செல்லப்படவுள்ளார். இவ்வரவேற்பினை பள்ளிவாசல்கள் சம்மேளனங்கள், வர்த்தக சமூகங்கள், விளையாட்டு கழகங்கள், பொது அமைப்புக்கள், தன்னார்வ தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இதே வேளை  எதிர்வரும் 24ஆம் திகதி  கல்முனை பிரதான வீதியில்  பெறவுள்ளது  இக்கூட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கலந்து கொள்ளவுள்ளார் . மறு தினம் 25ஆந்  திகதி கல்முனை மாநகர சபையின் ஐந்தாவது   முதல்வர் தலைமயிலான  முதலாவது அமர்வு இடம் பெறவுள்ளது. 

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்